Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் மாருதி எர்டிகா காரை புக் செய்துவிட்டேன். ஆனால் நண்பர்கள் 'டஸ்ட்டர்தான் நல்ல கார். எர்டிகாவை கேன்சல் செய்துவிடு’ என்கிறார்கள். ஓட்டுதல் தரம், நல்ல மைலேஜ், சௌகரியமான இருக்கைகள் தான் என்னுடைய தேவை. எர்டிகாவை புக் செய்தது சரிதானா? இல்லை டஸ்ட்டர் வாங்கலாமா?

 செல்லப்பாண்டியன், மதுரை.

மோட்டார் கிளினிக்

நல்ல தரமான மினி எஸ்யூவி என்றால், அது ரெனோ டஸ்ட்டர்தான். 110 bhp சக்தி கொண்ட இன்ஜின் பவர் ஃபுல்லாக இருப்பதோடு, பெர்ஃபாமென்ஸிலும் சிறந்த கார். ஓட்டுதல் தரம், மைலேஜ், சௌகரியமான இருக்கைகள் என இது உங்கள் தேவையை முழுவதுமாகப் பூர்த்தி செய்யும். மாருதி எர்டிகாவில் இட நெருக்கடி அதிகம்.

மோட்டார் கிளினிக்

யமஹா ஃபேஸர் 250 சிசி பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக, இன்டர்நெட்டில் படித்தேன். இது உண்மையா?

ஜெயக்குமார், திருப்பூர்.

 உண்மைதான். ஆனால், இப்போது அல்ல. எப்படியும் இன்னும் 6 மாதங்கள் ஆகும்.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் மாருதி ஸ்விஃப்ட் கார் வைத்திருக்கிறேன். புதிதாக 8 - 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு செடான் கார் வாங்க வேண்டும். அதிக தூரம் பயணிக்க மாட்டேன். அதனால், பெட்ரோல் கார் போதுமானதாக இருக்கும். காரை வாங்கினால் குறைந்தது 8 - 10 ஆண்டுகளுக்காவது பயன்படுத்துவேன் என்பதால், ரீ-சேல் வேல்யூ பற்றிக் கவலை இல்லை. என்ன கார் வாங்கலாம்?

சந்திரசேகர், திருவண்ணாமலை.

 ##~##

பத்து ஆண்டுகள் வைத்திருப்பீர்கள் என்கிறபோது நம்பகத்தன்மை வாய்ந்த, நீடித்து உழைக்கும் காரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹோண்டா சிட்டி நம்பகத்தன்மை வாய்ந்த கார். நீண்ட காலத்துக்குப் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. பெட்ரோல் கார் என்பதால், இன்ஜின் ஆயுள் காலமும் அதிகம். அது மட்டுமல்ல, சர்வீஸ் செலவுகளும் அதிகம் இருக்காது!

மோட்டார் கிளினிக்

நான் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கிறேன். என் வீட்டில் 125 சிசி-க்கு மேல் அதிக சக்தி கொண்ட பைக் வாங்கக் கூடாது என்று சொல்கிறார்கள். 125 சிசி-க்குள் தினமும் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுபோல ஸ்டைலான பைக் வேண்டும். என்ன பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

பவன், சென்னை.

 125 சிசி-க்குள் ஸ்டைலான பைக்குகளில் பெரிய சாய்ஸ் எதுவும் இல்லை. ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்தான் ஸ்டைலான பைக். அது மட்டும் அல்லாமல், மைலேஜும் அதிகம் தரும். சிபி ட்விஸ்ட்டர் வாங்கினால், நீங்கள் வீட்டில் திட்டு வாங்காமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

மோட்டார் கிளினிக்

150 சிசி திறன் கொண்ட, மைலேஜ் அதிகம் கொடுக்கக் கூடிய பைக் வாங்க வேண்டும். சர்வீஸ் செலவுகள் அதிகம் இருக்கக் கூடாது. என்ன பைக் வாங்கலாம்?

காதர் மொய்தீன், புதுக்கோட்டை.

 யமஹாவின் 153 சிசி பைக்கான SZ பைக் சிறந்த சாய்ஸாக இருக்கும். இது அதிக மைலேஜ் தரும் என்பதோடு, மெயின்டெனன்ஸ் செலவுகளும் அதிகம் இருக்காது. ஆனால், நீங்கள் சரியான இடைவெளியில் பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மோட்டார் கிளினிக்

150 சிசி திறன் கொண்ட, மைலேஜ் அதிகம் கொடுக்கக் கூடிய பைக் வாங்க வேண்டும். சர்வீஸ் செலவுகள் அதிகம் இருக்கக் கூடாது. என்ன பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

காதர் மொய்தீன், புதுக்கோட்டை.

 யமஹாவின் 153 சிசி பைக்கான ஷிஞீ பைக் சிறந்த சாய்ஸாக இருக்கும். இது அதிக மைலேஜ் தரும் என்பதோடு, மெயின்டெனன்ஸ் செலவுகளும் அதிகம் இருக்காது. ஆனால், நீங்கள் சரியான இடைவெளியில் பைக்கை சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மோட்டார் கிளினிக்

என் மகளுக்கு கியர்லெஸ் ஸ்கூட்டர் வாங்கித் தரலாம் என இருக்கிறேன். அவள் மிகவும் ஒல்லியாக இருப்பாள். அதனால் எடை அதிகமான ஸ்கூட்டர் சரியாக இருக்காது. எடை குறைவான, மைலேஜ் அதிகம் தரக்கூடிய நல்ல ஸ்கூட்டர் வாங்க வேண்டும். அது நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மோட்டார் விகடனின் ஆலோசனை தேவை.

ஜோசப், திருச்சி.

 ஒல்லியான, உயரம் குறைவான பெண்களுக்கு யமஹா ரே நல்ல சாய்ஸ். இது லிட்டருக்கு 43.5 கி.மீ மைலேஜ் தரும். ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை லிட்டருக்கு 40 கி.மீ என்பதே நல்ல மைலேஜ். நம்பகத்தன்மைக்குப் பெயர் பெற்ற நிறுவனம் யமஹா. அதனால், நீடித்து உழைக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

மோட்டார் கிளினிக்

விலை குறைவான மிட் சைஸ் கார் வாங்க வேண்டும். மாருதி ஸ்விஃப்ட் டிசையர், டொயோட்டா எட்டியோஸ், நிஸான் சன்னி - இந்த மூன்று கார்களில் எந்த காரை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது.

மோட்டார் கிளினிக்

ராதாகிருஷ்ணன், பழனி.

 என்ட்ரி லெவல் அதாவது, விலை குறைவான மிட் சைஸ் கார்களில் இப்போது நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. சர்வீஸ் சென்டர் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்றால், ஸ்விஃப்ட் டிசையர் வாங்கலாம். இல்லை என்றால், ஃபோர்டு ஃபியஸ்ட்டா கிளாஸிக் காரைத் தேர்ந்தெடுக்கலாம். ஃபியஸ்ட்டாவின் இன்ஜின் சிறப்பாக இருப்பதோடு இட வசதி, ஸ்டெபிளிட்டி, பில்டு குவாலிட்டி மூன்றிலுமே ஃபியஸ்ட்டா கிளாசிக் பெஸ்ட்!