Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

ஜஸ்டின், கோவை

மோட்டார் கிளினிக்

ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் எப்போது விற்பனைக்கு வரும்?

ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் காரைத் தீவிரமாக டெஸ்ட் செய்து வருகிறது ஃபோர்டு. கடந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த காரின் அறிமுகம், அநேகமாக இந்த  ஆண்டு இருக்கலாம். ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் விற்பனைக்கு வந்தால், தற்போது விற்பனையில் இருக்கும் ஃபியஸ்ட்டா மாடல்களில் ஏதாவது ஒன்றை நிறுத்திவிடும் முடிவில் இருக்கிறது ஃபோர்டு!

கோபி கிருஷ்ணன், சென்னை

மோட்டார் கிளினிக்

நான் மோட்டார் விகடனின் தீவிர வாசகன். சென்னையில் மெடிக்கல் ரெப் வேலை. ஸ்ப்ளெண்டர் பைக் வைத்திருக்கிறேன். நான் பவர் அதிகம் கொண்ட, அதே சமயம் அதிக மைலேஜ் தரும் 125 சிசி பைக் வாங்க ஆசைப்படுகிறேன். என்ன பைக் வாங்கலாம்?

இப்போதிருக்கும் 125 சிசி பைக்குகளில், நம்பகத்தன்மை வாய்ந்த நல்ல பைக் ஹோண்டா ஷைன். இதன் மைலேஜ் லிட்டருக்கு 55 - 60 கி.மீ வரை இருக்கும். பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் தரத்திலும் சிறப்பாக இருக்கும். ரைடிங் பொசிஷன் சரியாக இருப்பதால், நீண்ட தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியாது.

கணேஷ், திருச்சி

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் 2008-ம் ஆண்டு மாடல் யமஹா FZ16 பைக் வைத்திருக்கிறேன். 60 ஆயிரம் கி.மீ மேல் பைக்கை ஓட்டிவிட்டேன். அதனால், இப்போது புதிதாக பைக் வாங்கலாமா என்று யோசித்து வருகிறேன். இப்போது புதிதாக வந்திருக்கும் எந்த பைக்குகளுமே எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், மீண்டும் FZ16 பைக்கையே வாங்கலாமா அல்லது ஃபேரிங் கொண்ட ஃபேஸர் பைக்கை வாங்கலாமா எனக் குழப்பமாக இருக்கிறது. இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?

நீங்கள் சொல்வதுபோல, பேரிங் இருப்பது மட்டுமே FZ16 பைக்குக்கும், பேஸருக்குமான வித்தியாசம். மற்றபடி இன்ஜின், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என எல்லாமே ஒன்றுதான். அதனால், இவ்வளவு நாள் நேக்கட் பைக் ஓட்டினோம். இனிமேல் ஃபேரிங் கொண்ட பைக் ஓட்டுவோம் என்று நீங்கள் முடிவெடுத்தால், ஓ.கே. வசதியான ரைடிங் பொசிஷன், லேட்டஸ்டான ஸ்டைல் ஆகியவற்றோடு விலையும் குறைவாக இருப்பதால், நீங்கள் மீண்டும் FZ, ஃபேஸர் பைக்கைத் தேர்ந்தெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. FZ பைக்கில் அடிக்கடி செயின் தளர்ந்துவிடுவது பிரச்னையாக இருந்தது. இப்போது அந்தப் பிரச்னையை யமஹா சரி செய்துவிட்டது.

ஹரிவர்தன், நாமக்கல்.

மோட்டார் கிளினிக்

எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பேர். கொஞ்சம் பெரிய கார் வாங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். டாடா சஃபாரி ஸ்டார்ம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அல்லது மஹிந்திரா ஸைலோ - இந்த கார்களில் எதை வாங்கலாம்? எனக்கு சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும்.

மோட்டார் கிளினிக்

சஸ்பென்ஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் சொன்ன மூன்று கார்களையும் மறந்துவிடுவதே நல்லது. பெரிய கார்களில் சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் சொகுசான இருக்கைகள் கொண்ட கார் டொயோட்டா இனோவா.

சிராஜ், மதுரை

மோட்டார் கிளினிக்

மாருதி வேகன்-ஆர், டீசல் இன்ஜினோடு விற்பனைக்கு வரப் போவதாக இன்டர்நெட்டில் படித்தேன். அது எப்போது விற்பனைக்கு வரும்?

மோட்டார் கிளினிக்

சின்ன கார்களில் டீசல் இன் ஜின்கொண்ட மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் மாருதி தயக்கம் காட்டுகிறது. இப்போதைக்கு வேகன் ஆர் காரில் டீசல் இன் ஜின் கொண்ட மாடல் விற்பனைக்கு வருமா என்பது சந்தேகமே!

முத்துராம், செங்கல்பட்டு

மோட்டார் கிளினிக்

என் வீட்டில் மொத்தம் ஐந்து பேர். இப்போது நான் முதல் முதலாக கார் வாங்க முடிவெடுத்திருக்கிறேன். என் நண்பர்கள் ஃபோர்டு ஃபிகோ-டீசல் வாங்கலாம் என்கிறார்கள். ஆனால், எனக்கு ஃபிகோவில் ஐந்து பேர் வசதியாக உட்கார முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து ஃபிகோ டீசல் வாங்குவதற்குப் பதில் 5.5 லட்ச ரூபாய்க்கு என் நண்பர் விற்பனை செய்ய இருக்கும் 2007 ஸ்கோடா ஆக்டேவியாவை வாங்கலாமா என்று சபலம் எழுகிறது. ஆக்டேவியா பெரிய கார் என்பதால், ஐந்து பேர் வசதியாக உட்கார முடியும். புது காரா அல்லது பழைய காரா? எதை வாங்கலாம்?

புதிய காரை வாங்குவதே நல்லது. 1.5 லட்சம் ரூபாய் குறைவாகக் கிடைக்கிறதே என்று நீங்கள் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஆக்டேவியாவை வாங்கினால், சர்வீஸ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் புது காரைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். நீங்கள் சொல்வதைப் போல் ஃபிகோவில் பின் பக்கம் மூன்று பேர் வசதியாக உட்கார முடியாது. அதற்குப் பதில், உங்கள் பட்ஜெட்டை இன்னும் 1 லட்சம் அதிகரித்தால், நிஸான் சன்னி வாங்கலாம். இதில் இருப்பது ரெனோவின் நம்பகத்தன்மை வாய்ந்த டீசல் இன்ஜின். இதன் இட வசதி தாராளம். மைலேஜ் அதிகம். பராமரிப்புச் செலவுகளும் குறைவே.

ரவி, கோபி

மோட்டார் கிளினிக்

என்னுடைய நண்பர் பழைய ரெனோ லோகன் வைத்திருக்கிறார். இப்போது குறைந்த விலைக்கு எனக்கு அதை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால், என் உறவினர்கள் லோகன் இப்போது விற்பனையில் இல்லை என்பதோடு, மஹிந்திராவிடம்தான் சர்வீஸ் செய்ய வேண்டும். அதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் எதுவும் கிடைக்காது என்கிறார்கள். இது உண்மையா? லோகனை நம்பி வாங்கலாமா?

ரெனோ லோகன் விற்பனையில் இல்லை என்றாலும், அதே காரை வெரிட்டோ என்ற பெயரில் விற்பனை செய்கிறது மஹிந்திரா. ரெனோ-மஹிந்திரா ஒப்பந்தப்படி ஸ்பேர் பார்ட்ஸ் விநியோகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது எனப் பயப்பட வேண்டாம். லோகனின் இன்ஜின் தரமானது என்பதால், குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது மிஸ் செய்யாமல் வாங்கலாம்.