Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

Published:Updated:

பெயர் பரமசிவம்

 தொழில் வங்கி மேலாளர்

ஊர் திண்டுக்கல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் மாருதி எர்டிகா

வாங்கிய தேதி 02.01.13

ஓடோ மீட்டர் ரீடிங் 3,124 கி.மீ

பிடித்தது டிசைன், சீட்டுகளின் எண்ணிக்கை

பிடிக்காதது பம்ப்பர் உயரம்

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA
 ##~##

னக்குச் சொந்த ஊர் மதுரை. என்னோட மனைவி திண்டுக்கல்ல டீச்சரா இருக்காங்க. நானும் இதே ஊர்ல பேங்க் மேனேஜரா இருக்கேன். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. எங்க சின்னக் குடும்பத்துக்கு ஒரு கார் வாங்கலாம்னு முடிவு செஞ்சப்போ, முதன் முதல்ல வாங்கின கார் மாருதி 800. நான் மாருதி காரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம், சர்வீஸ்தான். மாருதியைப் பொறுத்தவரைக்கும், தடுக்கி விழுந்தா ஒரு சர்வீஸ் சென்டர் இருக்கும். எந்த ஊருக்குப் போனாலும், என்ன பிரச்னைனாலும் சமாளிக்க முடியும்ங்கிற தைரியம் இருக்கும். அதுதான் மாருதியோட பலம். அந்த காருக்குப் பிறகு ஹூண்டாய் சான்ட்ரோ வாங்கினேன். அதுவும் நல்ல கார்தான். ஒரு கட்டத்துல உடம்பு சரியில்லாத எங்க மாமனாருக்காக, கோயம்புத்தூருல இருக்குற ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி போய்வர வேண்டியதா இருந்தது. அந்தச் சமயத்துல, கார்ல அஞ்சு பேருக்கு மேல உக்கார முடியாம, பொண்ணுகள்ல யாரையாவது ஒருத்தரை வீட்டுல விட்டுட்டுப் போக வேண்டியதாயிடும். இது எங்களுக்குக் கஷ்டமா இருந்தது.

எதுக்காக எர்டிகா?

அதனால, குடும்பமே கூடி உக்கார்ந்து பேசி பெரிய கார் வாங்கலாம்னு முடிவு செஞ்சோம். எங்க முதல் செலக்ஷன் செவர்லே டவேராதான். ஆனா, அதுல ஒரு சிக்கல். அந்த கம்பெனிக்கு திண்டுக்கல்ல சர்வீஸ் சென்டர் இல்லை. மதுரைக்குத்தான் போகணும். அதனால, டவேராவை, பட்டியலில் இருந்து தூக்கி விட்டோம். எங்க லிஸ்ட்டில் அடுத்து இருந்தது - டொயோட்டா இனோவா. இதிலேயும் ரெண்டு பிரச்னை. ஒண்ணு - விலை. எங்க பட்ஜெட்டைவிட அதிகமா இருந்தது. ரெண்டாவது, பின் பக்க சீட் அகலம் குறைவா இருந்தது.

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

அப்புறம் மாருதி எர்டிகாவைப் பற்றி பத்திரிகைகள் மற்றும் வலைதளங்களில் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுல எர்டிகாவைப் பற்றிச் சொல்லியிருந்த விஷயங்கள், காரோட ஸ்டைல் எல்லாம் எனக்குப் பிடிச்சுப் போச்சு. அதனால, இந்த காரைப் பார்க்கலாம்னு ஷோ ரூம் போனோம்.

ஷோ ரூம் அனுபவம்?

திண்டுக்கல் மாருதி டீலரான பி.எல் மோட்டார்ஸ் ஷோ ரூம்ல காரைப் பார்த்தோம். கம்ப்யூட்டர் திரையில் பார்த்ததைவிட நேர்ல பார்த்தபோது இன்னும் அழகா இருந்தது. ஷோ ரூமுல இருந்தவங்க காரைப் பற்றித் தெளிவா சொன்னதோட மட்டுமில்லாம, குடும்பத்தோடு டெஸ்ட் டிரைவ்வும் கூட்டிட்டுப் போனாங்க. காரோட பெர்ஃபாமென்ஸ், இடவசதி, ஸ்டைல் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதைவிட முக்கியமா, எங்க பட்ஜெட்டுக்கு உள்ள காரோட விலை அடங்கிடுச்சு. உடனடியா கிரானைட் க்ரே கலர் காரை புக் பண்ணிட்டோம்.

