Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

அஜீஸ், சென்னை-20.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கிறேன். வீட்டில் இருந்து கல்லூரி 15 கி.மீ தூரம். தினமும் கல்லூரிக்குச் சென்று வரவும், நண்பர்களோடு சுற்றி வரவும் ஸ்டைலான பைக் வேண்டும். விலையைப் பற்றிக் கவலையில்லை. யமஹா FZ16, ஆர்-15, கேடிஎம்-200 - இந்த மூன்றில் எந்த பைக்கை வாங்கலாம். மூன்றில் என்னுடைய விருப்பம் கேடிஎம் 200. உங்கள் சாய்ஸ் எது?

நீங்கள் சென்னையில் வசிப்பவர் என்பதால், டிராஃபிக் நெருக்கடிகளில் சிக்க வேண்டி வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். கேடிஎம் 200 இன்ஜின், குறைந்த வேகத்தில் அதாவது டிராஃபிக் நெருக்கடிகளில் திக்கித் திணறி பயணிக்கும்போது, இன்ஜின் சூடு அதிகரிக்கிறது. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி நகருக்குள் தினமும் பயணிக்க மூன்று பைக்குகளில் சிறந்தது யமஹா FZ16 பைக்தான். ஸ்டைலான பைக் என்பதோடு பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என மற்ற விஷயங்களிலும் திருப்தி அளிக்கக் கூடிய பைக்!

ராம்மோகன், தஞ்சாவூர்.

மோட்டார் கிளினிக்

நான் ஆல்ட்டோ கே10 கார் வைத்திருக்கிறேன். இதில் பின் பக்கக் கதவுகளில் பவர் விண்டோஸ் பொருத்த வேண்டும். இதற்கு எவ்வளவு செலவாகும்?

மாருதி ஆல்ட்டோவில், பின் பக்க பவர் விண்டோஸ் பொருத்த, 6,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், பவர் விண்டோஸில் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே, தரமான பவர் விண்டோஸ் வாங்குவதோடு, அதை மாருதி டீலர் அல்லது அனுபவம் வாய்ந்த சர்வீஸ் சென்டரில் பொருத்துவது நல்லது. இல்லை என்றால், தேவை இல்லாமல் பவர் விண்டோஸ் விஷயத்தில் தொடர்ந்து பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கும்!

செல்வக்குமார், வத்தலக்குண்டு.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் வைத்திருக்கிறேன். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த பைக்கைப் பயன்படுத்துகிறேன். ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கும் மேல் ஓட்டி விட்டேன். இப்போது புதிதாக பைக் வாங்க வேண்டும். மீண்டும் ஸ்ப்ளெண்டர் பைக்கையே வாங்கலாம் என்றால் ஹீரோவும், ஹோண்டாவும் பிரிந்துவிட்டன. அதனால், குழப்பமாக இருக்கிறது?!

ஹீரோவும், ஹோண்டாவும் பிரிந்ததால் எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், ஸ்ப்ளெண்டர் பைக்கில் எந்த ராக்கெட் சயின்ஸும் இல்லை. இரண்டு நிறுவனங்களுமே இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றி இருப்பதால், தொழில்நுட்பப் பிரச்னைகள் எதுவும் வர வாய்ப்பு இல்லை. தொடர்ந்து ஹீரோ மீது உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், ஹோண்டா டிரீம்யுகா பைக்கை வாங்கலாம்!

வீரக்குமார், ஈரோடு.

மோட்டார் கிளினிக்

நான் ஸ்கோடா ரேபிட் கார் வாங்கலாமென இருக்கிறேன். ஆனால், ஸ்கோடா டீலர்களைப் பற்றியும், சர்வீஸ் சென்டர்களைப் பற்றியும் இன்டர்நெட்டில் கிழித்து எழுதியிருக்கிறார்கள். இதனால்,

மோட்டார் கிளினிக்

ஸ்கோடா காரை வாங்க பயமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

ஸ்கோடா டீலர்கள் குறித்து பிரச்னைகள் இருந்தது உண்மைதான். பார்ட்ஸ் மாற்றித் தருவதில் ஆரம்பித்து, சர்வீஸ் பிரச்னைகள் வரை பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இப்போது ஸ்கோடாவில் புத்தும் புது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கி றார்கள். அவர்களுடைய முதல் வேலையே சர்வீஸ் சென்டர் பிரச்னைகளைத் தீர்ப்பதுதான். மேலும் ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் குழுமத்தைச் சேர்ந்தது என்பதால், பிரச்னைகள் எழுந்தாலும், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, உடனடியாகத் தீர்க்கப்பட்டும் வருகின்றன. டீலர்களைவிட ஸ்கோடாவை நம்பலாம் என்பதால், பயம் வேண்டாம்!

மகேஸ்வரன், சென்னை.

மோட்டார் கிளினிக்

ஸ்கோடா ஃபேபியா 1.6, ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஹோண்டா பிரியோ - இந்த மூன்றில் எந்த கார் பெஸ்ட்? மைலேஜ், மெயின்டனன்ஸ், சிறப்பம்சங்கள் மூன்றிலும் சிறந்த காராக இருக்க வேண்டும் என்பதோடு, நகருக்குள் பயன்படுத்த சிறந்த காராக இருக்க வேண்டும்.

ஸ்கோடா ஃபேபியா நகருக்குள் பயணிப்பதற்கேற்ற காம்பேக்ட் கார். இன்ஜின் தரம், பில்டு குவாலிட்டி, குறிப்பாக கையாளுமையில் சிறந்த காராக இருக்கிறது ஃபேபியா. ஆனால், இதன் மைலேஜ் குறைவு என்பதோடு, ரீ-சேல் மதிப்பும் மிகவும் குறைவு.

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவைவிட நகருக்குள் பயன்படுத்த சிறந்த கார் ஹோண்டா பிரியோ. இட வசதி அதிகம். டிராஃபிக் நெருக்கடிகளில் எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்கலாம். ஹோண்டா

மோட்டார் கிளினிக்

என்பதால், தரம் சிறப்பாக இருக்கும். மெயின்டனன்ஸ் பிரச்னைகளும் இருக்காது!

மகேந்திரன், திருநெல்வேலி.

மோட்டார் கிளினிக்

எஸ்யூவி கார் வாங்க வேண்டும். என்னுடைய சாய்ஸ் மஹிந்திரா XUV 500. விலை குறைவாக இருப்பதால், ரெனோ டஸ்ட்டர் மீதும் ஒரு கண் இருக்கிறது. இரண்டில் எந்த காரை வாங்கலாம்?

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில், ஏழு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும் என்பது பெரிய ப்ளஸ். தோற்றத்திலும் பெரிய கார் என்கிற ஃபீல் கொடுப்பதோடு, அதிக சிறப்பம்சங்களும் உண்டு. ஆனால், கொடுக்கிற காசுக்கு ஏற்ற வசதிகளையும், சிறந்த பில்டு குவாலிட்டியையும், தரத்தையும் கொண்ட கார் ரெனோ டஸ்ட்டர். இன்ஜின் தரத்திலும் ரெனோவே சிறந்தது!

மோட்டார் கிளினிக்

சங்கரேஸ்வரன், கோவில்பட்டி.

மோட்டார் கிளினிக்

நான் பஜாஜ் பல்ஸர் 200 பைக் வாங்கலாம் என நினைக்கிறேன். ஆனால், என் நண்பர்கள் புதிய பல்ஸரைவிட பழைய பல்ஸர் 220 பைக் சிறப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எதை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது.

பஜாஜ் பல்ஸர் 200, இதற்கு முன்பு வெளிவந்த அனைத்து பல்ஸர் பைக்குகளைவிடவும் தொழில்நுட்பத்திலும், பெர்ஃபாமென்ஸிலும் சிறந்த பைக். அதனால், குழப்பம் இல்லாமல் புதிய பல்ஸர் 200 பைக்கைத் தேர்ந்தெடுங்கள்!