Published:Updated:

ஏப்ரில்லாவின் அதிரடி!

ஏப்ரில்லாவின் அதிரடி!

ஏப்ரில்லாவின் அதிரடி!

ஏப்ரில்லாவின் அதிரடி!

Published:Updated:

லகின் அதிவேக பைக் ரேஸ் போட்டியான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியின் 2013 சீசன் துவங்கி விட்டது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துவங்கிய வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் கடைசிச் சுற்று, நவம்பர் 17-ம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 15 சுற்றுகள் நடைபெற இருக்கும் நிலையில், கார்லோஸ் செக்கா, மார்க்கோ மெலாண்ட்ரி, யூஜின் லாவெர்ட்டி ஆகிய முன்னணி வீரர்கள் கோதாவில் களம் இறங்கி இருக்கின்றனர். நடப்பு சாம்பியன் மேக்ஸ் பியாஜி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த ஆண்டு இளம் வீரர்களுக்கிடையே கடுமையான போட்டி நடக்கும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சூப்பர் பைக் ரேஸில், த்ரில்லிங் சேஸிங் கமென்ட்ரி இங்கே...

ஏப்ரில்லாவின் அதிரடி!

ஆஸ்திரேலியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பர் பைக் ரேஸின் முதல் சுற்று, ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்றது. சூப்பர் பைக் ரேஸின் முதல் சுற்று என்பதால், ஆஸ்திரேலியாவில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். டுகாட்டி பனிகாலே பைக்குடன் களம் இறங்கிய கார்லோஸ் செக்கா, தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார். ஏப்ரில்லா ஆர்.எஸ்.வி-4 பைக்குடன் பறந்த யூஜின் லாவெர்ட்டி இரண்டாம் இடத்தில் இருந்தும், ரெட் டெவில்ஸ் ரோமா அணியின் மைக்கேல் ஃபெப்ரிஸியோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். 'ரெட் டெவில்ஸ் ரோமா’ என்பது தனியார் அணி என்றாலும், மைக்கேல் ஃபெப்ரிஸியோவின் பறக்கும் மெஷினும் ஏப்ரில்லா ஆர்.எஸ்.வி-4 பைக் தான்.

ஏப்ரில்லாவின் அதிரடி!

ரேஸ் 1:

 ##~##

டுகாட்டி பனிகாலே முதல் இடத்தில் இருந்து சீறிப் பறந்தாலும் ஏப்ரில்லாவின் ஆதிக்கமே ரேஸ் முழுவதும் நிரம்பி இருந்தது. இரண்டாம் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஏப்ரில்லா அணியின் யூஜின் லாவெர்ட்டி, ரேஸின் ஆரம்பத்திலேயே முதல் இடத்துக்கு முன்னேற, கார்லோஸ் செக்கா பின்தங்கினார். மொத்தம் 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸின் பனிரெண்டாவது லேப்பின்போது, மிகப் பெரிய விபத்தில் சிக்கினார் கார்லோஸ் செக்கா. முன்னால் சென்றுகொண்டு இருந்த மார்க்கோ மெலாண்ட்ரியை முந்த முயன்ற கார்லோஸ் செக்காவின் டுகாட்டி பனிகாலே பைக், மெலாண்ட்ரியின் பிஎம்டபிள்யூ பைக்கின்மீது மோத... கார்லோஸ் செக்கா பைக்கில் இருந்து அந்தரத்தில் பறந்து தரையில் தலை குப்புற விழுந்தார். கடுப்பான மெலாண்ட்ரி, கார்லோஸ் செக்காவை நோக்கி ஆவேசமாகப் போக, செக்கா நினைவு இழந்து கிடந்தார். உடனடியாக ரேஸ் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் செக்கா.

மீண்டும் ரேஸ் துவங்க, முதல் இடத்தில் சென்று கொண்டிருந்த யூஜின் லாவெர்ட்டியை முந்தினார் ஏப்ரில்லா அணியின் மற்றொரு வீரரான சில்வியோ குன்ட்டோலி. இதனால், முதல் இடத்துக்கான போட்டி கடுமையானது. குன்ட்டோலி, லாவெர்ட்டி, ஃபெப்ரிஸியோ ஆகிய மூவரும் முதல் இடத்துக்குப் போட்டி போட, இறுதியில் 1 விநாடி வித்தியாசத்தில் வென்றவர் குன்ட்டோலி. லாவெர்ட்டி இரண்டாம் இடமும், பெப்ரிஸியோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஏப்ரில்லாவின் அதிரடி!

ரேஸ் 2:

கார்லோஸ் செக்கா ரேஸில் இல்லாததால், ஏப்ரில்லா அணியின் யூஜின் லாவெர்ட்டி முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். குன்ட்டோலி ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ஆரம்பம் முதலே கடுமையான போட்டா போட்டி நிலவியது. டாம் சைக்ஸ், மார்க்கோ மெலாண்ட்ரியை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு விறுவிறுவென இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் குன்ட்டோலி. இதனால், மீண்டும் ஏப்ரில்லா பைக்குகளுக்கு இடையே போட்டி துவங்கியது. இறுதியில் 0.4 விநாடிகள் வித்தியாசத்தில் குன்ட்டோலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்தார் யூஜின் லாவெர்ட்டி. பிஎம்டபிள்யூவின் மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடம் பிடித்தார்.

முதல் சுற்று முடிவடைந்து இருக்கும் நிலையில், ஏப்ரில்லா அணியின் லாவெட்ர்டி, குன்ட்டோலி ஆகிய இருவரும் 45 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளனர். ஏப்ரில்லா தொடர்ந்து வெற்றி பெறுமா அல்லது பிஎம்டபிள்யூ, கவாஸாகி, ஹோண்டா அணிகள் மீண்டும் முழு பலத்துடன் திரும்புமா என்பது, போகப் போகத்தான் தெரியும்!

சார்லஸ்