இந்த வருஷத்தோட இரண்டாம் நாள் காரை டெலிவரி எடுத்தேன். இது வரைக்கும் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல ஓடிடுச்சு. இந்த காரோட அமைப்பு இனோவா மாதிரி இருக்கிறதால, 'என்ன சார் இனோவா எடுத்திட்டீங்களா?’ன்னு பார்க்கிறவங்க கேட்கிறாங்க. 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டுல இப்படி ஒரு காரை நெனைச்சுப் பார்க்கவே முடியலை. ஸ்டைலாவும் இருக்கு. பிக்-அப் அருமையா இருக்கு!

நான் செல்ஃப் டிரைவிங்தான் செய்றேன். கார் எடுத்த பிறகு ஒரு நாள் மதியம் 12 மணிக்கு திண்டுக்கலில் கிளம்பி 420 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற சென்னைக்கு சாயங்காலம் 6.30 மணிக்கே போயிட்டேன். பயணக் களைப்பு தெரியாத அளவுக்கு வசதியாவும் இருந்துச்சு.

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

பிடிச்சது?

கார்ல எனக்கு மிகவும் பிடிச்சது இடவசதிதான். எல்லா சீட்லயும் சிரமம் இல்லாம ரிலாக்ஸா உட்கார்ந்து பயணம் செய்ய முடியுது. காரோட ஸ்டைல், இன்டீரியர் எல்லாமே நல்லா இருக்கு.

பிடிக்காதது?

கார்ல எனக்குத் தெரிஞ்சு பெரிய குறை ஒண்ணும் இல்லை. இருந்தாலும், பம்பர் ரொம்ப கீழே இருக்கு. அதை இன்னும் கொஞ்சம் உயரமா வெச்சிருக்கலாம். பெரிய ஸ்பீடு பிரேக்கர்ல ஏறி இறங்கும்போது தட்டிடுமோன்னு பயமா இருக்கு. எக்ஸிக்யூட்டிவ் காரை இந்த விலைக்குக் கொடுக்குறதே பெரிய விஷயம். அதனால, வேற எந்தக் குறையும் எனக்குத் தெரியலை.

மைலேஜ், பெர்ஃபாமென்ஸ்?

மைலேஜைப் பொறுத்தவரை சிட்டி டிராஃபிக்ல லிட்டருக்கு 18 கி.மீ வரைக்கும் கிடைக்குது. ஹைவேஸ்ல லிட்டருக்கு 20 கி.மீ வரைக்கும் கிடைக்குது. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை அருமையா இருக்கு. எத்தனை கிலோ மீட்டர் போனாலும் அலுப்பு இல்லாம சொகுசா இருக்கு. டிரைவ் பண்றதுக்கும் ரொம்ப ஸ்மூத்தாவும் இருக்கு!

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA

இன்றைக்கு நடுத்தரக் குடும்பத்துக்குக் கனவாக இருக்குறது, எக்ஸிக்யூட்டிவ் கார்தான். வீட்டுல கார் இருந்தாலும், குடும்பத்துல அஞ்சு பேருக்கு மேல ஆள் இருந்தா தவிச்சுப் போயிடுறாங்க. பெரிய கார் வாங்க பட்ஜெட் இடிக்கும். அப்படிப்பட்ட நடுத்தரக் குடும்பத்தோட கனவை நனவாக்கும் கார்தான் மாருதி எர்டிகா. அதே மாதிரி, அதிக விலை கொடுத்து வாங்குற கார்கள்ல உள்ள அத்தனை வசதிகளும் இதிலேயும் இருப்பது கூடுதல் சிறப்பு.

ரீடர்ஸ் ரிவியூ - MARUTI ERTIGA