Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

Published:Updated:
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்
 ##~##

''நான் நாத்திகவாதி இல்லை; ஆனால், பகுத்தறிவுவாதி என்று எனக்குப் பெயருண்டு! என்னைப் பொறுத்தவரை, விவேகானந்தர் ஆன்மிகவாதி இல்லை. அவர் ஒரு பகுத்தறிவுவாதியும் கூட!'' என்று திடுதிப்பென்று புரியாதபடி பஞ்ச் டயலாக் பேசினார் புதுக்கோட்டை வாசகர் கோமதிசங்கர். இந்த முறை ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்கு, ஏதாவது விவேகானந்தர் நினைவிடத்திற்குப் போக வேண்டும் என்கிற தன் ஆசையைத்தான் இப்படி வெளிப்படுத்தினார் கோமதிசங்கர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''விவேகானந்தர் நினைவிடம் என்றால், அனைவருக்கும் கன்னியாகுமரிதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், ராமேஸ்வரம் அருகே இருக்கும் 'குந்தகால்’ எனும் இடத்தில், விவேகானந்தருக்கு ஒரு பளபள மணி மண்டபம் இருப்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை! டூர் ஸ்பெஷலுக்கு என் ஃபேமிலியோட குந்தகாலுக்குப் போவோம்... வாங்க!'' என்று தனது சில்வர் நிற டாடா இண்டிகோ மான்ஸாவைத் தயார் செய்துவிட்டு, மனைவி புவனேஸ்வரி மற்றும் ஒன்றரை வயது மகன் ரோலண்டையும் நமக்கு அறிமுகப்படுத்தினார் கோமதிசங்கர்.

கோமதிசங்கர் புதுக்கோட்டையில் பிளாட் புரொமோட்டர். மனைவி புவனேஸ்வரி பியூட்டி பார்லர் அதிபதி. ''கோமு... மதுரை திருமலை நாயக்கர் மகால் வழியா நாம குந்தகால் போலாம்ப்பா... அங்கதான் ஐஸ்வர்யாராய், சிம்ரன் சாங்ஸ் எல்லாம் ஷூட்டிங் எடுத்தாங்க!'' என்று கணவரிடம் கேட்டார் புவனேஸ்வரி.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

அவரின் ஆசைப்படியே புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை, திருச்சி, மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், குந்தகால் என்று பயணத்துக்கான தடத்தைத் தேர்ந்தெடுத்தார் கோமதி சங்கர்.

11 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்தோம். மான்ஸாவில் இருப்பது புதிய டாடா இண்டிகா விஸ்டா டி90-யில் இருக்கும் அதே டீசல் இன்ஜின்தான். சின்ன கார் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் செடானுக்குப் போதவில்லை என்கிற குறை இருந்தாலும், டூர் என்று வரும்போது, இட வசதியில் டாடா மான்ஸாவை அடித்துக்கொள்ள முடியாது. உடன் வந்த ஒரு வயது வாண்டு ரோலண்ட், ஓடிப் பிடித்து விளையாடும் அளவு உள்ளே எக்கச்சக்க இட வசதி இருந்தது. சென்டர் கன்ஸோலின் டனல் பின் பக்க சீட் வரை நீண்டிருப்பது... நடுவில் அமர்பவருக்கும், ரோலண்ட்டுக்கும் தொந்தரவாக இருந்தது.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில், சில வெள்ளைக்காரர்கள் புரொஃபஷனல் போட்டோகிராபர்களாய் அவதாரம் எடுத்திருந்தனர். கார் பார்க்கிங், மல்லிகைப்பூ, கைடு ஃபீஸ் என்று எக்ஸ்ட்ராவாக சில நூறு வசூல் செய்து, தங்கள் கடமையைச் செவ்வனே செய்தார்கள் நம் ஊர்க்காரர்கள். நாயக்கர் மஹாலில் போட்டோ ஷூட் முடித்துவிட்டு, நடுவில் ஒரு சௌராஷ்டிரா ஹோட்டலில் அசைவ உணவுகளை ஒரு பிடிபிடித்தோம். மானாமதுரையைத் தாண்டி பரமக்குடி நோக்கி மான்ஸா பறந்துகொண்டு இருந்தது. பரமக்குடி பெயர்ப் பலகையைப் பார்த்ததும், சட்டென்று உலக நாயகன் ஞாபகத்தில் வந்தார். ''இந்நேரம் வீடு, சொத்துக்களை தலைவர் மீட்ருப்பார்ல கோமு?'' என்று புவனேஸ்வரி, கணவரிடம் வாக்குவாதம் நிகழ்த்திக்கொண்டு இருந்தார்.

பரமக்குடி தாண்டி ராமநாதபுரத்தை நோக்கி ஸ்டீயரிங்கைத் திருப்பினோம். மான்ஸாவில், சென்டர் கன்சோலுக்கு மேலே 'இன்ஸ்டன்ட் மைலேஜ்’ டிஸ்ப்ளேவில், நாம் ஆக்ஸிலரேட்டரை மிதிப்பதற்கு ஏற்ப மைலேஜ் விபரம் மாறிக் கொண்டே இருக்கிறது. நம் கணக்குப்படி, நெடுஞ்சாலையில் மான்ஸாவின் மைலேஜ் கிட்டத்தட்ட 24.5 கிடைத்தது. நமது 650 கி.மீ. பயணத்துக்கு, மான்ஸாவுக்காக நாம் டீசல் போட்டது 2,000 ரூபாய்க்குள் அடங்கிவிட்டது. பயணம் முடிந்தது போக, ஃப்யூல் மீட்டர் இன்னும் அரை டேங்க் டீசல் இருப்பதாகச் சொல்லியது. ''2,000 ரூபாய்க்குள் ஒரு அட்டகாசப் பயணம்னு தலைப்பு வெச்சுக்கலாமே!'' என்று யோசனை சொன்னார் கோமதிசங்கர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

ஹைவேஸில் ஆடு - மாடுகள், மனிதர்கள் குறுக்கீடுகள் எல்லாம் இருந்ததால், சர்வ ஜாக்கிரதையாக காரை ஓட்டினார் கோமதிசங்கர். ''இதுக்குத்தான் ஏபிஎஸ் பிரேக் உள்ள மாடலை வாங்குன்னு சொன்னேன்!'' என்று கணவரைக் கண்டித்தார் புவனேஸ்வரி. அந்த நேரம் எங்கிருந்தோ திடுப்பென்று ரோட்டில் வந்து குதித்த ஒரு ஆட்டுக் குட்டி, கோமதி சங்கரின் சாதுர்யமான டிரைவிங்கால் தப்பித்தாலும், எதிரே வந்த எட்டியோஸில் அடிபட்டதில்... காருக்குள் சிறிது நேரம் அமைதி.

நடுவில் அடை மழை, சூடான காபி, ஆனியன் பக்கோடா என்று நாம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடைந்தபோது, இருட்டி இருந்தது. பாலத்தில் இறங்கி... பேரழகாகவும், ரொம்ப பயமாகவும் இருந்த கடலை இருட்டில் ரசித்தபடி இருந்தனர் கோமதி சங்கர் குடும்பத்தினர்.

ராமேஸ்வரத்தில் கடலை ஒட்டியபடி இருந்த காட்டேஜில் ரூம் புக் செய்து, உணவு அருந்தச் சென்றோம். ''சாரி சார்.. இங்கே எங்கேயும் ரெஸ்டாரன்ட் இல்லை. ஒன்லி ரூம் சர்வீஸ் மட்டும்தான்!'' என்று சிரித்தார் ஹோட்டல் ஊழியர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

கஷ்டப்பட்டு ஒரு வழியாய் டிபனையும், மறுநாள் காலை பிரேக் ஃபாஸ்ட்டையும் முடித்துவிட்டு, பாம்பன் பாலத்தில் நடை போட்டோம். சரியாக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் நம்மைக் கடந்து சென்றது. ''கோமு, எனக்கும் இது அட்வென்ச்சர் ட்ரிப்தான்!'' என்று அசராமல் டைமிங் கமென்ட் அடித்தார் புவனேஸ்வரி.

இப்போது கருவாட்டுப் பட்டறைக்குள் நுழைந்து இருந்தோம். மீன் வியாபாரத்தைவிட ராமேஸ்வரத்தில் கருவாட்டுக் கொடிதான் உயர்ந்து பறக்கிறது. ''புவனேஸ்வரிங்கிற பெயருக்குப் பதிலா பூனைஸ்வரினு வெச்சுருக்கலாம். கருவாடுன்னா இவளுக்கு உசுரு!'' என்று மனைவியைப் பற்றி கோமதி சங்கர் சொல்ல, அவருக்கு காதலோடு 'அவ்வ்வ்வே...’ என்று பழிப்புக் காட்டினார் புவனேஸ்வரி.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுக்கோட்டை to குந்தகால்

தமிழ்நாட்டின் கருவாட்டு இறக்குமதி பெரும்பான்மையாக இங்கிருந்துதான் தொடங்குகிறது. வெளியூர் வியாபாரிகள், ஒரு கிலோ 400 ரூபாய்க்கு கருவாடு வாங்கி, வெளியே 2,500 ரூபாய் வரை விற்று லாபம் பார்ப்பதாகச் சொன்னார் ஒரு உள்ளூர் கருவாட்டு மேக்கர்.

