>> அ.ராமநாதன் >> பு.நவீன்குமார்

கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல் - உலக அளவில் ரேஸ் பயிற்சிக்குப் புகழ் பெற்றது. இந்தப்

பள்ளியினர் சமீபத்தில் சென்னை சூப்பர் பைக் ரசிகர்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுத்தனர். பிரபல மிக்ஸர் கிரைண்டர் நிறுவனமான 'ப்ரீத்தி’இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 23-ம் தேதி, சென்னை கூடுதல் ஆணையர் ஷகீல் அகமது கொடியசைத்து வைக்க... சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் அவென்யூ வரை சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், 20 சூப்பர் பைக்குகளில் ஒரு சின்னப் பயணத்தையும் மேற்கொண்டனர் இந்த அணியினர்.

ஜனவரி 25-ம் தேதி தொடங்கிய சூப்பர் பைக் ரேஸ் பயிற்சி, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்து முடிந்தது. பயிற்சி வகுப்பில் 90 பேர் வரை கலந்துகொண்டு வெளிநாட்டில் இருந்து வந்திருந்த கோச்சுகளுக்கு டஃப் கொடுத்தனர். இதில் 86 பேர் இந்தியர்கள். பயிற்சிக்காக சர்வதேச பயிற்சியாளர்களான கீத் கோட் (கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூலின் நிறுவனர்), ஆன்டி இபாட் (ஹிரி ஸ்கூல் இயக்குனர்), ஸ்டீவ் ப்ராக்கி (ஆஸ்திரேலியா ஸ்கூல் இயக்குனர்), டைலன் கோன் (ரைடிங் கோச்), டேரன் ஸ்வீன்மேன் (நியூஸிலாந்து ஸ்கூல் இயக்குனர்), க்ளன் ரோத்வெல் (சீனியர் ரைடிங் கோச்), ஜான் ட்ராட்டர் (தலைமை ரைடிங் கோச்) ஆகியோர் பயிற்சியாளராக இதில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு லெவலாக மூன்று லெவல்களுக்கும் தனித் தனியாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு லெவலிலும் ஐந்து செயல்முறைப் பயிற்சிகள் இருந்ததுதான் மாணவர்களை நெளிய வைத்தது.

முதலில், எப்படிப் பார்த்து ஓட்ட வேண்டும், பார்வை எங்கே இருக்க வேண்டும் என்பது சொல்லித் தரப்பட்டது. லைன் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது முதல் கட்டம். இரண்டாவது கட்டத்தில் கியரை மாற்றுவது பற்றியும், பிரேக்கைப் பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கினார்கள். மேலும் ஆக்ஸிலரேட்டர் கன்ட்ரோல், வளைவில் எந்த அளவுக்கு வளைந்து செல்லலாம் என்பது பற்றியும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பைக்கில் அமரும் முறைகூட ஒருவரின் வெற்றி - தோல்விக்குக் காரணமாக அமையும் என்பதால், அது பற்றி தனியே பாடம் சொல்லித் தந்தார்கள். மாணவர்கள், பைக் ஓட்டும் விதத்தை பயிற்சியாளர்களும் கூடவே பைக்கில் சென்று கவனித்தார்கள். மாணவர்கள் தவறு ஏதேனும் செய்தால் உடனே வெளியே அழைத்து வந்து, அவருக்கு அந்தத் தவறு ஏன் ஏற்பட்டது, அதை எப்படிச் சரி செய்யலாம் என்பதை விளக்கி, திக்குமுக்காட வைத்தார்கள்.

இந்த ஆண்டு பயிற்சி பெற்ற கிருஷ்ணகுமார், ''பயிற்சிக்கு முன்பு இருந்ததுக்கும், இந்த ஐந்து நாள் பயிற்சி முடிந்த பிறகு நான் ஓட்டுறதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. ஸ்பீடு கன்ட்ரோல், ஆக்ஸிலரேட்டர் கன்ட்ரோல், கார்னரிங்னு பல விஷயங்கள்ல என்னையே நான் தேர்ந்தவனா உணர்றேன்!'' என்றார்.

சென்ற ஆண்டு இதே கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூலில் பயிற்சி எடுத்த ரஜினி கிருஷ்ணன் கூறுகையில், ''இப்ப நம்ம நாட்டுல கிரிக்கெட்டுக்கு இருக்கிற முக்கியத்துவம் எந்த விளையாட்டுக்கும் இல்லைங்கிறதுதான் மற்ற எல்லா விளையாட்டு வீரர்களோட ஏக்கமும்! அப்படி யாராவது ஸ்பான்ஸர் பண்ணணும்னு வந்தாலும் கார் ரேஸ் பக்கம் போயிடுறாங்க... பைக் ரேஸுக்கு அங்கீகாரம் இல்லாமப் போச்சு. ஒரு பைக் ரேஸர் ஸ்பான்ஸர் பிடிக்கிறதுக்குப் படுற கஷ்டம் ரொம்ப அதிகம். இருந்தாலும், புதுப் புது பைக் ரேஸர்கள் உருவாகி, பைக் ரேஸ் பக்கம் கவனத்தைத் திருப்ப இந்தப் பயிற்சி ரொம்ப உதவியா இருக்கும். கொஞ்சம் கத்துக்கிட்டு இங்க வந்தா... முழுவதுமா தெரிஞ்சுக்கலாம்!'' என்றார்.

பின்பு பேசிய ப்ரீத்தி இயக்குனர் வரதராஜன், ''சென்ற ஆண்டு 24 பேருக்கு ஸ்பான்ஸர் செய்திருந்தோம். இந்த முறை 16 பேரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். ஹாலந்திலிருந்துகூட இப்போது இங்கே ஒருவர் பயிற்சி எடுக்க வந்துள்ளார். இதில் பங்கெடுப்பவர்கள் 70 சதவிகிதம் பேர் ஸ்ட்ரீட் ரேஸர்கள். போக்குவரத்து மிகுந்த சாலையில் ஓட்டியவர்கள் ரேஸ் டிராக்கில் ஓட்டுவது சவால் மிகுந்ததுதான். பயிற்சியின் ஒவ்வொரு அசைவும் இவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது'' என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, தீராத தாகத்துடன் சீறிப் பாய்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் களம் காணத் துடிக்கும் இளசுகள்!