Published:Updated:

பயணங்களும்... பாடங்களும்!

பயணங்களும்... பாடங்களும்!

பயணங்களும்... பாடங்களும்!

பயணங்களும்... பாடங்களும்!

Published:Updated:
பயணங்களும்... பாடங்களும்!
 ##~##

நான் அஜய் உலகநாதன், கோவையில் உள்ள ஒரு தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த அக்டோபர் மாதம் மூணாறு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை அதிகாலையில் எனது மாருதி ஸ்விஃப்ட் காரில் நண்பர்களுடன் புறப்பட்டேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை கடந்து மூணாறு செல்லும் செக்போஸ்ட்டை காலை 5.30 மணிக்கு அடைந்தோம். உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் மலைச் சாலை மிகவும் குறுகலானது; ஆபத்தானதும்கூட! அதுவும் பனி படர்ந்த அதிகாலை நேரம் என்பதால், மிகுந்த கவனத்துடன் சென்றேன். வானிலை, எப்போது வேண்டுமானாலும் கனமழை வரலாம் என அச்சுறுத்துவதுபோல இருந்தது. செக்போஸ்ட்டில் இருந்து சுமார் 12 கி.மீ தூரம் கடந்து இருப்போம். பனித் தூறலாக பெய்துகொண்டு இருந்த மழை, சிறிது நேரத்தில்  வலுக்க ஆரம்பித்ததால், தொடர்ந்து காரோட்டுவது சவாலாக இருந்தது. அதனால், காரை சாலையின் ஓரமாக நிறுத்தி எச்சரிக்கை விளக்குகளை ஆன் செய்தேன். காரை நிறுத்திய இடத்தில், 'யானைகள் கடக்கும் இடம். கவனமாகச் செல்லவும்’ என வனத் துறையினரின் வைத்திருந்த எச்சரிக்கைப் பலகை பளிச்சிட்டது.

பயணங்களும்... பாடங்களும்!

கொஞ்சம் கலக்கத்துடனே காருக்குள் அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்தில் மழையும் நின்றது. அப்போது நண்பர்கள், 'போட்டோ எடுத்துக்கலாம்’ என இறங்கினர். சிறிது நேரத்துக்குப் பிறகு, நானும் கேமராவை எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினேன். அப்போது எனக்கு எதிர் திசையில் இருந்து சில கார்கள், ஹார்ன் அடித்தவாறே வேகமாகக் கடந்து சென்றன. அப்போது, சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஓர் ஒற்றை யானை பிளிறியவாறு சாலைக்கு வந்தது. திகைத்துப் போன நான், என்ன செய்யலாம் என நண்பர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தால், அவர்கள் வெகுதூரத்தில் இருந்தனர். பதற்றத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல், மீண்டும் காருக்குள் உட்கார்ந்துவிட்டேன். திடீரென அந்த யானை காரை நோக்கி ஓடி வந்தது. நான் சட்டென காரின் ஹெட் லைட்டை ஆன் செய்தேன். உடனே நின்ற யானை, பின் நோக்கிச் சென்று காட்டில் மறைந்தது. உடனே, எனது மொபைல் போனை எடுத்து நண்பர்களுக்குத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், அங்கு சிக்னல் இல்லை. அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த அந்த சில நொடிகளில், காரின் பக்கவாட்டில் இருந்து பயங்கர ஆக்ரோஷத்துடன் வந்த அந்த யானை, காரின் முன் பக்கக் கண்ணாடியை தும்பிக்கையால் தாக்கியது. நான் உடனே காரின் ஹேண்ட் பிரேக்கைப் போட்டுவிட்டு, நான் உட்கார்ந்திருந்த டிரைவர் சீட்டை பின் நோக்கித் தள்ளி, சாய்த்துப் படுத்துக் கொண்டேன். கோபம் குறையாமல் மீண்டும் பிளிறியவாறு தந்தத்தால் பானெட்டைக் குத்தி கிழித்தது யானை. பயத்தில் அப்படியே சத்தம் போடாமல் காருக்குள்ளேயே முடங்கிக் கொண்டேன். தொடர்ந்து இரண்டு முறை யானை காரை பலமாக உலுக்கியது. யானை காரைத் தாக்குவதைத் தூரத்தில் இருந்து பார்த்த நண்பர்கள், கத்திக் கூச்சல் போட்டனர். யானை மீண்டும் அதிகச் சத்தத்துடன் பிளிறியவாறு காட்டுக்குள் சென்று மறைந்தது.

எனது நண்பர்கள் ஓடி வந்து காரின் கதவை திறந்தபோது, நான் வெளிறிய முகத்துடன் வெளியே வந்தேன். யானையால் உடைக்கப்பட்ட காரின் முன் பக்க கண்ணாடியின் துகள்கள் காரின் உள்ளே சிதறிக் கிடந்தன. சில கண்ணாடித் துண்டுகள் என் காலில் பட்டு சிறு காயங்களை ஏற்படுத்தி இருந்தது. நல்லவேளையாக பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பித்தேன். காரின் முன் பகுதி முழுவதும் பலத்த சேதமாகிவிட்டது. ஆனால், இன்ஜினில் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் மூணாறு பயணத்தை யானையின் கோரத் தாண்டவத்தால், பாதி வழியிலேயே முடித்துக் கொண்டு, மீண்டும் கோவைக்கு அதிர்ச்சி குறையாமல் வந்து சேர்ந்தோம்!

- அஜய் உலகநாதன், கோவை.

பயணங்களும்... பாடங்களும்!

 என்னுடை சிறு கவனக் குறைவால் ஏற்பட்ட பெரிய பாதிப்பை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், இது கார் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்கிறேன். ஃபோர்டு ஃபியஸ்டா கார் வைத்திருக்கிறேன். வெளியூர்ப் பயணம் என்றால், இந்த காரில்தான் செல்வேன். கார் பராமரிப்பைப் பொறுத்தவரை நான் பக்கா! அன்றும் அப்படித்தான்... மதுரையில் ஒரு வேலை நிமித்தமாக நண்பர்கள் சகிதம் அவரசரமாகப் புறப்பட்டேன். அந்த அவசரத்தில் காரில் வழக்கமாக கவனிக்க வேண்டிய விஷயங்களை அன்று கவனிக்கத் தவறிவிட்டேன். தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சுமார் 100 கி.மீ வேகத்துக்கும் மேல் சென்று கொண்டு இருந்தேன். திடீரென்று காரின் இன்ஜின் ஆஃப் ஆகிவிட்டது. நான் சாமர்த்தியமாக காரை சாலையின் ஓரத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தினேன். ஏன் திடீரென இன்ஜின் ஆஃப் ஆகிவிட்டது என்பதற்கான காரணம் புரியவில்லை. மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தேன். இன்ஜின் ஸ்டார் ஆவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே, காரைவிட்டு இறங்கி பானெட்டைத் திறந்தால்... அனலாகக் கொதித்தது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென இன்ஜினில் இருந்து புகை கிளம்பியது. கூலன்ட் டேங்க் உருகும் நிலையில் இருப்பதைக் கவனித்த பிறகுதான் என் தவறு புரிந்தது. கூலன்ட் டேங்க்கில் கொஞ்சம்கூட தண்ணீர் இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் உதவிக்காக மோட்டார் விகடனைத் தொடர்பு கொண்டு, காரின் நிலைமையை விளக்கினேன். 'கூலன்ட் இல்லாமல் ஓட்டி இருந்தால், இன்ஜின் அதிக வெப்பமடைந்து சீஸ் ஆகி இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, காரை ஸ்டார்ட் செய்வதற்கு முயற்சிக்க வேண்டாம். அருகில் இருக்கும் வொர்க் ஷாப் உதவியை நாடுங்கள்’ என்றனர். அதேபோல், 10 கி.மீ தூரத்தில் இருந்த வொர்க் ஷாப்பில் இருந்து மெக்கானிக்கை வரவழைத்துச் சோதித்துப் பார்க்கச் சொன்னேன். அவர்களும், 'இன்ஜின் சீஸ் ஆகிவிட்டது. காரைக் கட்டி இழுத்துக்கொண்டுதான் ஒர்க் ஷாப் செல்ல வேண்டும்’ என்று கூறினார்கள். நானும் வேறு வழியில்லாமல் மீண்டும் தூத்துக்குடிக்கு காரைக் கட்டி இழுத்துச் சென்றேன். ஐம்பது ரூபாய் மதிப்புள்ள கூலன்ட்டைக் கவனிக்கத் தவறியதால், இன்றைக்கு எழுபதாயிரம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டு வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறேன். சரி, கூலன்ட் குறைவாக இருந்தால், வெப்பம் அதிகரிக்கும்போது காரின் டேஷ் போர்டில் இருக்கும் டெம்ப்ரேச்சர் மீட்டர் காட்டிக் கொடுக்குமே? நான் அதையும் கவனிக்காமல் இருந்ததுதான் என்னுடைய பெரிய சோகம்!  

- இசக்கிமுத்து, தூத்துக்குடி

பயணங்களும்... பாடங்களும்!