Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சரண்யா, பட்டாபிராம்.

 நான் டிவிஎஸ் ஸ்கூட்டிபெப்ப்ளஸ் வைத்திருக்கிறேன். இது 35 40 கி.மீ.தான் மைலேஜ் தருகிறது. மைலேஜ் அதிகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் பொதுவாக 45 - 50 கி.மீ வரை மைலேஜ் அளிக்கும்.

##~##
உங்கள் ஸ்கூட்டர் கிட்டத்தட்ட லிட்டருக்கு 10 கி.மீ வரை மைலேஜ் குறைவாகத் தருகிறது. ஸ்கூட்டரை ஒழுங்காக சர்வீஸ் செய்யத் தவறினால், இந்தப் பிரச்னை நிகழும். மேலும், டயர்களில் சரியான அளவு காற்று எப்போதுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் அதிக எடை ஏற்றக் கூடாது. இன்ஜின் ஆயில் சரியான கி.மீ இடைவெளியில் மாற்றப்பட வேண்டும். அதேபோல், கார்புரேட்டர் மற்றும் ஏர் ஃபில்டர் சரியாக இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்!
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

செந்தில்குமார், சேலம்.

நான் மாருதி ஈக்கோ கார் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். இதன் பலம், பலவீனம் என்ன?

மாருதி ஈக்கோ புத்தம் புது கார் அல்ல. இது மாருதி முதலில் அறிமுகப்படுத்திய வெர்ஸாவின் மறுபதிப்புதான். 5 மற்றும் 7 சீட்டர் மாடல்களுடன் கிடைக்கும் இதில், 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 73 bhp சக்தியை இது வெளிப்படுத்துகிறது. அதிகம் பேர் இதில் பயணிக்க முடியும், விலை மற்றும் சர்வீஸ் செலவுகள் மிகவும் குறைவாகவும் இருக்கும். நகரின்

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

எந்த சந்து பொந்துக்குள்ளும் போய் வரலாம். இதெல்லாம் ஈக்கோவின் பலங்கள். மற்றபடி ஏ.ஸி-யைத் தவிர இந்த காரில் பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் போன்ற வசதிகள் எதுவுமே இல்லை. பவர் டெலிவரி சிறப்பாக இருந்தாலும், காரில் 7 பேர் உட்கார்ந்துவிட்டால், இதன் பர்ஃபாமென்ஸ் மிகவும் மந்தமாகி விடும். ஈக்கோ, சிறிய சைஸ் டயர்களைக் கொண்டிருப்பதால், திடீர் பிரேக் அடிக்கும்போது ஸ்கிட் ஆகும் வாய்ப்பு அதிகம். வீல் பேஸ் மிகவும் குறைவு என்பதோடு, முன் மற்றும் பின் ஆக்ஸிலின் மீதுதான் இருக்கைகள் இருக்கின்றன என்பதால், சின்ன மேடு பள்ளங்களில்கூட காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் தெரியும்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ராமச்சந்திரன், திருச்சி.

பிரீமியர் ரியோ காரை வாங்கலாமா?

பிரீமியரில் இருப்பது ரியோ 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். இதன் அதிகபட்ச சக்தி 65 bhp. ஐந்து பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய இந்த கார் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸின் துணையுடன் இயங்குகிறது.  பவர் குறைவு என்பதோடு, டீலர்கள் அதிகம் கிடையாது. விலையும் அதிகம்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

கணபதி, கோவை.

நான் செவர்லே பீட் கார் வாங்கலாமா என்று யோசித்து வருகிறேன். ஆனால், என் நண்பர்கள் இந்த காரின் பர்ஃபாமென்ஸும், மைலேஜும் குறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா?

தற்போது விற்பனையில் இருக்கும் சின்ன கார்களில் தனித்துவமான ஸ்டைல் கொண்ட கார் செவர்லே பீட். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 79 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பவர் ஓகேதான் என்றாலும், அதிக எடை காரணமாக பர்ஃபாமென்ஸில் சற்று சுணக்கம் தெரிகிறது. ஆரம்ப வேகத்தில் சிறப்பாக இருந்தாலும், மிட்-ரேஞ்ச் அதாவது, 2000 - 4000 ஆர்பிஎம்-ல் காரின் பர்ஃபாமென்ஸ் மந்தமாக இருக்கிறது.  சிட்டியில் 11.5 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 15.3 கி.மீ-யும் மைலேஜ் கொடுக்கிறது. இது மிகவும் அதிகம் இல்லையென்றாலும் பெட்ரோல் காருக்கு ஓகேதான். குறைந்த விலை, செவர்லேவின் மூன்று வருட இலவச சர்வீஸ் சலுகை ஆகியவை பீட்டின் இந்தக் குறைகளை மறைத்துவிடும்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

பிரபுராம், இ-மெயில்.

