Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

ரேஸ் ஆஃப் சாம்பியன்ஸ்!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேஸ் ஆஃப் சாம்பியன் - ஆசிய பிரிவில் தாய்லாந்தில் நடைபெற்ற ரேஸில் முதன்முறையாகக் கலந்துகொண்டது இந்தியா. நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் ஆகிய இருவரும் இந்திய அணியின் சார்பில் ரேஸில் பங்கேற்றனர். இதில், நான்கு ரேஸ்களில் மூன்றில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது இந்திய ஜோடி. இதற்கிடையே, நாடுகளுக்கிடையே நடைபெற்ற ரேஸ் போட்டியில் மைக்கேல் ஷூமேக்கர், செபாஸ்ட்டியன் வெட்டல் கலந்துகொண்டு, ஜெர்மனிக்கு வெற்றித் தேடித் தந்தனர். தொடர்ந்து ஆறாவது முறையாக ரேஸ் ஆஃப் சாம்பியன்ஸ் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது ஜெர்மனி!

 வருகிறது ஹூண்டாயின் மிட் சைஸ் கார்!

மோட்டார் நியூஸ்

ஐ20 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட‌ புதிய என்ட்ரி லெவல் செடான் கான்செப்ட் காரை, பிரேசில் ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் அறிமுகம் செய்திருக்கிறது. விரைவில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த புதிய செடான் காரை, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ஹூண்டாய்.  ஐ20 ஹேட்ச்பேக் மற்றும் வெர்னா செடான் இடையில் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதால், விலை 5 - 7 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  இந்தப் புதிய காரில் ஐ20 காரில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள்தான் இருக்கும்.

ஹார்லி டேவிட்சன் ராலி!

மோட்டார் நியூஸ்
 ##~##

டெல்லி பேருந்தில் ஒரு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள், கடந்த மாதம் பைக் ஊர்வலம் நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் துவங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மட்டுமல்லாமல், இரு சக்கர வாகனங்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என தெரிவித்து இருந்ததால், ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கியவர் நடிகர் அப்பாஸ். இவர், சென்னை ஹார்லி டேவிட்சன் ஓனர்ஸ் அசோசியேஷனின் குழுவில்  இருக்கிறார். அவரிடம் பேசியபோது, ''நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்துவதுதான் இந்த பைக் ராலியின் நோக்கம்!'' என்றார்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி,

படம்:  ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

கோவையில் பஜாஜ் சர்வீஸ் கேம்ப்!

மோட்டார் நியூஸ்

கடந்த மாதம் கோவையில், பஜாஜ் நிறுவனமும், டீலர்களும் இணைந்து 'ஹேப்பி சர்வீஸிங் வாரம்’ என்ற இலவச சர்வீஸ் முகாமை நடத்தினர். வழக்கமான சர்வீஸ் முகாம் போல அல்லாமல், கிட்டத்தட்ட பொருட்காட்சி போல வடிவமைக்கப்பட்ட அரங்கு எல்லோரையும் கவர்ந்தது. பஜாஜ் மட்டுமல்லாமல், மற்ற நிறுவன பைக்குகளையும் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் குவிந்தனர். வந்திருந்த பைக்குகளுக்கு ஆயில் டாப் அப், பத்து விதமான செக்-அப் போன்றவை இலவசமாகச் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பல்ஸர் ஸ்டன்ட் ஷோ களை கட்ட, மறுபக்கம் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் மொத்தம் 3,500 பைக்குகள் கலந்து கொண்டனவாம்!

புதிய ரேஞ்ச் ரோவர் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ரேஞ்ச் ரோவர் காரை, டிசம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தது டாடா. முழுக்க முழுக்க அலுமினியம் பாடியால் செய்யப்பட்ட உலகின் முதல் எஸ்யூவி இந்த ரேஞ்ச் ரோவர். 4.4 லிட்டர் வி8 ட்வின் டர்போ இன்ஜின் கொண்ட புதிய ரேஞ்ச் ரோவரின் சக்தி 334 bhp. புதிய ரேஞ்ச் ரோவரின் பேஸிக் வேரியன்ட்டின் விலை 2 கோடி ரூபாயில் இருந்து ஆரம்பம்!

ரேஸில் தோல்வி; பணியாளர் ஆகும் விமான அதிபர்!

மோட்டார் நியூஸ்

வெர்ஜின் அட்லான்டா ஏர் லைன்ஸ் அதிபர் ரிச்சர்ட் பிரான்சனும், ஏர் ஆசியா அதிபர் டோனி ஃபெர்னாண்டஸும் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு விநோதப் பந்தயம் கட்டினர். இரண்டு பேருமே, அந்த ஆண்டு முதன்முறையாக ஃபார்முலா-1 ரேஸில் தங்கள் அணிகளைக் களம் இறக்கினார்கள். லோட்டஸ் ஏர் ஆசியா, வெர்ஜின் ரேஸ்: இந்த இரண்டு அணிகளில் எந்த அணி அந்த ஆண்டு சாம்பியன் ஷிப் பட்டியலில் குறைந்த புள்ளிகள் பெறுகிறதோ, அந்த அணியின் உரிமையாளர் போட்டி நிறுவன விமானத்தில் ஸ்கர்ட் அணிந்து விமானப் பணியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் பந்தயம்! அந்தப் பந்தயத்தில், லோட்டஸ் ஏர் ஆசியா அணி பத்தாவது இடத்தையும், வெர்ஜின் அணி பன்னிரண்டாவது இடத்தையும் பிடித்தன. அதனால் பந்தயத்தில் தோல்வியடைந்த வெர்ஜின் அட்லான்டாவின் ரிச்சர்ட் பிரான்சன்,  ஏர் ஆசியா விமானத்தில் விமானப் பணியாளராக ஸ்கர்ட் அணிந்து பணி புரிய இருக்கிறார். வரும் மே மாதம் கோலாலம்பூரில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் அவர் பணியாற்ற இருக்கிறார் என்பதால், இந்த விமானத்துக்கான டிக்கெட்டுகள் ஏலம் விடப்பட்டு, அதில் வரும் வருமானம் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்து இருக்கிறார் டோனி ஃபெர்னாண்டஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism