Published:Updated:

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

பாப் ரூபனி

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

பாப் ரூபனி

Published:Updated:
ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

ந்தியாவின் முதல் தலைமுறை ஆட்டோமொபைல் பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பாப் ரூபனி. புதிய புதிய கார்களில் புதிய சுற்றுலா தலங்களைத் தேடிச் செல்வதுதான் இவருக்கு வேலை. தனது 25 ஆண்டு ஆண்டு கால அனுபவங்களைக் கொண்டு, அவர் அண்மையில் ’India’s 100 Best Destinations’ என்ற பயணப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினேன்...

 பயணங்கள் ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயணங்கள்தான் வாழ்க்கையில் நமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தரும். பயணங்கள்தான் நமக்கு நல்ல அனுபவங்களைத் தரும். நல்ல அனுபவங்களைச் சந்திக்கும்போது பார்வை விசாலம் அடையும். சுருக்கமாகச் சொன்னால், பயணங்கள்தான் பாடங்கள்!

உங்கள் பயணங்கள், நம் நாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவியதா?

சின்ன சின்னப் பயணங்கள் மூலம் இந்தியாவைப் புரிந்து கொள்ளவே முடியாது. எவ்வளவு கலாசாரங்கள், வண்ணங்கள், மனிதர்கள், உணவு வகைகள் அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் அறிந்துகொள்ள முடியாது.

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

அப்படியானால், உங்கள் பயணங்களின்போது நம் நாட்டைப் பற்றி என்ன உணர்ந்தீர்கள்?

நம் நாடு மாறிக்கொண்டே வருகிறது. சென்ற ஆயிரம் ஆண்டுகளில் ஏற்படாத மாற்றங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைதான். சில மாற்றங்கள் அவசியம் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், மறைந்து வரும் பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள், அழியும் புராதனச் சின்னங்கள், அழிக்கப்படும் காடுகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது வருத்தம்தான் மிஞ்சுகிறது. அதுவும், நான் முன்பு கூறியதுபோல இவை கடந்த பத்து ஆண்டுகளில்தான் அதிகம்!

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

மாற்றங்கள் என்றால், குறிப்பாக எதைப் பற்றிக் கூறுகிறீர்கள்?

இன்று எல்லோராலும் எளிதாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது, கையடக்க சாதனத்தில் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. முன்னைவிட போக்குவரத்து வசதிகள் பல மடங்கு முன்னேறி இருக்கிறது. இதுபோன்ற மாற்றங்களை நான் வரவேற்கிறேன். ஆனால் முன்பு, கிராமப் புறங்களில் மனிதர்கள் இனிமையாகப் பழகுவார்கள்; மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள். உலக மயமாக்கல் இதை மாசுபடுத்திக் கொண்டு வருகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு மாநிலத்திலும் உடைகள் வித்தியாசமாக இருக்கும்.இப்போது எங்கு சென்றாலும் ஒரேவிதமான பேன்ட் - சட்டை அணிந்திருப்பதைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

நம் நாட்டின் சிறப்பம்சங்கள் என்ன?

எப்படிப் பார்த்தாலும் நம் நாடு ரொம்பவே ஸ்பெஷல். ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வோர் ஊருக்கும் இருக்கும் கலாசார வேறுபாடுகள், நடை உடை பாவனைகள், விருந்தோம்பல், உணவு வகைகள், மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதம் என மிக வித்தியாசமானது நம் இந்தியா. இவைதானே இந்தியாவின் அழகு?!

சாலை ஒழுக்கத்தில் நம் நாடு எப்படி? ஒவ்வோர் ஊருக்கும் ஏதாவது வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

ஆம், ஆம்... அது ரொம்ப முக்கியம். நம் நாடு முழுக்கவே சாலை ஒழுக்கம் ஓரளவுக்கு முன்னேறினால், நன்றாக இருக்கும். ஆனால், சில இடங்களில் நன்றாகவே கார் ஓட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, மலைப் பகுதியில் வசிப்பவர்கள் நிதானமாகவே ஓட்டுகிறார்கள். மலைப் பாதைகள் ஆபத்துகள் நிறைந்தவை என்பதால், அவர்கள் அப்படி ஓட்டிப் பழகி இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால், மலைப் பாதைக்குச் சுத்தமாகப் பழக்கம் இல்லாதவர்கள் எந்த ரோட்டில் ஓட்டினாலும் சரி, தேவையில்லாத பரபரப்புடன் தான் வாகனம் ஓட்டுகிறார்கள். நான் பார்த்தவரை கோவையில் இருந்து ஊட்டி செல்லும்போது எல்லோருமே விரட்டித்தான் ஓட்டுகிறார்கள். ஆனால், ஹிமாசலப் பிரதேசத்தில் ஓரளவுக்கு எல்லோரும் பொறுமையாகவே ஓட்டுகிறார்கள்.

இந்தப் பயணத்தில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

ஒரு நாள் சிக்கிம் மாநிலத்தில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தேன். நல்ல மழை. ஒரு கிராமத்தில் சாலை இரண்டாகப் பிரிந்தது. ஆனால், ஒரு பெயர்ப் பலகைகூட இல்லை. அருகில் இருந்த ஒரு வீட்டின் முதல் மாடியில் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், உரக்கக் கத்தி அவரை அழைத்தேன். சிறிது நேரத்தில் ரெயின்கோட் அணிந்து கொண்டு கீழே வந்த அவர், பொறுமையாக வழி சொன்னதோடு அல்லாமல், வீட்டுக்குத் தேனீர் அருந்தவும் அழைத்தார்.

ஓர் ஊர்சுற்றியின் சாலைக் குறிப்புகள்!

அடுத்த நாள் மேற்கு வங்காளத்தில் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். ஒருத்தரிடம் வழி கேட்டால், 'சொல்றேன். ஆனா, எவ்வளவு காசு தருவ... எனக்கு என்ன லாபம்?’ என்றார்.

பாருங்கள். சிக்கிம் மாநிலமும், மேற்கு வங்காளமும் அருகருகே இருக்கும் மாநிலங்கள். ஆனால், மக்கள் நடந்து கொள்ளும் விதத்தில் எவ்வளவு பெரிய வித்தியாசம் பார்த்தீர்களா..? இதுபோல ஒவ்வொரு பயணத்திலும் நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன்!

நம் நாட்டில் வாகனம் ஓட்ட சிறந்த சாலைகள் எவை?

துளிகூடச் சந்தேகம் இல்லை. டிரைவிங் என்ற விஷயத்தை அனுபவித்து ஓட்டுவதற்கு ஏற்ற சாலை மணாலி - லே சாலைதான். இது தவிர குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் பார்டர் ரோடுகள் ஓட்ட நன்றாக இருக்கும்.

தமிழ்நாட்டில் சொல்ல வேண்டும் என்றால், பந்திப்பூர் டு ஊட்டி சாலையைச் சொல்லலாம். நான் தமிழ்நாட்டில் அதிகம் அனுபவித்து ஓட்டியது இந்தச் சாலையில் தான். இந்த ஆண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் திட்டம் இருக்கிறது. அப்போது இன்னும் நிறையப் பேசுவோம்!

ர.ராஜா ராமமூர்த்தி