Published:Updated:

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

Published:Updated:
கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு
 ##~##

மைதியான இடம்; ஆட்கள் அதிகம் இல்லாத ஓய்வு விடுதி; சற்று குளிரான வானிலை - இவை அனைத்தும் மிக அவசியம் எனத் தொடங்கியது எனது தேடல். மூணாறு, பொதுவாக மழைக் காலத்தில்தான் மிக அழகாக இருக்கும் என்று சொல்வார்கள். அதையும் பொருட்படுத்தாமல், கூகுள் தேடலில் வானிலை அறிக்கையைத் தேடினேன். குறைந்தபட்ச வானிலை 15 - 20 டிகிரி செல்சியஸ் வரை எனக் காட்டியது. சென்னையில் 35 டிகிரி வெப்பத்தில் தகிக்கும் நமக்கு, இந்த தட்பவெப்பம் சூப்பர் இல்லையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பின்பு, தங்கும் விடுதியைத் தேர்ந்தெடுக்க, Cleartrip, Makemytrip, Experia ஆகிய இணையதளங்களில் தேடினேன். என்னென்ன வசதிகள் இருக்கின்றன. எவ்வளவு வாடகை போன்ற அனைத்துத் தகவல்களும் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா விடுதிகளும் Trip Advisor என்ற இணையதளத்தில் நல்ல ரேட்டிங் கிடைக்க வேண்டும் என்று போட்டி போடுகின்றன. அதில், அந்த விடுதியில் தங்கியவர்கள் தங்கள் அனுபவத்தை எழுத முடியும். அதற்கு விடுதி உரிமையாளர்கள் பதில் அளிப்பதும் உண்டு. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி விடுதி தேர்வு செய்வது, எதிர்பாராத சொதப்பல்களைக் குறைக்கும்.

அதேசமயம், இணையதளத்தில் விடுதி வாடகையைத் தெரிந்து கொண்ட உடனே பதிவு செய்யாமல், அந்த விடுதிக்கு ஒருமுறை போன் செய்து பாருங்கள்.  ஏனென்றால், நான் முன்பதிவு செய்த விடுதியின் வாட¬க, இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த வாடகையைவிட 30 சதவிகிதம் குறைவாகக் கிடைத்தது.

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

அடுத்து எந்த கார் என்று யோசித்தபோது, நான் வாங்கியிருக்கும் டீசல் இன்ஜின் கொண்ட புதிய ஃபிகோவை எடுத்துச் செல்ல முடிவெடுத்தோம்.

சென்னையில் இருந்து கிளம்பி, திருச்சி, திண்டுக்கல், தேனி, போடி, மூணாறு செல்வது என்று முடிவு செய்தேன். திண்டிவனம் வரை 20 அடிக்கு மேல் தெரியாத அளவுக்கு மூடுபனி. இப்படி ஒரு பனி நான் சென்னையின் அருகில் பார்த்தது இல்லை. ஆனால், ஃபிகோவின் புதிய ஹெட்லைட் டிசைன் சிறப்பான, அகலமான வெளிச்சம் தந்தது. காலை 5 மணிக்குக் கிளம்பினாலும், 8.45 மணிக்கு திருச்சி சென்றடைந்தோம். சாலைகள் மிகப் பாதுகாப்பாகவும், வாகனங்கள் குறைவாக இருந்ததும் வேகமாகச் செல்லவும் உதவியது. புதிதாக காரை ஹைவேயில் எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் செல்வது சரியாக இருக்கும். அடுத்து மிக சிறப்பான திருச்சி-திண்டுக்கல் ஹைவேயையும் வேகமாகக் கடந்தோம். டீசல் இன்ஜின் கொண்ட ஃபிகோ நகருக்குள் நல்ல பிக்-அப் அளிக்கிறது. அதேபோல்,  ஹைவேயில் 110 - 120 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டச் சுலபமாக இருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 155 கி.மீ வேகம் வரை செல்ல முடிந்தது. 140 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லும்போது 150 கி.மீ வேகத்தை அடைய நிறைய நேரம் எடுத்துக்கொண்டாலும் ஃபியட் புன்ட்டோ, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய கார்களை ஓவர்டேக் செய்தது ஃபிகோ. ஆனால், 140 கி.மீ-க்கு மேல் சற்று ஸ்டெபிளிட்டி குறைவதையும் சொல்லியாக வேண்டும்.  

