Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

இந்தியாவில் க்யூ-7 கார்களின் தயாரிப்பைத் துவங்கியது ஆடி!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி, க்யூ-7 காரை வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்துவந்தது. இதனால், க்யூ-7 காரின் விலையும் அதிகமாக இருந்தது. இப்போது இந்தியாவில் அவுரங்காபாத்தில் உள்ள தொழிற்சாலையில் ஆடி க்யூ-7 காரின் தயாரிப்பு துவங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1,000 க்யூ-7 கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய இருக்கிறது ஆடி. இந்தியாவில் தயாரிப்பு துவங்கி இருப்பதால், வெயிட்டிங் பீரியட் குறையும் என்கிறது ஆடி. ஆனால், விலைக் குறைப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை!

வருகிறது ஹீரோவின் 250சிசி பைக்!

மோட்டார் நியூஸ்

250சிசி திறன்கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கைத் தயாரித்து வருகிறது ஹீரோ மோட்டோ கார்ப். அமெரிக்காவின் எரிக் ப்யூல் ரேஸிங் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கும் ஹீரோ, இந்த நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய 250 சிசி பைக்கைத் தயாரிக்கிறது. பெர்ஃபாமென்ஸிலும், ஸ்டைலிலும் இது அடுத்த தலைமுறைக்கான பைக்காக இருக்கும் என்கிறது ஹீரோ. புதிய பைக் 2014 டெல்லி ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது!

மீண்டும் வருகிறது ரெனோ லோகன்!

மோட்டார் நியூஸ்

மஹிந்திராவுக்குத் தாரை வார்த்துவிட்ட லோகனை மீண்டும் கொண்டுவருகிறது ரெனோ. இந்தியாவில் மஹிந்திராவுடன் ரெனோ கூட்டு சேர்ந்து முதலில் கொண்டுவந்த கார் லோகன். பல்வேறு பிரச்னைகளால் திக்குமுக்காடிய இந்த கூட்டணியின் இறுதி உடன்பாடாக, லோகனை மஹிந்திராவிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தது ரெனோ. பழைய மாடல் லோகன் மட்டுமே மஹிந்திராவுக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது 2013-ம் ஆண்டுக்கான மாடலாக ஃபாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்ட டேசியா லோகன் காரை, மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது ரெனோ. தோற்றத்தில் மட்டும் இல்லாமல் உள்பக்க பாகங்கள் மற்றும் சிறப்பம்சங்களிலும் அதிக கவனம் செலுத்தி இருக்கிறது. புதிய லோகன் இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

மகள் ஆராத்யாவுக்கு பிஎம்டபிள்யூ மினி கூப்பர் காரைப் பரிசளித்த அபிஷேக் பச்சன்!

மோட்டார் நியூஸ்

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் முதல் பிறந்தநாள் பரிசாக, 28 லட்ச ரூபாய் பிஎம்டபிள்யூ மினி கூப்பர் காரை வாங்கித் தந்திருக்கிறார் தந்தை அபிஷேக் பச்சன். அந்த காரை பேத்தியுடன் சென்று டெலிவரி எடுத்தவர் தாத்தா அமிதாப் பச்சன்!

சிபிஆர்250ஆர் பைக்குகளைத் திரும்ப அழைக்கிறது ஹோண்டா!

மோட்டார் நியூஸ்

ஹோண்டா CBR 250R பைக்குகளின் (மார்ச் 2011 முதல் செப்டம்பர் 2012 வரை தயாரிக்கப்பட்ட பைக்குகள்) முன் வீலுக்கான பிரேக் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, ஃப்ரன்ட் பிரேக் மாஸ்டர் சிலிண்டர் அசெம்பிளி (Front Brake Master Cylinder Assembly) ஐ மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது ஹோண்டா. வாரன்டி காலம் முடிந்த பைக்குகளுக்கும் ஹோண்டா இலவசமாகவே மாற்றித் தருமாம். முன் பதிவு செய்துவிட்டு பைக்கை எடுத்துச் சென்றால், தாமதத்தைத் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளது ஹோண்டா.

கோவையில் ஆட்டோ ஷோ!

மோட்டார் நியூஸ்

கோவையைச் சேர்ந்த கட்டுமானத் துறை நிறுவனமான பினேக்கல், கோவை கொடீசியா அரங்கில் டிசம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை 'ஆட்டோமேட்டெக்-2012’ என்ற பெயரில் ஆட்டோ ஷோ நடத்துகிறது. ''தென்னிந்தியாவில் இதுவே முதல் பெரிய ஆட்டோமொபைல் ஷோவாக இருக்கும்'' என்கிறார் பினேக்கல் புரமோஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் சூர்யகுமார். அவரிடம் பேசினோம்.

''தென்னிந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தொழில் முனைவோரையும், வாடிக்கையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஆட்டோ ஷோவாக இது இருக்கும். இந்தியாவிலுள்ள கார், பைக், வேன் மற்றும் ட்ரக் என அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் கலந்துகொள்கின்றன. மேலும், வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. அதேபோல், இந்திய அளவில் ரீ-டிசைன் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் முதன்முறையாக தென்னிந்திய கண்காட்சியில் கலந்துகொள்வதுடன், இவர்களுடைய ரீ-டிசைன் கார்களையும் காட்சிப்படுத்துகின்றன. கண்காட்சியின் நுழைவுக் கட்டணம் நூறு ரூபாய் மட்டுமே!