சென்னைக்கும் இங்கும் சில மீன்களின் பெயர் மட்டும் மாறுபடுகிறது. சென்னையின் சீலா மீன் ராமேஸ்வரத்தில் 'மாவ்லா’-வாகவும், வஞ்சிரம் - 'நெய்மீன்’ ஆகவும் அறியப்படுகிறது. மதிய உணவாக கொஞ்சூண்டு சாதத்துடன் நிறைய மாவ்லா மீன்களை லவட்டிவிட்டுக் கிளம்பினோம். தனுஷ்கோடி செல்லும் சாலையில், சுவிட்சர்லாந்துவாசிகள் சிலர், புல்லட்டில் 'பட் பட்’ எனப் பறந்து கொண்டு இருந்தனர். விசாரித்ததில், டெல்லியில் புல்லட்டுகளை வாடகைக்கு எடுத்து, இந்தியா முழுவதும் ரவுண்ட் அடிப்பதாகச் சொன்னார்கள். அவர்களை டாடா காட்டி வழியனுப்பியபடி, குந்தகால் நோக்கிச் சீறினோம்.

குந்தகால் -  நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 1893-ல் விவேகானந்தர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கடல் வழிச் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு, நீராவிப் படகு மூலம் குந்தகாலில் இறங்கினார். அப்போதைய ராமநாதபுரம் மன்னர், தனது படை பரிவாரங்களுடன் விவேகானந்தரைக் குத்துக்காலிட்டு அமர்ந்து வரவேற்றார். எனவே, இதற்கு 'குத்துகால்’ என்று பெயர் வைத்தார்கள். நாளடைவில் இது 'குந்தகால்’ ஆக மாறியது என்று ஸ்தல வரலாறு சொன்னார் மணி மண்டப ஊழியர்.

தகதகவென்று ஆரஞ்சுக் கலவை நிறத்தில் மின்னியது விவேகானந்தரின் மணிமண்டபம். உள்ளே விவேகானந்தரின் அரிய புகைப்படங்களும், சொற்பொழிவுகள் கொண்ட புத்தகங்களும் இருந்தன. பக்கத்தில் குழந்தைகளுக்கு என கலர் கலரான மீன்கள் விளையாடும் அக்வாரியம் இருக்கிறது. கடல் குதிரை, ஆக்டோபஸ், ஈல் என்று அத்தனை கடல் வாழ் உயிரினங்களும் மினியேச்சராக கண்ணாடிப் பேழையில் மிரட்டிக்கொண்டு இருந்தன. சுற்றுலா வந்த குழந்தைகள், ''சொல்லுங்க டாடி... ஈல் ஏன் நீளமா இருக்கு? ஆமை ஏன் ஸ்ட்ராங்கா இருக்கு?'' என்று நான்-ஸ்டாப் டவுட்டுகளால், தந்தைகளை ஒரு வழி பண்ணிக்கொண்டு இருந்தனர்.

சுற்றிலும் கடல். நடுவே மணிமண்டபம். நீளமான மண் சாலை. இதில் கார் ஓட்டக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். குந்தகால் விவேகானந்தருக்கும், சுறா சிலைக்கும் பைபை சொல்லிவிட்டு, ராமேஸ்வரம் பாலத்தில் மறுபடியும் ஒரு போட்டோ ஷூட். இந்த முறை மாலை வெயிலில் கடலும், மீன்பிடிப் படகுகளும், தண்டவாளமும் கொள்ளை அழகாகத் தெரிந்தன.

ரிட்டர்ன் ரூட்டாக ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக் குடி, திருமயம், புதுக்கோட்டை வழியைத் தேர்ந்தெடுத்ததால், நடுச்சாமத்துக்கு முன்பே புதுக்கோட்டை வந்துவிட்டது. ''வீட்ட்டுக்கு வேணா.... மாம்.. மாமா... இன்னொருக்க... ட்டூரு.. ஃபிஷ்ஷ§...'' என்று தனது குட்டி வாயை அழகாக கோணலாக்கி, நம்மைப் போல மறைக்காமல், வெளிப்படையாக அழ ஆரம்பித்து இருந்தான் ரோலண்ட்.