Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

அன்பரசன், தஞ்சாவூர்.

மோட்டார் கிளினிக்

ஸ்டைலான, அதே சமயம் மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவான ஸ்கூட்டர் வாங்கலாம் என இருக்கிறேன். தற்போது உள்ள ஸ்கூட்டர்களில் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. வெஸ்பா போன்று கிளாஸிக்காக இல்லாமல், மாடர்ன் ஸ்கூட்டர் எதையும் பியாஜியோ விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறதா?

மோட்டார் கிளினிக்

ஃப்ளை என்ற பெயரில் புதிய 125 சிசி ஸ்கூட்டரை, இந்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவருகிறது பியாஜியோ. மாடர்ன் ஸ்கூட்டரான இதன் விலை 60 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும். இது, ஸ்டைலான ஸ்கூட்டராகவும், அதேசமயம் பெர்ஃபாமென்ஸில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் சுஸ¨கி ஆக்ஸஸ் ஆகிய ஸ்கூட்டர்களுக்குக் கடும் சவாலாகவும் இருக்கும். தீபாவளி நெருக்கத்தில் இந்தப் புதிய ஸ்கூட்டரை எதிர்பார்க்கலாம்.

ஞானமணி, வேலூர்.

மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் 56 லட்சம். ஆனால், புது கார் வாங்குவது என் நோக்கம் அல்ல; பழைய கார்தான். டொயோட்டா கரோலா அல்லது ஹோண்டா சிவிக் ஆகிய இரண்டில், எதை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது. உங்களுடைய ஆலோசனை தேவை.

ஹோண்டா சிவிக் வாங்குவதை விட டொயோட்டா கரோலா வாங்குவதே நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால், இப்போது ஹோண்டா சிவிக்கின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். கரோலா, மெயின்டெனன்ஸ் செலவுகள் அதிகம் வைக்காத கார். அதனால், பழைய கார் வாங்கினாலும் சர்வீஸ் பில் கழுத்தை நெறிக்காது. இட வசதி அதிகம் என்பதோடு, மைலேஜும் அதிகம். அதனால், கரோலா வாங்குவதே நல்லது. வாங்குவதற்கு முன்பு பேப்பர்கள் சரியாக இருக்கிறதா, டயர் தேய்மானம் மற்றும் இன்ஜினை ஒருமுறை செக் செய்து கொள்ளவும்!

கல்யாண்குமார், சென்னை.

மோட்டார் கிளினிக்

நான் ஹூண்டாய் ஐ10 கார் வைத்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் பெரிய கார் வாங்க வேண்டும். மாதத்துக்கு 2,000 கி.மீ வரை பயணிப்பேன். காரில் நான் எதிர்பார்க்கும் விஷயம், ஓட்டுதல் தரம் அதாவது சஸ்பென்ஷன் நன்றாக இருக்க வேண்டும். நான் மடிப்பாக்கத்தில் வசிக்கிறேன். என்னுடைய அலுவலகம் சோழிங்கநல்லூரில் இருக்கிறது. ஏரியாவில் சாலைகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும். அதனால், தரமான சஸ்பென்ஷன் கொண்ட கார்தான் வாங்க வேண்டும். அதேபோல், நான் அப்பார்ட்மென்ட்டில் வசிப்பதால், பெரிய கார்களை நிறுத்த இடம் இல்லை. அதனால், மெகா சைஸ் காராக இல்லாமல், கொஞ்சம் அடக்கமாகவும் இருக்க வேண்டும். என்னுடைய பட்ஜெட் அதிகபட்சம் 10 லட்சம். நல்ல காராகச் சொல்லுங்கள்?

மோட்டார் கிளினிக்

நீங்கள் ரெனோ டஸ்ட்டர் காரை வாங்கலாம். இதன் ஓட்டுதல் தரம் மிகவும் சிறப்பாக இருக்கும். காருக்குள் உட்கார்ந்து பயணம் செய்யும்போது, அலுங்கல் குலுங்கல்கள் அதிகம் தெரியாது. உங்கள் ஏரியாவைப் பற்றிச் சொல்லும்போது அங்கே மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும் என்பது புரிகிறது. செடான் கார்களுக்குப் பதில் மினி எஸ்யூவி கார்களை வாங்கும்போது கிரவுண்ட் கிளியரன்ஸ் பிரச்னையும் வராது. அதனால், காருக்குக் கீழே அடிபடுமோ, சொட்டை விழுமோ எனப் பயப்பட வேண்டியது இருக்காது. டீசல் கார் என்பதால், மைலேஜும் அதிகம் கிடைக்கும்.

சந்தோஷ், திருச்சி.

மோட்டார் கிளினிக்

125சிசி பைக் வாங்க வேண்டும். சௌகரியமான, அதிக மைலேஜ் தரக் கூடியதாக இருக்க வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

125 சிசி மார்க்கெட்டில் நிறைய பைக்குகள் இருந்தாலும், சொகுசான அதே சமயம் ஓட்டுதல் தரத்திலும், மைலேஜிலும் சிறந்த பைக்காகவும் இருப்பது ஹோண்டா ஷைன்தான். ஹோண்டா என்பதால், நீடித்து உழைக்கும்.

டேவிட், நாகர்கோவில்

மோட்டார் கிளினிக்

நான் நிஸான் சன்னி வாங்கலாம் என முடிவு எடுத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய நண்பர்கள், 'நிஸான் கார்கள் மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகமாக இருக்கும். மாருதி அல்லது ஹூண்டாய் கார்களை வாங்குவதே நல்லது’ என்கிறார்கள். இது உண்மையா?

மோட்டார் கிளினிக்

உங்கள் நண்பர் சொல்வது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. வெளிநாட்டில் இருந்து வரும்போதுதான் உதிரி பாகங்களின் விலை அதிகமாக இருக்கும். சர்வீஸ் செலவுகளும் கூடும். இப்போது சென்னை ஒரகடத்தில் உள்ள நிஸான் தொழிற்சாலையில்தான் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல, கிட்டத்தட்ட 90 சதவிகித பாகங்கள் நம் நாட்டில் இருந்துதான் வாங்கப்படுகின்றன. ஹூண்டாய் போன்று நிஸானும் நம்ம ஊர் நிறுவனம் ஆகிவிட்டதால், சர்வீஸ் செலவுகள் அதிகமாகும் என அஞ்சத் தேவையில்லை.

வேல்ராஜ், மோட்டார் விகடன் ஃபேஸ்புக் மூலம்

மோட்டார் கிளினிக்

நான் மோட்டார் விகடனின் தீவிர வாசகன். தர்மபுரியில் கடை வைத்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகளோடு பயணிக்க சின்ன கார் வாங்கலாம் என நினைக்கிறேன். ஹுண்டாய் இயான் வாங்கலாமா? இதன் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் பற்றிய விவரங்களைச் சொல்ல முடியுமா?

சின்ன கார்களில் ஸ்டைலான கார் இயான். ஆனால், பின் பக்கம் இட வசதி அதிகம் இல்லை.

மோட்டார் கிளினிக்

குடும்பத்தில் ஐந்து பேர் என்றால், அத்தனை பேரும் வசதியாக உட்கார்ந்து பயணிப்பது கொஞ்சம் சிரமம்தான். பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை இயானில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், அதிர்வுகள் அதிகம் இருக்கும். மைலேஜைப் பொருத்தவரை இது லிட்டருக்கு 15.45 கி.மீ கொடுக்கும்.

அபுதாகீர், கோவை.

மோட்டார் கிளினிக்

நான் ஹோண்டா யூனிகார்ன் பைக் வைத்திருக்கிறேன். இதில் இருக்கும் ஹெட்லைட் வெளிச்சம் பவர்ஃபுல்லாக இல்லை. இதனால் ஹை  இன்டென்சிட்டி அதாவது, ஹெச்.ஐ.டி ஹெட்லைட் பொருத்தலாம் என நினைக்கிறேன். இதற்கு எவ்வளவு செலவாகும்?

ஹெச்.ஐ.டி விளக்குகளைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒரிஜினல் ஹெச்.ஐ.டி கிட்டுகள் கிடைப்பதில்லை. ஃபிலிப்ஸ் உள்ளிட்ட ஒரிஜினில் விளக்குகள் கிடைத்தாலும், மொத்த கிட் சைனாவில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது. சீனத் தயாரிப்புகளில் ஏகப்பட்ட தரக் குறைப்பாடுகள் இருக்கின்றன. வாங்கி ஒரு மாதத்துக்கு உள்ளாகவே பல்பு ஃப்யூஸ் ஆவது உள்பட ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இவை 2,500 ரூபாயில் இருந்து 9,000 ரூபாய் வரை விற்பனைக்குக் கிடைக்கின்றன.