Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா

கனவை நனவாக்கும் ட்ரீம் யுகா!

ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா

கனவை நனவாக்கும் ட்ரீம் யுகா!

Published:Updated:
ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா

பெயர்: பழனிச்சாமி

 தொழில்: அரசு ஊழியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊர் : சென்னை

வாங்கிய தேதி : 26.09.2012

ஓடோமீட்டர் ரீடிங்: 3,800 கி.மீ

பிடித்தது : ஸ்டைல், வசதியான சீட், சஸ்பென்ஷன்.

பிடிக்காதது: துருப் பிடிக்கும் பாஸ்ட்னர்ஸ், மைலேஜ்

 ''புதிதாக பைக் வாங்குவதைவிட அதைப் பத்திரமாகவும், புதிது போலப் பராமரிப்பதும்தான் பெரிய வேலையே. ஆனால், அளவான பராமரிப்பும், நல்ல பைக்கை வாங்கினோம் என்ற மன திருப்தியைத் தருவது ஒரு சில பைக்குகள்தான். அதில், என் செலக்ஷன் மிகச் சரியாகவே இருக்கிறது'' என்கிறார் சென்னை கலங்கரை விளக்கத்தின் தலைமைக் காப்பாளரான பழனிச்சாமி.

ஹீரோ ஹோண்டா சிடி 100-தான் என் முதல் பைக். அதில்தான் தினமும் பயணம். வாங்கி நீண்ட நாட்களாகி விட்டதால், அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டி இருந்தது. மேலும், முதுகு வலி வர ஆரம்பித்தது. வேறு நல்ல பைக்கை வாங்க வேண்டும் என முடிவெடுத்து, நண்பர்களிடமும், பைக் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்தேன். பஜாஜ் டிஸ்கவர், யமஹா YBR , ஷைன் என பல பைக்குகளைப் பற்றி அவர்கள் சொன்னாலும், எனக்கு அவற்றில் அவ்வளவாகத் திருப்தி ஏற்படவில்லை.

காசு கொஞ்சம் அதிகம் ஆனாலும், நன்றாக உழைக்கக்கூடிய பைக்காக இருக்க வேண்டும்; அதுவும் ஹோண்டா நிறுவனத்தின் பைக்காக இருந்தால், நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். ப்ளஸ் ஒன் படிக்கும் என் மகனுக்கு ஆட்டோமொபைலில் அதிக ஆர்வம். நானும் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். இந்தக் காலத்துக்கு ஏற்றதுபோல ஸ்டைலாகவும், சௌகரியமானதாகவும், அதே நேரத்தில் நல்ல மைலேஜ் தரக் கூடியதாகவும் பைக் இருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில்தான், 110 சிசி திறன் கொண்ட ஹோண்டா ட்ரீம் யுகா அறிமுகமானது.

ஏன் ட்ரீம் யுகா?

 ##~##

ட்விஸ்ட்டரையும், ஷைனையும் சேர்த்து உருவாக்கியது போன்ற ஏரோ டைனமிக்ஸ் டிசைன் எனக்கும், என் மகனுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. எனவே, ட்ரீம் யுகாவை நேரில் பார்க்கலாம் என எழும்பூரில் உள்ள திதார் மோட்டார்ஸ் சென்றோம். அங்கே வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது. மேலும், நமக்குச் சந்தேகம் வராத அளவுக்கு, அவர்கள் பைக்கைப் பற்றி விவரித்த விதமும் அருமை.  நான் மட்டுமின்றி, என் மகனும் பயன்படுத்தப் போவதால், என் குடும்பத்துக்கு எல்லா விதத்திலும் தகுந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தேன். என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதுபோலவே இருந்தது ட்ரீம் யுகா. உடனே புக் செய்துவிட்டேன். பைக் வாங்கிய இந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை சர்வீஸ் செய்துள்ளேன்.

முதல் அனுபவம்

பொதுவாக, அம்பத்தூர் டு தாம்பரம் பை-பாஸ் சாலையில்தான் அதிகம் பயணம் செய்வேன். அதனால், பைக் வாங்கியவுடன் என் பையனை அழைத்துக்கொண்டு, அந்தச் சாலையில் பறந்தேன். அந்த முதல் பயணம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ, அந்த மகிழ்ச்சியை இன்றுவரை கொடுக்கிறது ட்ரீம் யுகா. சீட், மிக மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதால், உட்கார்ந்து ஓட்டுவதற்கும் வசதியாக இருக்கிறது. மேலும், டிராஃபிக் சமயங்களில், வளைத்து நெளித்து ஓட்டவும் வசதியாக இருக்கிறது. பொதுவாக, ஹோண்டா பைக்குகளின் ஹெட் லைட் பவர் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இதன் ஹெட் லைட் இரவில் சாலையைத் தெளிவாகக் காட்டுகிறது.

ரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ட்ரீம் யுகா

இன்ஜின்

நல்ல பிக்-அப் மற்றும் மைலேஜுக்காகவே 110 சிசி கொண்ட இந்த இன்ஜினைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். கியர் மாற்றுவதும் ஸ்மூத்தாக இருக்கிறது. அதேபோல், முன் பக்க ஃபோர்க், பின் பக்கத்தில் உள்ள ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பரும் எப்படிப்பட்ட மேடு பள்ளமாக இருந்தாலும், சாதாரண சாலையில் பயணம் செய்வது போன்ற ஃபீலிங்கைக் கொடுக்கிறது. அதேபோல், ஓடோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர் போன்றவையும் எல்லாம் ஒரு பக்கமும், எலெக்ட்ரிக் சுவிட்ச்சுகள் மற்றொரு புறமும் அமைந்திருப்பது மிகவும் வசதியாக இருக்கிறது.

குறைகள்

மைலேஜ் லிட்டருக்கு 72 கி.மீ தரும் என்று சொன்னார்கள். இரண்டு சர்வீஸ் செய்துவிட்டேன். ஆனால், இதுவரை ஹைவேயில் 55-60 கி.மீ, சிட்டியில் 50 கி.மீ-க்கும் குறைவாகவே தருகிறது. பைக்கின் சின்னச் சின்ன உதிரி பாகங்கள், ஃபாஸ்ட்னர்ஸ் போன்றவை சீக்கிரமே துருப்பிடித்து விடுகின்றன. இதனால், பைக்கின் அழகு கெட்டுவிடுகிறது. டிரம் பிரேக்குக்குப் பதில் டிஸ்க் பிரேக் கொடுத்திருந்தால், பிரேக்கிங் பவர் இன்னும் அதிகமாகி இருக்கும்.

கொடுத்த காசுக்கு எந்த விதத்திலும் குறை வைக்காத பைக் ட்ரீம் யுகா. எல்லாவற்றையும்விட பெரிய அட்வான்டேஜ் என்றால், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், முதுகு வலி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் பயணத்தை சொகுசாக மாற்றுகிறது. அதனால், தினமும் பைக்கில் அலையும் வேலை செய்பவர்களுக்கு ஏற்றது இந்த பைக்.

   க.பிரபாகரன்   >> பீரகா வெங்கடேஷ்