Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - PULSAR 200 NS

ரீடர்ஸ் ரிவியூ

ரீடர்ஸ் ரிவியூ - PULSAR 200 NS

ரீடர்ஸ் ரிவியூ

Published:Updated:

ல்ஸர் பைக்குகளைப் பார்த்துப் பார்த்துதான் அதன் மீது ஆர்வமே வந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்வரை டிவிஎஸ் 'ஸ்டார் சிட்டி’ பைக்தான் வைத்திருந்தேன். புதிய பைக் வாங்கித் தருவதாக வீட்டில் சொன்னதுமே, பல்ஸர்தான் வாங்க வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில், என் நண்பர்கள் வட்டாரத்தில் ஒரே பல்ஸர் மயம்! பல்ஸர் வரிசை பைக்குகளில் எனக்கு மிகவும் பிடித்தது பல்ஸர் 220. இதைத்தான் வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தபோது, 'பல்ஸர்-200 என்.எஸ் விளம்பரம் பார்த்தேன். செம ஸ்டைலிஷ் ஆக இருந்ததால், என் முடிவை மாற்றிக்கொண்டேன்.

ரீடர்ஸ் ரிவியூ - PULSAR 200 NS

ஷோ ரூம் அனுபவம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரீடர்ஸ் ரிவியூ - PULSAR 200 NS

மதுரை, அண்ணா நகரில் புதிதாகத் திறக்கப்பட்டு இருந்த சிருஷ்டி பஜாஜ் ஷோ ரூமில், புதிய பைக் அறிமுக விழா நடப்பதாக விளம்பரம் பார்த்தேன். பைக் பற்றி எல்லாத் தகவல்களையும் திரட்டிக் கொண்டு ஷோ ரூமுக்குக் சென்றதால், சேல்ஸ்மேனிடம் அதிகமாக கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மூன்று கலர்களில் பல்ஸர் 200 என்எஸ் இருப்பதாகச் சொன்னார்கள். கறுப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரண்டுமே பார்க்க பல்ஸர்-135 மாதிரியே இருந்தன. பல்ஸர் 200 என்எஸ் பைக்கின் டீடெயில் எதுவுமே அந்த இரண்டு கலரிலும் பளிச் என்று தெரியவில்லை. ஆனால், 'மஸ்டர்ட் எல்லோ’ கலர், ஸ்டைலிஷாகவும் புதிதாகவும் இருந்து. அதையே புக் செய்தேன். ஒரு வாரம் கழித்துதான் பைக் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், நான் தினமும் ஷோ ரூமுக்குச் சென்று நின்றுவிடுவேன். நான் கொடுத்த டார்ச்சரில் நான்கு நாட்களில் பைக் கைக்கு வந்துவிட்டது!

பிடித்தது

எந்த பல்ஸசரிலும் இல்லாத பவர்ஃபுல் ஹெட் லைட்ஸ் இதில் இருக்கிறது. ஸ்டைலிஷான இதன் லுக்தான் பெரிய ப்ளஸ். ஹேண்ட்லிங் செம ஸ்மூத்! இன்ஜின் சத்தம் இதில் கொஞ்சம்தான் குறைவு. ஏபிஎஸ் இதில் இல்லை என்றாலும், பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், முன் பிரேக்கை மட்டும் பயன்படுத்தினால், கவனமாக இல்லையென்றால் தடுமாறி விடுவோம். பைக்கின் ஸ்போர்ட்டி டிசைன், ஸ்டன்ட் செய்வதற்கு வசதியாக இருக்கிறது. ஸ்டாப்பிங், வீலிங், 360 டிகிரி என ஸ்டன்ட் சுலபமாகச் செய்ய முடிகிறது. சீட்டிங் பொசிஷன் சிறப்பாக இருப்பதால், லாங் டிரைவ் செல்ல அலுப்பில்லாமல் இருக்கிறது.

பிடிக்காதது

பல்ஸர் 200 என்எஸ் மற்ற பல்ஸர்களைவிட கொஞ்சம் அதிகமாக நல்ல பெர்ஃபாமென்ஸ் தருகிறது. ஆறு கியர்கள் என்றாலும், ஆறாவது கியரின் எஃபெக்ட் தெரியவே இல்லை. பைக்கின் ஹேண்டில் பார் சிறிதாக இருப்பதால், சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளது. அடுத்ததாக, பைக்கின் உயரம் மிக அதிகம். அதேபோல், பின் பக்க டயரில் கிரிப் மிகவும் குறைவாக இருக்கிறது. பின் சீட்டின் அகலத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்து இருந்தால், வசதியாக இருந்திருக்கும். முதல் இரண்டு கியர்களை மாற்றும்போது வைப்ரேஷன் வருகிறது. அதேபோல், நீண்ட தூரப் பயணங்களின்போது இன்ஜினின் சூடு கால்களைத் தாக்குகிறது. எனக்கு முக்கியமான குறையாகப் படுவது, பைக்கின் சின்னச் சின்ன பாகங்களின் தரம்தான். லேசாக டிவைடரில் உரசியதற்கே ஃபுட் ரெஸ்ட் விழுந்துவிட்டது!

சர்வீஸ்

முதல் சர்வீஸ் அனுபவம் மகிழ்ச்சியாக இல்லை. அதில், வாட்டர் சர்வீஸ்கூட சரியாகச் செய்யவில்லை. இரண்டாவது சர்வீஸுக்கு விட்டுவிட்டு, டெலிவரி எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது, ரேடியேட்டரில் லீக் ஆனது. மீண்டும் சர்வீஸ் சென்டருக்கு பைக்கை எடுத்துச் சென்று காட்டியதும், 'ரேடியேட்டர் பம்ப் பழுதாகி இருக்கிறது. ஸ்பேர் இல்லை, வந்ததும் மாற்றித் தருகிறோம்’ எனச் சொல்லிவிட்டு, அதையே சரி செய்து கொடுத்தார்கள்.  

மைலேஜ்

சிட்டிக்குள் லிட்டருக்கு 35 கி.மீ தருகிறது. இதுவே நெடுஞ்சாலையில் ஒரே சீராக ஓட்டினால், லிட்டருக்கு 45 - 50 கிமீ வரை மைலேஜ் கிடைக்கிறது!

ரீடர்ஸ் ரிவியூ - PULSAR 200 NS

மைலேஜ், ஸ்போர்ட்டி லுக், நல்ல பெர்ஃபாமென்ஸ் - இதெல்லாம்தான் உங்கள் தேவை என்றால், பல்ஸர் 200 என்எஸ் நல்ல சாய்ஸ். ஸ்போர்ட்ஸ் பைக் காதலர்களுக்கும் ஏற்ற பைக்! சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் கொடுக்கும் காசுக்கு நம்பி வாங்கலாம் பல்ஸர் 200 என்எஸ்!

தொகுப்பு: ச.பா.முத்துகுமார்

ரீடர்ஸ் ரிவியூ - PULSAR 200 NS