Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

டெல்லி சூப்பர் பைக் ரேஸ் நவம்பருக்கு மாற்றம்!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் மாதம் டெல்லியில் நடப்பதாக இருந்த வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ், இந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மார்ஷல்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கப் போதிய நேரம் இல்லாததால், டெல்லி ரேஸ் தள்ளிப் போவதாக அறிவித்திருக்கிறது போட்டியை நடத்தும் எஃப்.ஐ.ஏ அமைப்பு. ஆனால், இந்திய அரசின் சுங்க வரிக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம் எனச் சொல்லப் படுகிறது. இந்தியாவுக்குள் வரும் எந்த வெளிநாட்டு பைக்காக இருந்தாலும், 15 நாட்களுக்கு முன்பாக வந்தால்தான் அதைப் பரிசோதித்து சான்றிதழ் வழங்க முடியும் என்பது இந்தியாவின் பாலிஸி. இதனால், போதிய கால அவகாசம் இல்லாததால், டெல்லியில் நடக்கும் ரேஸ் 2013-ம் ஆண்டின் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் இறுதிச் சுற்றாக நடைபெறுகிறது. டெல்லி ரேஸுக்கும், அதற்கு முந்தைய ரேஸுக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி!

ஹாய்சங் அக்வில்லா இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

மோட்டார் நியூஸ்

கார்வாரோ மோட்டார்ஸிடம் இருந்து பிரிந்து, டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணி வைத்துக்கொண்ட கொரியாவின் ஹாய்சங் நிறுவனம், அக்வில்லா எனும் பெரிய புதிய பைக்கைக் களம் இறக்கியிருக்கிறது. அக்வில்லா ஜிவி 650 பைக்கை 5 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ் ஷோ ரூம்) விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது டிஎஸ்கே. 647 சிசி திறன்கொண்ட இந்த பைக்கின் அதிகபட்ச சக்தி 70.2 bhp.

ஃபார்ச்சூனரில் இனி 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்!

மோட்டார் நியூஸ்

ஃபார்ச்சூனர் காரில் இருந்த 4-ஸ்பீடு கியர் பாக்ஸைத் தூக்கிவிட்டு, 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது டொயோட்டா!

ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரின் தயாரிப்பு இந்தியாவில் துவங்கியது!

மோட்டார் நியூஸ்

புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அருகே, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களைத் தயாரிக்கத் தனி தொழிற்சாலையைத் துவக்கியது டாடா. இப்போது இந்த ஆலையில் ஜாகுவார் எக்ஸ்.எஃப் கார்களை அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கி விட்டன. முதல் கட்டமாக அசெம்பிள் செய்யப்பட்ட கார்கள் டீலர் ஷிப்புகளை வந்தடைந்து இருக்கின்றன‌. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், ஜாகுவார் காரின் விலை 6.5 லட்சம் குறைந்து இருக்கிறது!

வருகிறது மஹிந்திராவின் புதிய சின்ன கார்!

 ##~##

வெரிட்டோ பிளாட்ஃபார்மில், புதிய சின்ன காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது மஹிந்திரா. யுட்டிலிட்டி கார்களை மட்டுமே தயாரித்து வந்த மஹிந்திரா, ரெனோவுடன் கூட்டணி சேர்ந்து லோகன் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது. ரெனோ, கூட்டணியில் இருந்து பாதியில் விலகிக்கொள்ள, வெரிட்டோ எனப் பெயரை மாற்றி விற்பனை செய்துவந்தது. இப்போது முதன் முறையாக இந்தியாவின் ஹிட் மார்க்கெட்டான சின்ன கார் மார்க்கெட்டில் களம் இறங்குகிறது மஹிந்திரா.

வெரிட்டோவை அடிப்படையாகக்கொண்டு மஹிந்திரா தயாரித்திருக்கும் ஹேட்ச்பேக் கார், சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மோட்டார் விகடனின் வாசகர் முரளி, சென்னை திருமங்கலம் அருகே இந்த காரைப் படம் பிடித்திருக்கிறார். நான்கு மீட்டர் நீளத்துக்குள் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களைப் பொருத்தி விற்பனைக்குக் கொண்டுவருகிறது மஹிந்திரா. ஸ்விஃப்ட், ஐ20 கார்களுடன் போட்டி போட இருக்கும் இந்த கார், ஏப்ரல் - மே மாதவாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை to புதுச்சேரி... ஜாலி ராலி!

மோட்டார் நியூஸ்

தமிழகத்தில் சென்னையில்தான் வின்டேஜ் கார் ராலி, அது தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். இப்போது அந்தப் பட்டியலில் புதுச்சேரியும் சேர்ந்திருக்கிறது. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த வின்டேஜ் ராலியில் கலந்துகொண்ட கார்களின் எண்ணிக்கை அறுபதுக்கும் மேல். சுற்றுலாவாசிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த இந்த நிகழ்ச்சி, இனி அடிக்கடி நடத்த இருக்கிறோம் என்கிறார்கள் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள். புதுச்சேரியில்  அளவான வின்டேஜ் கார் பைக்குகள் மட்டுமே இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பெரும்பான்மையான கார்கள் சென்னையைச் சேர்ந்தவை. ஈசிஆர் சாலையில் இரண்டு நாட்களும் வின்டேஜ் ராலிதான்!

-நா.இள.அறவாழி, படம்: ஜெ.முருகன்

இனி, மாதந்தோறும் டீசல் விலை மாறும்!

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, டீசல் விலையை மாற்றி நிர்ணயிக்க மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விலை ஏற்றம் மிக அதிக அளவில் இருக்காது என்கிறார். இப்போது ரூ.50.30-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் டீசலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.9.60 நஷ்டம் ஏற்படுவதால், இந்த நஷ்டத்தை ஈடுகட்ட டீசல் விலையைப் படிப்படியாக உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளது. இனி மாதந்தோறும் டீசல் விலை உயர்வு அறிவிப்பு வரலாம். முதல்ட்டமாக, சென்னையில் லிட்டருக்கு 35 காசுகள் வரை உயர்ந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism