Published:Updated:

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

Published:Updated:

ந்த ஆண்டின் ஃபார்முலா-1 சீசன் ஆஸ்திரேலியாவில் துவங்கிவிட்டது. மீண்டும் வெட்டல் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன். இந்த சீசனில் நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் என இந்திய ரேஸ் வீரர்கள் யாரும் இல்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், மார்ச் 17 அன்று 2013-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 ரேஸின் முதல் சுற்று நடைபெற்றது. நடப்பு சாம்பியனும், ரெட்புல் அணி வீரருமான செபாஸ்ட்டியன் வெட்டல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றார். வெட்டலின் சக அணி வீரரான மார்க் வெப்பர் இரண்டாம் இடத்தில் இருந்தும், மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

முதல் இரண்டு இடங்களில் இருந்தும் ரெட்புல் அணி வீரர்களே ரேஸைத் துவக்கியதால், வெற்றியாளர் எப்படியும் ரெட்புல் அணிதான் என்ற எதிர்பார்ப்புடன் ரேஸ் துவங்கியது. எல்லோரது எதிர்பார்ப்பைப் போலவே முதல் லேப்பில் சீறிப் பறந்தது செபாஸ்ட்டியன் வெட்டலின் ரெட்புல் கார். ஆனால், இரண்டாம் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மார்க் வெப்பரால், தனது இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை. முதல் லேப்பிலேயே வெப்பர் பின்தங்க... நான்காம் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஃபிலிப் மாஸா இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய கிமி ராய்க்கோனின் லோட்டஸ் ரெனோ கார், முன்னால் இருந்த மெர்சிடீஸ் மற்றும் ஃபெராரி கார்களுடன் கடுமையாகப் போட்டி போட ஆரம்பித்தது. இதற்கிடையே லூயிஸ் ஹாமில்ட்டனின் மெர்சிடீஸ் ராக்கெட் வேகத்தில் சீற ஆரம்பிக்க... ரெட்புல், ஃபெராரி கார்கள் பின்தங்கின. கிடைத்த இடைவெளியில் எல்லாம் புகுந்து வந்த கிமி ராய்க்கோனன், முதல் இடத்தில் சென்றுகொண்டு இருந்த லூயிஸ் ஹாமில்ட்டனை 30-வது லேப்பின்போது முந்தினார். இரண்டாம் இடத்துக்கான போட்டியில் லூயிஸ் ஹாமில்ட்டனின் காரை முந்த முயன்றது அலான்சோவின் ஃபெராரி. இந்த இடிதடியில் ஹாமில்ட்டனின் கார் டயரில் ஓட்டை விழ.... ஹாமில்ட்டனின் கார் வேகம் குறைந்தது.

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

இதனால் கிமி ராய்க்கோனன் - அலான்சோ என சீன் மாறியது. அலான்சோ எவ்வளவு முயன்றும் ராய்க்கோனனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதற்கிடையே ரேஸின் இறுதி கட்டத்தின்போது, கிமி ராய்க்கோனின் கார் டயரின் ஒரு பகுதி கிழிந்து தொங்க ஆரம்பித்தது. இதனால், அலான்சோ வெற்றி பெற்றுவிடுவார் என எல்லோரும் எதிர்பார்க்க... கிழிந்த டயருடனேயே தொடர்ந்து ரேஸ் ஓட்டிய ராய்க்கோனன் வெற்றி பெற்றார். மொத்தம் 58 லேப்புகள்கொண்ட இந்த ரேஸின் இறுதியில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 3 விநாடிகளில் வெற்றிக் கோட்டைத் தொட்டு வெற்றி பெற்றார் கிமி ராய்க்கோனன். 12.4 விநாடிகள் பின்தங்கியிருந்த அலான்சோ இரண்டாம் இடம் பிடிக்க, செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாம் இடம் பிடித்தார். ஃபிலிப் மாஸாவுக்கு நான்காவது இடமே மிஞ்சியது.

கிமி ராய்க்கோனனின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அவரது டயர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டயர் மாற்ற மற்றும் வீல்களை சரிசெய்ய கிமி ராய்க்கோனுக்குப் பின்னால் வந்த ஆறு வீரர்களும் மூன்று முறை பிட் ஸ்டாப்புக்குள் நுழைய, கிமியின் கார் இரண்டு முறை மட்டுமே பிட் ஸ்டாப்பை எட்டிப் பார்த்தது. இதுதான் பெரிய போட்டிகள் எதுவும் இன்றி ராய்க்கோனனை வெற்றி பெற வைத்தது.

மீண்டும் கிமி ராய்க்கோனன்!

முதல் ரேஸில் லோட்டஸ் வெற்றி பெற்றுவிட்டாலும் அடுத்தடுத்த ரேஸ்களில் ஃபெராரி, ரெட்புல் மற்றும் மெர்சிடீஸ் அணிகளுக்கு இடையேதான் போட்டி அதிகம் இருக்கும் என்பது ரேஸ் விமர்சகர்களின் கருத்து. விமர்சனங்களை உடைத்து லோட்டஸ் தொடர்ந்து வெற்றி பெறுமா அல்லது ரெட்புல், ஃபெராரி அணிகள் லோட்டஸின் கனவை தகர்த்துவிடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

சார்லஸ்