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

திண்டுக்கல் - தேனி சாலை சற்று சுமார். இங்கு சாலை வேலை நடக்கிறது. மேலும், இந்தச் சாலையில் பஸ்களும் வேன்களும் உங்களை சாலையைவிட்டுக் கீழே தள்ளுவதுதான் முதல் குறிக்கோள் என்று ஓட்டுவதும் ஒரு காரணம்.

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

தேனியைத் தாண்டி போடியைக் கடந்தவுடன் மலை மேல் ஏறத் தொடங்கி விடுவோம். எப்போது செக்போஸ்ட்டைத் தாண்டுகிறோமோ, அப்போதுதான் இயற்கைக் காட்சிகளும் தட்பவெப்பமும் டக்கென்று மாறுகின்றன. மூணாறை அடைந்த பின்பு, விடுதிக்குச் செல்ல ஓர் அணையைக் கடந்து சென்றோம். இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள ஒரு பாலம். அதுதான் அணையும். அந்த அழகை ரசித்தபடி தேசாடன் ரிசார்ட்டை அடைந்தோம். அதுதான் மூணாறில் உள்ள மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் ரிசார்ட். இந்த விடுதியைச் சென்றடைய மிக செங்குத்தாக உள்ள ஒரு பிரைவேட் சாலையில் செல்ல வேண்டும். இந்த விடுதியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், வேலி வியூ (Valley View) பகுதியில் இருக்கும் அறையைக் கேளுங்கள். இதைவிட அழகான வியூ மூணாறில் கிடைக்காது.

பின்பு, மாலை நெருங்க நெருங்க மிக மிக அருமையாக மிதமான குளிர் அடித்தது. இதற்குத்தானே வந்தோம் என்று அப்போதுதான் மன நிறைவு வந்தது. பிறகு, மூணாறைச் சுற்றிப் பார்க்கக்

கிரேட் எஸ்கேப் - சென்னை to மூணாறு

கிளம்பினோம். விடுதிக்காரர்கள் கைடு போல நிறைய ஐடியாக்கள் கொடுத்தார்கள். அதன்படி மூணாறு - டாப் ஸ்டேஷன் சாலையில் சென்றேன். சில இடங்களில்  பிளைண்ட் கார்னர்கள் இருந்தாலும். ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தச் சாலையில் சிறு தூரம் வந்த உடனே மூணாறின் பரபரப்பு எல்லாம் குறைந்து பச்சைப் பசேல் என்று அழகிய காட்சிகள் தெரியத் தொடங்கியது. இயற்கைக் காட்சிகளை மெய் மறந்து கடந்து செல்லும்போது, யானைகள் சரணாலயம் போல யானைகள் பராமரிக்கும் இடம் வந்தது. ஒரே நேரத்தில் நிறைய யானைகளைப் பார்க்கும் அனுபவம் பிரமிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அதே சாலையில் சென்றபடி மாட்டுப்பட்டி அ¬ணையை அடைந்தோம். சற்று நீர் குறைவாக இருந்தாலும், ஓர் அணை மற்றும் அதனால் உருவான சுற்றுச்சூழல் மிகவும் அழகு. இந்த அணையிலேயே படகுத் துறையும் இருக்கிறது. வார விடுமுறை இல்லாத நாளாகச் சென்றால், கூட்டம் குறைவாகவும் இருக்கும்.

அதே ரோட்டில் சென்றபோது, அழகிய காட்சிகள் தொடர்ந்து வர வர எங்கும் தேயிலைத் தோட்டங்கள். மீண்டும் காரில் ஏறிக் கிளம்பி டாப் ஸ்டேஷன் என்ற வியூ பாயின்டைச் சென்றடைந்தோம். அங்கு செல்ல சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த இடம் அனைத்து மலைகளையும் சுற்றிப் பார்க்கும் வகையில் நடுவில் அமைந்திருக்கிறது. ஒரு மிகப் பெரிய மலைகளால் ஆன அறையின் நடுவில் இருந்து நடப்பதுபோல இருக்கும். இந்த அனைத்து இடங்களையும் பார்த்து முடிக்க ஒரு முழு நாள் செலவானது. மீண்டும் விடுதிக்குத் சென்று ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள், சென்னையை நோக்கி மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஃபிகோவைச் செலுத்தினேன்.