நான் ராயல் என்ஃபீல்டு 'தண்டர்பேர்டு’ பைக் பிரியன். ஆனால், என்னிடம் புது பைக் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. அதனால், பழைய தண்டர்பேர்டு வாங்கலாமென முடிவெடுத்து இருக்கிறேன். பழைய தண்டர்பேர்டு பைக்கை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

புதிய தண்டர்பேர்டு பைக், யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினோடு வெளிவருகிறது. அதனால், இந்த பைக்கை வாங்குவதே நல்லது. பட்ஜெட் இடம் கொடுக்காது என்றால், வேறு வழியில்லை. பழைய தண்டர்பேர்டு பைக்கை வாங்கும்போது, சீட்டை அகற்றி பைக்கில் விரிசல்கள் எதுவும் இருக்கின்றனவா என்று பாருங்கள். அதே போல், செயின் ஸ்பிராக்கெட் சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். இந்த இரண்டுமே கிட்டத்தட்ட 2500 ரூபாய்க்கு மேல் செலவு வைத்துவிடும். அதனால், இதில் கவனமாக இருங்கள். ஒரிஜினல் சைலன்ஸர் கொண்ட பைக்கையே வாங்குங்கள். வீல் அலைன்மென்ட் சரியாக இருக்கிறதா என்றும் பாருங்கள். வீல் ரிம், சஸ்பென்ஷன் ஆகியவற்றையும் சரி பாருங்கள். பைக் வாங்கும் முன் பேப்பர்களைத் தெளிவாகப் பார்த்து வாங்குவதும் அவசியம்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சரவணன், சீர்காழி

100-110 சிசி பைக் வாங்க வேண்டும். மைலேஜ் அதிகம் கொடுக்க வேண்டும் என்பதோடு, ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களில் வாங்கப் போகும் புது பைக்கை விற்றுவிடுவேன். அதனால், நல்ல ரீ-சேல் மதிப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர், பஜாஜ் டிஸ்கவர் 100 - இரண்டு பைக்குகளில் எதை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறது?

நீங்கள் சற்றும் தாமதிக்காமல் ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் பைக் வாங்கலாம். இது கிட்டத்தட்ட லிட்டருக்கு 60 கி.மீ மைலேஜ் தருகிறது என்பதோடு, இந்த பைக்கின் ரீ-சேல் மதிப்பும் குறையாது. பஜாஜ் டிஸ்கவரைப் பொறுத்தவரை மைலேஜ் அதிகம் கிடைக்கும். ஆனால், ஒன்றிரண்டு வருடங்கள் ஆனவுடன் டிஸ்கவர் அதிகம் சர்வீஸ் செலவுகள் வைக்கும் பைக்காக மாறிவிடுவதால், இதன் ரீ-சேல் மதிப்பு குறைந்து விடுகிறது!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ராபர்ட், தூத்துக்குடி.

நான் புதிதாக டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் வாங்கி இருக்கிறேன். டீசல் இன்ஜின் என்பதால், இன்ஜின் விரைவில் பழுதடையாமல் இருக்க, இன்ஜினை லேமினேட் செய்ய வேண்டும் என நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், டொயோட்டா சர்வீஸ் சென்டரில், 'இது அவசியம் இல்லை’ என்கிறார்கள். யார் சொல்வது சரி?

பொதுவாக, இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்ஸ் அதிக வெப்பம் மற்றும் தண்ணீரில் இருந்து பாதிப்படையாமல் இருக்க, ‘Lacquer’ ஆல் லேமினேட் செய்யப்பட்டு இருக்கும். அதனால், நீங்கள் திரும்பவும் லேமினேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், டொயோட்டா - ஃபார்ச்சூனரின் 'இன்ஜின் பே’ அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் இருந்து காக்கும் வகையிலேயே வடிவமைத்திருக்கிறது. அதனால், நீங்கள் இன்ஜினை லேமினேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை!