Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

விற்பனைக்கு வருகிறது

 புதிய டொயோட்டா கரோலா ஆல்டிஸ்!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதற்காக, டொயோட்டா தனது அடுத்த தலைமுறை கரோலா ஆல்டிஸ் கார்(E160) தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக இருக்கிறது. டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட, ப்யூரியா எனும் கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்தப் புதிய கரோலா. பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாக, இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது புதிய கரோலா. இன்டீரியர் பழைய காருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாத வகையில் முற்றிலும்  புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.1.8 லிட்டர் டூயல் VVTi பெட்ரோல் இன்ஜினுடனும், 1.4 லிட்டர் டீசல் இன்ஜினுடனும் புதிய கரோலா 2014-ம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய இன்ஜின்கள்!

மோட்டார் நியூஸ்

மஹிந்திராவும் ஸாங்யாங் நிறுவனமும் இணைந்து புதிய இன்ஜின்களைத் தயாரிக்க இருக்கின்றன. சென்னையில் இருக்கும் மஹிந்திராவின் ஆராய்ச்சி மையத்தில்தான் இதற்கான பணிகள் நடைபெற உள்ளன. 4,300 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக இருக்கும் இந்த யூரோ-4 இன்ஜின்கள், 1.2 லிட்டர் முதல் 1.6 லிட்டர் வரை திறன் கொண்டதாக இருக்கும்.

ரைகோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ், பிரிட்டனைச் சேர்ந்த ரைகோ லாஜிஸ்டிக்ஸ் எனும் நிறுவனத்தை வாங்கி உள்ளது. ஏற்கெனவே பிரிட்டனில் இதற்கு முன்பு, சிஜே காம்பொனென்ட்ஸ் மற்றும் மல்டிபார்ட் ஹோல்டிங்ஸ் என இரண்டு நிறுவனங்களை வாங்கி இருக்கிறது டிவிஎஸ். இந்த மூன்று நிறுவனங்களும் இனி 'டிவிஎஸ் எஸ்சிஎஸ்’ என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கும். 2015-க்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.

நிஸானின் 'பலே' பிளான்!

மோட்டார் நியூஸ்

இன்னும் மூன்றே ஆண்டுக்குள், 10 கார்களை விற்பனைக்குக் கொண்டுவரும் திட்டத்துடன் இயங்குகிறது நிஸான். முதலில் X-Tronic  சிவிடி கியர் பாக்ஸுடன் வர இருக்கிறது சன்னி ஆட்டோமேட்டிக். 2013 இறுதியில் ரெனோ டஸ்ட்டர் ரீ-பேட்ஜிங் செய்யப்பட்டு நிஸான் முத்திரையோடு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிஸான் - ரெனோ கூட்டணிக் கொள்கையின்படி, டஸ்ட்டரைவிட விலை குறைவாக அறிமுகப்படுத்தப்படும். 2014-ல் நிஸான் தனது விலை குறைந்த 'டட்சன்' பிராண்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. டட்ஸனின் முதல் கார் 2-4 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

சென்னையில் புதிய கியா பிக்கான்ட்டோ?

சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியாவின் புதிய பிக்கான்ட்டோ காரைப் படம்பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் இந்து மஹான்.

சென்னை ஜிபி ரோடு வழியாக போய்க் கொண்டிருந்த இந்த கார் இடது பக்க ஸ்டீயரிங் கொண்டு இருந்ததோடு, மஹாராஷ்டிரா நம்பர் பிளேட்டுடன் இருந்தது.

ஏப்ரல் மாத வாக்கில் புதிய ஐ10 விற்பனைக்கு வர இருக்கும் நிலையில் கியா பிக்கான்ட்டோ இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்டு வருவது வெறும் டெஸ்ட்டிங்கா அல்லது கியா பிக்கான்ட்டோ வேறு பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறதா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

 பாரத்பென்ஸ் ட்ரக்குகள் அறிமுகம்!

கனரக வாகனச் சந்தையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் பாரத்பென்ஸ் நிறுவனம், இப்போது இலகுரக வர்த்தக வாகனச் சந்தையிலும் குதித்து இருக்கிறது. கடந்த மாதம் சென்னை ஒரகடத்தில் இருக்கும் பாரத்பென்ஸ் தொழிற்சாலையில் '914 ரிஜிட், 1214 ரிஜிட், 1217 டிப்பர்’ ஆகிய புதிய மூன்று லைட் கமர்ஷியல் ட்ரக்குகளை அறிமுகம் செய்தது.

மோட்டார் நியூஸ்

இந்த மூன்று ட்ரக்குகளில் 914 - 1214 ரிஜிட் ஆகிய இரண்டும் சரக்குப் போக்குவரத்துக்கும், 1217 டிப்பர் ட்ரக் கட்டுமானத்துறைக்கும் வடிவமைக்கப்பட்டவை.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டெய்ம்ளர் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆல்பர்ட் கிர்ச்மான், 'சீனாவுக்கு இணையான பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. பாரத்பென்ஸ் ட்ரக்குகள் இந்திய ட்ரக் துறையை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும்.

ஜெர்மன் தொழில்நுட்பத்துடனும், இந்தியப் பொறியாளர்களின் சாலை குறித்த புரிதலுடனும் பாரத்பென்ஸ் ட்ரக்குகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இன்று சந்தையில் கிடைக்கும் எந்த ட்ரக்கைக் காட்டிலும் பாரத் பென்ஸ் வாகனங்கள், 10 சதவிகிதம் கூடுதல் திறனைக்கொண்டவை. எரிபொருள் சிக்கனம், வேகம், ஓட்டுனருக்கான சொகுசு வசதிகள் ஆகியவற்றில் பாரத் பென்ஸ் ட்ரக்குகள் முதல் இடத்தில் இருக்கும்' என்றார்.

-  அருண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism