Published:Updated:

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

Published:Updated:
கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்
 ##~##

மோட்டார் விகடன் 'டூர் ஸ்பெஷல்’ இதழ் தயாராகிக்கொண்டு இருந்த சமயம், புதிதாக அறிமுகமான டாடா இண்டிகா விஸ்டா டி90 கார் நம் அலுவகத்துக்கு வந்தது. காரை முழுமையாக டெஸ்ட் செய்யவும் வேண்டும்; அதே சமயம் கிரேட் எஸ்கேப் பயணமும் செல்ல வேண்டும் என்பதால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரேட் எஸ்கேப் டெஸ்ட் டிரைவ் என ஒன்றாகச் செய்துவிடுவோம் என முடிவு செய்தேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆந்திர எல்லையில் உள்ள தடாவில் இருந்து இடது பக்கம் திரும்பி, ரேணிகுண்டா வழியாக கடப்பா சென்றுவிட்டு, அங்கிருந்து நந்தி கோயிலுக்குப் பெயர் போன நந்தியால் வழியாக, கிட்டலூர் மலைப் பாதை பிடித்து மீண்டும் சென்னை திரும்புவதுதான் ஸ்கெட்ச். விஸ்டா டி-90-யின் டர்போ, மெல்லிய விசில் ஓசையுடன் பயணத்தைத் துவங்கியது. அதிகாலை என்பதால் நம் சிங்காரச் சென்னையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. பெட்ரோல் பங்க்கில் டீசல் டேங்க்கை முழுதும் நிரப்பிக்கொண்டு தடாவை நோக்கிப் பயணமானோம். அந்த அதிகாலையிலும் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் மற்றும் பேருந்துகள் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. இன்னொருபுறம், சாலை வேலைகள் நடந்துகொண்டு இருந்ததால், நிறைய இடத்தில் 'மாற்றுப் பாதையில் செல்லவும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதனால், நிறைய இடத்தில் சிமென்ட் பிளாக்குகள் சாலையில் அங்கும் இங்கும் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆகையால், தடாவைத் தாண்டும்வரை அதீத தடைகள்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

தடாவை அடைந்து இடது பக்கம் திருப்பதி செல்லும் சாலையில் திரும்பி, ரேணிகுண்டாவுக்கு விஸ்டா

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

டி90-யை விரட்டினேன். இந்தப் புதிய விஸ்டா டி90-ல் இருப்பது மான்ஸா டீசலில் இருக்கும் அதே 90 bhp ஃபியட் குவாட்ராஜெட் டீசல் இன்ஜின்தான். என்னதான் விஜிடி டர்போ என்றாலும், 1900 ஆர்பிஎம் தாண்டும்வரை டர்போ லேக் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது. அதன்பின், டார்க் வெளிப்படுவது மிக அதிகமாக இருக்கிறது. இப்படி திடீரென அதிகமாக வெளிப்படும் டார்க் 3,300 ஆர்பிஎம்-க்குப் பிறகு சுத்தமாகக் காணோம். அதற்குப் பிறகு இன்ஜினை 'ரெவ்’ செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

ரேணிகுண்டாவில் சின்ன இடைவேளை எடுத்துக்கொண்டு, கடப்பாவை நோக்கிக் கிளம்பினோம். விஸ்டா டி90-யின் சஸ்பென்ஷனை தனியாக டெஸ்ட் செய்யவே தேவை இருக்கவில்லை. அந்த அளவுக்கு இருந்தது ரோடு. மாநில நெடுஞ்சாலையான இது சிறிது தூரம் நன்றாக இருக்கிறது. பின்னர், மேடு பள்ளங்கள். திரும்பவும் நல்ல சாலை எனக் கலவையாக இருந்தது. மேலும், இடையில் இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் மூன்று வேகத் தடைகள். அநேகமாக ஒரு 45 வேகத் தடைகளையாவது கடந்து இருப்போம். டாடா நிறுவனம் விஸ்டா டி-90-க்கு ஒரு தனித்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், சஸ்பென்ஷன் டாம்பர்களை இறுக்கி அமைத்திருக்கிறார்கள். அதனால், வழக்கமாக விஸ்டாவில் இருக்கும் பாடி ரோல் டி-90-ல் மிக மிகக் குறைவு. அதனால், திருப்பங்களில், காரை வேகமாக வளைத்துத் திருப்பி ஓட்டினாலும், காரின் 'சென்டர் - ஆஃப்-க்ராவிட்டி’ அதன் நடுப் புள்ளியில் இருந்து அதிகம் விலகவில்லை. ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருந்தது.

வழியில் வோன்டிமிட்டா என்ற இடத்தில் இருந்த அழகான கோதண்டராம சுவாமி கோயிலில், ஒரு மினி போட்டோஷூட்டை முடித்துவிட்டு, பின்னர், கடப்பாவை அடைந்தேன். அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு நந்தியால் நகருக்குக் கிளம்பினால், உச்சி வெயிலில் கண்கள் கூச ஆரம்பித்தன.

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்
கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

ஒருவழியாக, மாலை நந்தியாலை அடைந்தேன். பொருளாதாரச் சீர்திருத்தத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பெயர், கின்னஸில் இடம் பெறும் வகையில் அதிக வோட்டு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைத்த ஊர் இது.

அடுத்த நாள் காலை, அங்கிருந்து கிளம்பி மறுபடியும் கிட்டலூர் செல்ல ஆரம்பித்தோம். கிட்டலூர்

கிரேட் எஸ்கேப் - சென்னை to நந்தியால்

செல்லும் வழிதான் இந்தப் பயணத்தின் முக்கிய அம்சம். கிட்டத்தட்ட 54 கி.மீ தூரம் இருக்கும் இந்த மலைப் பாதை, நல்லமல்லா காட்டுக்குள் வளைந்து நெளிந்து செல்கிறது. சாலையும் படு சூப்பர். இதே வழியில்தான் விஜயவாடா - குண்டக்கல் ரயில் பாதை செல்கிறது. ஊட்டி ரயில் எப்படி ஒரு அருமையான பயண அனுபவத்தைத் தருகிறதோ, கிட்டத்தட்ட அதே அனுபவத்தைத் தருமாம் இந்த ரயில் பயணம்.

கிட்டலூரில் இருந்து பத்வேல் என்ற ஊரின் வழியாக நெல்லூர் அடைந்து அங்கே தங்க நாற்கரச் சாலையில் இணைந்தால், சென்னை வரை ஒரே நேர் ரோடு.

ஆந்திரா முழுக்கச் சுற்றிவிட்டு திரும்பும்போது, சற்று ரிலாக்ஸ்டாக ஓட்ட நினைப்பவர்கள் இந்தச் சாலையில் வந்தால் அலுப்பு தெரியாது. இந்தப் பகுதியில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள், ஆகஸ்டு முதல் நவம்பர் இடையில் உள்ள சீசனில் சென்று வருவதுதான் சரியாக இருக்கும்!