Published:Updated:

அதுக்கு இது தாங்குமா?

அதுக்கு இது தாங்குமா?

அதுக்கு இது தாங்குமா?

அதுக்கு இது தாங்குமா?

Published:Updated:
 ##~##

ம் நாட்டின் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அதிரடியாகக் களம் இறங்கி இருக்கிறது யமஹா ரே! வேகத்தை விரும்பும் ஆண்களோடு மட்டுமே அடையாளம் காணப்பட்டு வந்த யமஹா, இளம் பெண்களையும் தன் பக்கம் இழுக்கும் எண்ணத்தோடு 'ரே’வைக் களம் இறக்கி இருக்கிறது! இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும்? சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 'யமஹா ரே’யைக் கொண்டு போய் நிறுத்திய அதே வேகத்தில், 'யமஹா ரே’வை இளைஞர்கள் பட்டாளம் சூழ்ந்து கொண்டது.  'யமஹா ரே’வை முதலில் யார் ஓட்டுவது என ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து இழுக்க... 'லேடீஸ் ஃபர்ஸ்ட்’ என ஸ்வேதாவின் கையில் ஸ்கூட்டரை ஒப்படைத்தோம். 

மின்னல் வேகத்தில் கிளம்பினார் ஸ்வேதா. ஒரு பெரிய ரவுண்ட் அடித்துவிட்டு வந்து தனது கருத்துக்களைச் சொன்னார். ''என்கிட்ட ஸ்கூட்டி இருக்கு. யமஹா ரே அதைவிட சூப்பரா இருக்கு. சீட்டுக்குக் கீழே திங்ஸ் வைக்க நிறைய இடம் இருக்கு. இதுக்குள்ள காஸ்மெட்டிக்ஸ் ஹேண்ட் பேக், லஞ்ச் பேக்னு நிறைய பொருட்களை வைக்கலாம். டிரைவ் பண்ண ரொம்ப ஈஸியா இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுக்கு இது தாங்குமா?

இதுல ஸ்கூட்டி மாதிரி வெரைட்டியான கலர்ஸ் வந்தா, பொண்ணுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்கூட்டர் அவ்வளவா வெயிட்டாத் தெரியலை. அதனால, என்னை மாதிரி ஸ்லிம் கேர்ள்ஸுக்கு டபுள் ஓகே!'' என்றார்.

''ஓகே, ஓகே'' என ஸ்வேதாவைக் கிண்டல் செய்தபடி, ரேவின் சீட்டில் உட்கார்ந்தார் ரகுவரன். சைடு ஸ்டாண்ட் எடுக்கத் தடுமாறியவரை, சுற்றி இருந்தவர்கள் நக்கலடிக்க, ''பைக் ஞாபகத்துல ட்ரை பண்ணிட்டேன். இப்பப் பாருங்க...'' என ஜிவ்வெனப் பறந்தவர் சிறிது நேரம் கழித்து வந்தார். 'சீட்டோட உயரம் எனக்குச் சரியா இருக்கு. டிரைவ் செய்ய ரொம்ப ஸ்மூத்தாவும், பில்லியன் ரைடருக்கு சீட்டோட அகலம் சரியாவும் இருக்கும். ஆனா, ஸ்கூட்டரோட உயரம் ரொம்பக் குறைவா இருக்கு. மேடு பள்ளத்துல ஏறி இறங்கும்போது, இடிபடும்னு நெனைக்கிறேன். நம்ம சென்னை ரோட்டுல இருக்கிற ஸ்பீடு பிரேக்கர்கள்ல ஏறி இறங்கினாத்தான் தெரியும்!'' என்றார் ரகுவரன்.

அடுத்து ஓட்டியவர் தமிழ். ''கொஞ்ச தூரம் மட்டும் போயிட்டு வாங்க!'' என்று நாம் சொல்லி அனுப்ப, வேகமாகச் சென்றவரை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. உடனே ஸ்வேதா, 'கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஒரே பனி மூட்டமா இருக்கு... இப்படித்தான் பசங்க ஓசி வண்டி கெடச்சா அப்படியே எஸ்கேப் ஆயிடுறாங்க...'' என்று சொல்லி முடிப்பதற்குள், புயல் போல வந்து நின்றார் தமிழ்.

அதுக்கு இது தாங்குமா?

''நான் யமஹா பைக் பிரியன். யமஹா கம்பெனியில இருந்து எந்த வாகனம் வந்தாலும் சரி, கண்ணை மூடிட்டு வாங்கலாம். அந்த அளவுக்கு நம்பகத்தன்மை உள்ள கம்பெனி. நீங்க இந்த ஸ்கூட்டர் பெயரைச் சொன்ன உடனே, ஆண்/பெண் ரெண்டு பேரும் ஹேண்டில் பண்ற மாதிரி இருக்கும்னு கேள்விப்பட்டது ஞாபகம் வந்தது. ஆனா, பெரும்பாலும் லேடீஸ் ஓட்டுறதுக்குத் தகுந்த மாதிரிதான் டிசைன் செய்து இருப்பாங்கன்னு நெனைச்சேன். ஆனா, ஆண்களும் விரும்புகிற மாதிரிதான் டிசைன் இருக்கு. சிட்டிக்கு உள்ள ஓட்டுறதுக்கும் ரொம்ப வசதியா இருக்கு. ஆக்ஸிலரேட்டரை என்ன முறுக்கு முறுக்கினாலும், யமஹா இன்ஜினுக்கு இருக்கிற ஸ்பெஷாலிட்டியான ஸ்மூத்னஸ் இருக்குது. ஆனா, ஹோண்டா ஆக்டிவா ஓட்டும்போது இருக்கிற மேன்லினஸ் மிஸ்ஸிங்!'' என்றார்.

அடுத்து ரவுண்ட் அடித்தவர் சங்கீதா. 'எஸ்’ போடுவது, 'யு’ டர்ன் எடுப்பது என விதவிதமாக ஓட்டிப் பார்த்தார். வளைவுகளில் பேலன்ஸ் செய்யக் கொஞ்சம் தடுமாறினாலும், சமாளித்தவர் கடகடவென த்ரில்லிங் குறையாமல் பேசினார்.

''வாவ்...! டிரைவிங் செய்ய சூப்பரா இருக்கு! ஸ்கூட்டரோட உயரம் எனக்கு கரெக்டாவும் வசதியாவும் இருக்கு. என்னைவிட உயரமா இருக்குறவங்க உட்கார்ந்தாக்கூட முட்டி இடிக்காது. சீட்டோட உயரத்தை மட்டும் இன்னும் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம். ஆண்களை மனதில் வைத்து அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் லைட் டிசைன் செய்திருக்காங்க. எந்த ஸ்கூட்டர்லேயும் இல்லாத மாதிரியான அழகான, யுனிக் டிசைன் அருமையா இருக்கு. யமஹா ரேவோட விலை 53,000 ரூபாய். இது ஹோண்டா ஆக்டிவாவைவிட இரண்டாயிரம் ரூபாய் குறைவு. ஆனா, இன்ஜின் அதைவிடக் கொஞ்சம் பெரிசு!'' என்று ஒரு கம்ப்ளீட் டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தார்.

அதுக்கு இது தாங்குமா?

அடுத்து தயாரான தேவி, ''நான் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா டூவீலர் ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஒரு ரவுண்ட் ஓட்டுனாலே இந்த ஸ்கூட்டரோட ஜாதகம் முழுக்கச் சொல்லிடுவேன்!'' என்று புறப்பட்டார். திரும்பி வந்த தேவியிடம், ''நீங்க அஞ்சு வருஷம் இல்ல... பதினஞ்சு வருஷமா ஓட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு உங்க ஸ்பீடைப் பார்த்தே தெரிஞ்சுகிட்டோம். இறங்கி வந்து உங்களோட அபிப்ராயத்தைச் சொல்லுங்க மேடம்!'' என்று கலாய்த்தார் ஜனனி.

''என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கமே எந்தப் பொருளா இருந்தாலும் சரி, முதல்ல என்னோட கண்ணுக்குத் தெரியுறது மைனஸ்தான். யமஹா ரே ஸ்கூட்டரோட பாடி, மெட்டல் கிடையாது. ஃபைபர் பாடி. நம்ம சிட்டி டிராஃபிக்குல இடியும் உரசலும் சகஜம்! அதுக்கு இது தாங்குமான்னு தெரியலை!

ஸ்கூட்டியில முன் பக்கம் ஒரு கேஸ் சிலிண்டர் வைக்கிற அளவுக்கு இடம் இருக்கும். ஆனா, இதுல வைக்க முடியாது. அதே மாதிரி, கொஞ்சம் வேகமாப் போகும்போது வெயிட்டே இல்லாத மாதிரி ஃபீல் வர்றதால, கொஞ்சம் பயமாவும் இருக்கு. ஆனா, பிக்-அப் சூப்பர். ஸ்டைல் ரொம்பவே அட்ராக்டிவா இருக்கு!'' என்றார்.

மொத்தக் கூட்டமும் யமஹா ரேவைச் சுற்றி ஆளாளுக்கு கமென்ட் அடித்துக்கொண்டு இருந்த போது, 'என்ன கூட்டம்?’ என எட்டிப் பார்த்த வட கிழக்கு மாநிலப் பெண்கள் மூவர், ஸ்கூட்டரைப் பார்த்ததும் 'வெரி நைஸ் டிசைன்’ என்றவாறு சுற்றிப் பார்த்தனர்.

''யூ வான்ட் டு டிரைவ்?'' என ஸ்வேதா அவர்களிடம் கேட்க... சிரித்தபடி, ''ஸாரி ஐ ஹேவ் நோ லைசென்ஸ்'' என்றனர். உடனே ஸ்வேதாவும் தேவியும், ''டபுள்ஸ் அடுச்சுப் பார்க்கப் போறோம்'' என்றபடி ரேவைக் கதறவைத்துப் புறப்பட்டனர்!