Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

வின்சென்ட், புதுச்சேரி

மோட்டார் கிளினிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக்

நான் யமஹா FZ-16 பைக் வாங்க விரும்புகிறேன். ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்தும் சேர்ந்த ஆல்-ரவுண்டர்தான் என்னுடைய சாய்ஸ். அதனால்தான் இந்த பைக்கைத் தேர்ந்தெடுத்தேன். இந்த பைக்கின் டெஸ்ட் டிரைவ் விவரங்கள் வெளியான மோ.வி இதழைத் தவறவிட்டு விட்டேன். இதன் பெர்ஃபாமென்ஸ் விவரங்களைச் சொல்ல முடியுமா?

மோட்டார் கிளினிக்

உங்கள் முடிவு சரியானதே! தற்போதைய 150 சிசி பைக்குகளில் ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்தும் கலந்த ஆல்-ரவுண்டர் பைக் யமஹா FZ-16. ஓட்டுதல் மற்றும் கையாளுமை, இன்ஜின் தரம், பில்டு குவாலிட்டி என அனைத்திலுமே சிறந்த பைக் யமஹா FZ-16. இதன் கியர் பாக்ஸ் செம ஷார்ப். டாப் கியரிலேயே நகரைச் சுற்றி வர திஞீ 16 பெர்ஃபெக்ட் சாய்ஸ். 0-60 கி.மீ வேகத்தை அடைய 5.59 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 109 கி.மீ. நகருக்குள் 41.4 கி.மீ-யும், நெடுஞ்சாலைகளில் 46.8 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.

ஜெயக்குமார், திண்டுக்கல்

மோட்டார் கிளினிக்

நான் புதிதாக கார் வாங்க இருக்கிறேன். இட வசதி அதிகம் கொண்ட, டிக்கியிலும் பொருட்கள் அதிகம் வைக்கக்கூடிய, விலையும் அதிகம் இல்லாத செடான் கார் வாங்க வேண்டும். மஹிந்திரா வெரிட்டோ டீசல், டொயோட்டா எட்டியோஸ் டீசல் ஆகிய இரண்டு கார்களையும் இறுதிப் பட்டியலில் வைத்திருக்கிறேன். இரண்டு கார்களில் எது ப்ளஸ்? எது மைனஸ்?

மோட்டார் கிளினிக்

இட வசதி மற்றும் டிக்கியில் பொருட்கள் வைக்க அதிக இடம்தான் உங்களது முக்கியத் தேவை எனும்போது, அதற்குச் சரியான கார் மஹிந்திரா வெரிட்டோதான். இதில் இருப்பது ரெனோவின் டீசல் இன்ஜின். அதனால், இன்ஜின் நம்பகத்தன்மை குறித்துக் கவலைப்பட வேண்டியது இல்லை. மேலும், ரெனோவின் டீசல் இன்ஜின் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதும் வெரிட்டோவின் ப்ளஸ். டொயோட்டா எட்டியோஸிலும் இட வசதியும், டீசல் இன்ஜின் தரும் மைலேஜும் அதிகம்தான் என்றாலும், வெரிட்டோ அளவுக்குத் தரமான பில்டு குவாலிட்டி எட்டியோஸில் இல்லை. அதேபோல் ஓட்டுதல் தரத்திலும் எட்டியோஸ், வெரிட்டோவிடம் தோற்றுவிடுகிறது.

முகமது ரபீக், திருச்சி

மோட்டார் கிளினிக்

நான் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறேன். ஸ்டைலான, அதே சமயம் மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக் வேண்டும். பவர்ஃபுல்லான பைக் வாங்கக் கூடாது என வீட்டில் சொல்லிவிட்டார்கள். பவர்ஃபுல் பைக் இல்லை என்றாலும், தினமும் கல்லூரிக்குச் சென்று வர ஸ்டைலான பைக் வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ஸ்டைலான, அதே சமயம் கொஞ்சம் பவர்ஃபுல்லான, மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக் வேண்டும் என்றால், ஹோண்டாவின் சிபி ட்விஸ்ட்டர் பைக்கை வாங்கலாம். இது லிட்டருக்கு 59 கி.மீ வரை மைலேஜ் தரும். ஆனால், மற்ற 100 சிசி பைக்குகளைவிட இதன் விலை கிட்டத்தட்ட 2,000 ரூபாய் அதிகம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நந்தகுமார், மதுரை

மோட்டார் கிளினிக்

நான் 2000-ம் ஆண்டு மாருதி ஜென் வைத்திருக்கிறேன். இதில் சில நேரங்களில் கிளட்ச்சை ரிலீஸ் செய்யும்போது, சட்டென காரே அமுங்குவதுபோல இருக்கிறது. ஏ.சி ஆன் செய்து இருக்கும்போதுதான் இந்தப் பிரச்னை. அதேபோல், ரிவர்ஸ் கியர் மாற்றும்போது சில நேரங்களில் அதிகச் சத்தம் எழுப்புகிறது. இதற்கு என்ன காரணம்?

மோட்டார் கிளினிக்

பழைய கார் என்பதால், கிளட்ச் பிரஷர் ப்ளேட் அல்லது ரிலீஸ் பேரிங் வீக்காக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், கிளட்ச் அசெம்பிளியை ஒருமுறை செக் செய்வது நல்லது. ரிவர்ஸ் கியர் பிரச்னைக்கு கியர்பாக்ஸைச் சரிபார்ப்பது அவசியம்.

சங்கர், சேலம்

மோட்டார் கிளினிக்

நான், ஹோண்டா யூனிகார்ன் பைக் வைத்திருக்கிறேன். இதன் பின் பக்க டயர்கள் சிறிதாக இருப்பதால், சடர்ன் பிரேக் அடிக்கும்போது ஸ்கிட் ஆகிறது. அதனால், யமஹா FZ-16 பைக்கில் இருப்பது போன்று அகலமான 140 செக்ஷன் டயரை வாங்கிப் பொருத்தலாம் எனத் திட்டமிட்டு இருக்கிறேன். டயரை மாற்றலாமா?

மோட்டார் கிளினிக்

டயர்களை மாற்றும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். பெரிய டயரைப் பொருத்துவது முதலில் உங்கள் பைக்குக்கு செட் ஆகாது. மேலும், வீலுக்குப் பொருத்தம் இல்லாத டயரை மாற்றும்போது பைக்கின் ஓட்டுதல் மற்றும் கையாளுமை பாதிக்கப்படும் என்பதோடு, மைலேஜும் குறைந்துவிடும். உங்கள் பைக்கில் தற்போது என்ன அளவு டயர் இருக்கிறதோ, அதே அளவுகொண்ட வேறு பிராண்ட் டயர்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.

ஜான்சன், சென்னை

மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் பத்து லட்சம். ஹோண்டா சிட்டி அல்லது ரெனோ ஸ்காலா டீசல் ஆகிய இரண்டு கார்களில், எந்த காரை வாங்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறேன். உங்களின் முடிவு என்ன?

மோட்டார் கிளினிக்

ரெனோ ஸ்காலாதான் பெஸ்ட் சாய்ஸ். ஹோண்டா சிட்டியில் டீசல் இன்ஜின் இல்லை. மேலும், தற்போதைய மாடல் இந்த ஆண்டு இறுதியோடு மாற்றப்பட்டு, புது மாடல் வர இருக்கிறது. அதனால், இந்த நேரத்தில் ஹோண்டா சிட்டியை வாங்குவது நல்ல சாய்ஸ் இல்லை. ரெனோ ஸ்காலா கடந்த ஆண்டுதான் வெளிவந்த புத்தம் புது கார். இட வசதி மற்றும் மைலேஜிலும் சிறந்த கார் என்பதால், ஸ்காலா வாங்குவதே சரியான முடிவாக இருக்கும்.

நவீன்குமார், ஈரோடு

மோட்டார் கிளினிக்

ஃபோர்டு ஃபியஸ்டா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை படங்களை மோட்டார் விகடனில் இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பார்த்ததாக ஞாபகம். அந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்?

மோட்டார் கிளினிக்

ஃபியஸ்டா ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் திட்டம் ஃபோர்டிடம் இருந்தது. அதனால்தான் அந்த கார் இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், இந்தியாவில் மினி எஸ்யூவி/எம்பிவி கார்களுக்கென புது மார்க்கெட் முளைத்ததால், ஃபியஸ்டா ஹேட்ச்பேக்கின் அறிமுகத்தைத் தள்ளிவைத்துவிட்டு, ஈக்கோஸ்போர்ட் காரைத் தயாரிக்கத் துவங்கிவிட்டது ஃபோர்டு. அதனால், ஃபோர்டு பியஸ்டா ஹேட்ச்பேக், இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்கு வராது!