Published:Updated:

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!

Published:Updated:
 ##~##

'சென்னையில் ஒருவர் ரீ-சார்ஜ் செய்யத் தேவையே இல்லாத பேட்டரி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார். அதை வைத்து, ஒரு இரு சக்கர வாகனத்தையும் தயார் செய்திருக்கிறார்’ என்ற செய்தி வியப்பில் ஆழ்த்தியது. இதை உருவாக்கிய ராஜேந்திரபாபுவை அவரது வீட்டில் சந்தித்தோம். அங்கு நின்றிருந்த பைக்கைப் பார்த்ததும் அசந்துவிட்டோம். அவரிடம் பேசியபோது... 

''படித்தது குறைவுதான் என்றாலும், அனுபவம் அதிகம். இதுவரை நான் உருவாக்கியவை எல்லாமே என் அனுபவ அறிவில் உருவானவை. சின்ன வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சினிமா தியேட்டரில் ஃபிலிம் சுருள் சுற்றித் தரும் வேலையில் இருந்தேன். கொஞ்ச நாட்களிலேயே உதவி ஆப்ரேட்டராக மாறி, புரொஜெக்டர் டெக்னாலஜியை அறிந்துகொண்டு, புதிய புரொஜெக்டரை நானே தயாரித்தேன். அப்போது எனக்கு வயது 18. நான் தயாரித்த புரொஜெக்டர்கள் இன்றும் ஆந்திராவில் எட்டு தியேட்டர்களிலும், சென்னையில் சில தியேட்டர்களிலும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முழு மூச்சாக இறங்கி இருக்கிறேன்'' என்ற பாபுவிடம் சில கேள்விகளை வீசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!

''உங்கள் தொழில்நுட்பத்தில் புதியதாக என்ன இருக்கிறது? பேட்டரி மூலம் வாகனங்களை இயக்குவது ஏற்கெனவே இருக்கும் விஷயம் தானே?''

''பெட்ரோல் மூலம் இயங்கும் காரில், பெட்ரோல் தீரும் வரை அது அளிக்கும் சக்தி குறையாது. ஆனால், பேட்டரியால் இயங்கும் வாகனத்தில் அப்படி இல்லை. பேட்டரியில் ஐம்பது சதவிகித சார்ஜ் குறைந்தவுடன் டார்க் குறைந்துவிடும். இந்த இடத்தில்தான் என் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. என்னுடைய தொழில்நுட்பத்தின்படி, உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் தீரும் வரை அதன் முழு சக்தியை அளிக்கும்.''

''அவ்வளவுதானா?''

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!

''இல்லை. உங்கள் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவைப்படும் நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள்தான். ஒருமுறை சார்ஜ் செய்தால், 175 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணிக்கலாம். மணிக்கு 100 கி.மீ வேகத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டலாம். இது தரும் சக்தி கிட்டத்தட்ட 18 தீலீஜீ. இந்த சக்தி, தற்போது மார்க்கெட்டில் இருக்கும் 100 - 150 சிசி பைக்குகளைவிட அதிகம். நான் உருவாக்கியுள்ள மாதிரி பைக்கில் கிடைத்த தீர்வுகள் இவை. என்னுடைய வேறு சில காப்புரிமைகள் வந்ததும் அந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், மணிக்கு 45 கி.மீ மேல் செல்லும்போது, பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், இந்த பேட்டரிகளின் ஆயுள் காலம் மற்ற பேட்டரிகளைவிட மிக மிக அதிகம்!''

''காப்புரிமை பெற்றுவிட்டீர்களா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு இருப்பார்களே?''

''இதன் முழு தொழில்நுட்பத்துக்கான எட்டு காப்புரிமைகளைப் பெற்றுவிட்டேன். மீதம் உள்ளவை கைக்கு வந்ததும் என் தொழில்நுட்பம் முழுமை அடையும். சில காப்புரிமைகளை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. 116 நாடுகளில் எனது தொழில்நுட்பம் ஏற்கப்பட்டு இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் என் தொழில்நுட்பத்தை விலை பேசின. ஆனால், நான் பிறந்து வளர்ந்த என் நாட்டுக்காக என் தொழில்நுட்பத்தைக் கொடுக்கவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைவிட, இதை நம் அரசிடம் ஏற்க வைப்பதுதான் பெரிய வேலையாகத் தெரிகிறது!''

''ஏன், அரசு இதில் ஆர்வமாக இல்லையா?''

''ஆர்வமா? நான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. நம் நாட்டில் எப்போதும் வெள்ளைக்காரன் கண்டுபிடிப்புதான் பெரிதாகத் தெரியும்'' என்று குமுறுகிறார் ராஜேந்திரபாபு.

உலகமே மாற்று எரிபொருளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், அரசு இவருடைய கண்டுபிடிப்பை பரிசீலிக்கக் கூட முன் வராமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் நிஸான் லீஃப், செவர்லே வோல்ட் போன்ற எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியே இருக்கும் நாம், அதற்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, என்ன செய்யப் போகிறோம்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பி இருக்கப் போகிறோம்? ராஜேந்திரபாபுவின் கண்டுபிடிப்பை பரிசீலித்து, அது தகுதி வாய்ந்ததாக இருப்பின் ஊக்குவிக்கும் பொறுப்பு, நம் கையில்தான் இருக்கிறது?!

5 நிமிட சார்ஜ் 175 கி.மீ பயணம்!