வாடிக்கையாளர்கள் இடையே ஆட்டோமொபைல் தொடர்பான கலந்துரையாடல்கள், தொழிற்நுட்ப ரீதியான சந்தேகங்கள், சிறப்பு வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த இருக்கிறோம். மேலும், ஏடிவி டிரைவ், ஆஃப் ரோடிங் கார்களின் சாகஸம், லேசர் ஷோ, பைக் ஸ்டன்ட் என ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக இந்த ஆட்டோ ஷோ இருக்கும். மேலும், மாதிரி எஃப்-1 ரேஸ் கார் காட்சிப்படுத்துவதுடன் ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் பைக்குகளும், வின்டேஜ் கார்களும் அணிவகுக்கும். மொத்தம் முன்னூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இந்தியாவிலுள்ள உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் இருக்கின்றன. இதைக் கண்காட்சி என்று சொல்லாமல் தென்னிந்தியாவின் ஆட்டோமொபைல் திருவிழா என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு, 1 லட்சம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என்றார் ஸ்ரீதர் சூரியகுமார்!

மோட்டார் நியூஸ்

- தி.விஜய்

3.5 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் வாங்கினார் விஜய்!

மோட்டார் நியூஸ்

நடிகர் விஜய், உலகின் புகழ் பெற்ற சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கி இருக்கிறார். 'மேட் டு ஆர்டர்’ எனச் சொல்லப்படும் இந்த காரை வாங்குபவரின் விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்து தருவார்கள். சமீபத்தில்தான் இயக்குநர் ஷங்கர் இதே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார்!

ஃபோர்டு இந்தியாவின் குயிக் லேன் சர்வீஸ்!

ஃபோர்டு இந்தியாவின் சில்லறை வணிக விரிவாக்கத் திட்டத்தின்படி, 'குயிக் லேன் சர்வீஸ்’ முறையை பெங்களுருவில் உள்ள மெட்ரோ ஃபோர்டு டீலர் ஷிப்பில் துவக்கி இருக்கிறது. குயிக் லேன் சர்வீஸ் மூலம் காரில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை வெறும் இரண்டு மணி நேரத்தில் சரி செய்து கொடுத்து விடுமாம்! சென்னை, டெல்லி உள்ளிட்ட பெரிய நகரங்களில் படிப்படியாக குயிக் லேன் சர்வீஸ் கிளைகளைத் துவக்க இருக்கிறது. ஃபோர்டு இந்தியாவுக்கு இப்போது 127 நகரங்களில் 241 விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கையை 500-ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை குயிக் லேன் சர்வீஸ் வசதி கொண்டதாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலில் 5 சதவிகிதம் எத்தனால்!

மோட்டார் நியூஸ்

மத்திய அரசு,  இந்த மாதம் (டிசம்பர்) முதல் பெட்ரோலுடன் 5 சதவிகிதம் எத்தனால் கலந்து விற்கலாம் என முடிவெடுத்து இருக்கிறது. 2009-ம் ஆண்டே இதே போன்ற ஒரு முடிவு எடுத்தபோது, பல தரப்புகளில் இருந்து வந்த எதிர்ப்புகளால் அப்போது செயல்படுத்தவில்லை. அநேகமாக, நீங்கள் இந்த இதழை வாங்கும் போது இதற்கான அரசாணை வெளியிடப் பட்டு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதைச் செயல்படுத்தும் போது, ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி லிட்டர் பெட்ரோல் சேமிக்க முடியும் என்பதுதான் ஹைலைட்!

புதிய பிஎம்டபிள்யூ X6 விற்பனைக்கு வந்தது!

மோட்டார் நியூஸ்

இந்தியாவிலேயே பெரிய பிஎம்டபிள்யூ டீலர்ஷிப்பை டெல்லிக்கு அருகில் உள்ள ஃபரிதாபாத்தில் திறந்துவைத்த கையோடு, புதிய X6 ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கூபேவையும் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது பிஎம்டபிள்யூ. புதிய X6 இப்போது பிஎம்டபிள்யூ xDrive  எனப்படும் ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பத்துடனே விற்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ X6 xDrive 50i, பெட்ரோல் இன்ஜின், 407 bhp சக்தியை அளிக்கும் மாடலின் விலை 93,40,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்), xDrive 40d டீசல் இன்ஜின், 306 bhp  மாடலின் விலை 78,90,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்). அடாப்டிவ் ஸெனான் ஹெட்லைட்ஸ், புதிய பனி விளக்குகள், எல்ஈடி டெயில் லைட்ஸ், கிட்னி டிசைன் க்ரில் போன்றவை இதில் புதிது!

சென்னையில் ஹூண்டாயின் டீசல் இன்ஜின் தொழிற்சாலை!

மோட்டார் நியூஸ்

ஹூண்டாய் இந்தியா ஏற்கெனவே அறிவித்தபடி, சென்னையில் அதன் டீசல் இன்ஜின் தொழிற்சாலையை அமைக்கஇருக்கிறது. இதற்காக, ஹூண்டாய் சுமார் 1,615 கோடி ருபாய்களை முதலீடு செய்கிறது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையிலேயே டீசல் இன்ஜின் தொழிற்சாலையும் அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism