Published:Updated:

பனிகாலே... ரிவாலே...

பனிகாலே... ரிவாலே...

பனிகாலே... ரிவாலே...

பனிகாலே... ரிவாலே...

Published:Updated:
பனிகாலே... ரிவாலே...

கார்களுக்கு ஃபாரீஸ் மோட்டார் ஷோ என்றால், பைக்குகளுக்கான உச்சபட்ச திருவிழா EICMA என்று அழைக்கப்படும் மிலன் மோட்டார் ஷோதான். இத்தாலியில் நடக்கும் இந்த மோட்டார் ஷோவில், ஐந்து லட்சம் பேர் வரை திரள்வார்கள். உலகின் லேட்டஸ்ட், கான்செப்ட் பைக்குகள் அனைத்தும் இங்குதான் அறிமுகப்படுத்தப்படும். 70-வது ஆண்டாக, கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை நடந்து முடிந்தது இந்த பைக் திருவிழா!

பனிகாலே... ரிவாலே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பனிகாலே... ரிவாலே...

டுகாட்டி பனிகாலே ஆர்

டுகாட்டி பனிகாலே, மிலன் மோட்டார் ஷோவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பனிகாலே 'ஆர்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த லேட்டஸ்ட் ஸ்பீடு மிஷின் அதிகபட்சமாக 195 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அழகிய எல்இடி விளக்குகள், ஏபிஎஸ் பிரேக்ஸ், சூப்பர் சஸ்பென்ஷன் என 2013-ம் ஆண்டுக்கான டுகாட்டி பனிகாலே ஆர், செம மாஸ்!

எம்வி அகுஸ்ட்டா ரிவாலே

எம்வி அகுஸ்ட்டா, தனது புத்தம் புதிய சூப்பர் ஸ்டைல் ரிவாலே பைக்கை மிலன் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்தது. மோட்டார் ஷோவிலேயே மிகவும் ஸ்டைலான பைக் என பார்வையாளர்கள் அதிகம் பேர் வாக்களித்த பைக்கும் இதுதான். 800 சிசி திறன் கொண்ட ரிவாலே 124 bhp  சக்திகொண்டது. 8 லட்சம் ரூபாய்க்கு அமெரிக்காவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது ரிவாலே.

பனிகாலே... ரிவாலே...

ராயல் என்ஃபீல்டு கஃபே ரேஸர்

மிலன் மோட்டார் ஷோவில் பங்கேற்ற ஒரே இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு மட்டுமே! 2010-ம் ஆண்டு இந்தியாவில் காட்சிக்கு வைத்த 'கஃபே ரேஸர்’ பைக்கை மிலனில் அறிமுகப் படுத்தியது ராயல் என்ஃபீல்டு. கிளாஸிக் ப்ளஸ் மாடர்ன் அதாவது பழசு, புதுசு என இரண்டு ட்ரெண்ட்டையும் கலந்து கஃபே ரேஸர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 500 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் இன்ஜின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அடுத்த ஆண்டு இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!