Published:Updated:

விபத்தைக் குறைக்கும் விழிப்புப் பணியில்...

விபத்தைக் குறைக்கும் விழிப்புப் பணியில்...

ருநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்; காவல் துறையின் முக்கிய அதிகாரிகள்; மாவட்ட ஆட்சியர்கள், வட்டாரப்   போக்குவரத்து அலுவலர்கள் என அத்தனை பேரும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி மாலை மூன்று மணிக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் நமது மோட்டார் விகடனின் சார்பில் முற்றுகை இட்டார்கள். சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்பு உணர்வுப் பிரசாரம், அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூ சிக்னலில், போக்குவரத்துத் துணை ஆணையாளர் தினகரன், எரிபொருள் சேமிப்பு டிப்ஸ் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், ''பெரும்பாலான சாலை விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் நிகழ்கின்றன. 'குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்’ என்று ஒவ்வொருவரும் புத்தாண்டு சபதம் எடுத்தாலே விபத்துகள் பெருமளவில் குறைந்துவிடும்'' என்றார். புத்தாண்டுக் கொண்டாட்ட வேளையிலும், தன்னார்வலர்களாகக் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் 'மோட்டார் விகடன் நடத்தும் சாலைப் பாதுகாப்பு பிரசாரம் அடிக்கடி நடத்தப்பட வேண்டிய ஒன்று. எப்போது அழைத்தாலும் நாங்கள் முதல் ஆளாக வருவோம்’ என்று உற்சாகமாக உறுதி அளித்தார்கள்.

விபத்தைக் குறைக்கும் விழிப்புப் பணியில்...
விபத்தைக் குறைக்கும் விழிப்புப் பணியில்...
அடுத்த கட்டுரைக்கு