வளைந்து நெளிந்து லாவகமாக ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களாக

. இருந்தாலும், சென்டர் ஸ்டாண்ட் போட்டு ஸ்கூட்டரை நிறுத்துவது என்றால் மட்டும் ஜகா வாங்கிவிடுகிறார்கள். 'சரி, ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களில் எத்தனை பேருக்கு சென்டர் ஸ்டாண்ட் போடத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்... பார்த்துவிடலாம்’ என சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ் பார்க்கிங் ஏரியாவில் ஆஜரானோம். ''ஸ்கூட்டர் ஓட்டுறதுல நாங்க எல்லாம் கில்லிகள் தெரியுமா?'' என்று பீட்டர் விட்டபடியே, ''ஓகே... நாங்க தயார்...'' என சவாலுக்குத் தயாரானார்கள்..
முதலில் வந்தார் எழிலரசி, ''சிங்கம் ஒன்று புறப்பட்டதே...'' என்று பாட்டுப் பாடி அவரை உசுப்பேத்தினார்கள் சக மாணவிகள். ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியவர், பதினைந்து நிமிடத்தில் ஒரு வழியாக சென்டர் ஸ்டாண்டைப் போட்டு முடித்தார். அவருக்கு நாம் கூல்ட்ரிங்க்ஸ் ஸ்பான்ஸர் செய்யவும், ரிலாக்ஸ் ஆகி ஓரமாக அமர்ந்தார்!

அடுத்து வந்த ஷீட்டல்... கொஞ்சம் கஷ்டப்பட்டு, பிறகு நிறைய தம் கட்டி, ஒரு வழியாக ஸ்டாண்ட் போட்டுச் சமாளித்தார். இப்படி ஒவ்வொருத்தரும் தங்களுடைய ஸ்கூட்டரை சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்த அல்லாடினார்கள். இதில், சடாரென்று தனது ஸ்கூட்டரை சென்டர் ஸ்டாண்டில் தூக்கி நிறுத்தி அசத்தினார் ஆர்த்தி. இவரை அடுத்து 'சடார்’ என்று சொல்ல முடியாவிட்டாலும், ஈஸியாக ஸ்டாண்ட் போட்டுக் காட்டியவர் சேஜல். த்ரிஷா களம் இறங்கியபோது, இவர் சட்டென்று ஸ்டாண்ட் போட்டு விடுவார் என ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ''என்னோட ஆக்டிவால என்னால ஸ்டாண்ட் போட முடியாது. எனக்கு ஸ்கூட்டி பெப் கொடுங்கப்பா'' என்று கேட்டு, அதில் முதல் முறை முடியாமல் போனாலும், இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று பெருமூச்சு விட்டார்.

ஸ்கூட்டரில் காற்றாகப் பறக்கும் குயின்களிடம், ''ஸ்கூட்டர் வாங்கியபோது மேனுவல் புத்தகத்தை முழுவதுமாகப் படித்தவர்கள் எத்தனை பேர்?'' என்று கேட்கவும், ''பாத்திருக்கோம், படிச்சதில்லை'' என்றனர். ''அந்த மேனுவல் புத்தகத்திலேயே சென்டர் ஸ்டாண்ட் போடுவது எப்படி என்பதை படத்துடன் விளக்கிக் குறிப்பிட்டிருப்பார்கள். உண்மையில் சென்டர் ஸ்டாண்ட் போடுவது மிக மிகச் சுலபம். இவ்வளவு சிரமப்பட்டு ஸ்டாண்ட் போட வேண்டிய அவசியமே இல்லை'' என்றதும், ''எப்படி... எப்படி'' என மாணவிகள் ஆர்வம் காட்ட... ''முதலில் இடது காலை தரையில் முழுவதுமாக வைத்து நிற்க வேண்டும். பிறகு, ஸ்கூட்டியின் இடது ஹேண்டில் பாரை இடது கையால் பிடித்துக் கொண்டு, வலது காலால் ஸ்கூட்டரின் சென்டர் ஸ்டாண்ட் க்ளிப்பை கீழ்நோக்கி லேசாக அழுத்தினாலே.... ஸ்கூட்டர் தானாக சென்டர் ஸ்டாண்டில் உட்கார்ந்துவிடும். தேவைப்பட்டால், வலது கையால் ஸ்கூட்டரின் பின்பக்கம் இருக்கும் கைப்பிடியை பின் நோக்கி லேசாகத் தள்ளலாம். மாறாக, இந்த கைப்பிடியைப் பிடித்துத் தூக்க முயற்சி செய்வது தவறு. அதேபோல, ஸ்டாண்ட் போடும்போது ஹேண்டில் பார் நேராக இருக்க வேண்டியதும் அவசியம்'' என்று கூறவும், ''ப்ப்பூ... இவ்வளவுதானா?'' என்று முன் வந்த த்ரிஷா முயற்சி செய்ய... சக்ஸஸ்! இதைப் பார்த்த மற்ற மாணவிகளும் இதே டெக்னிக்கைப் பின்பற்றி 'படக் படக்’கென்று சென்டர் ஸ்டாண்ட்டைப் போட்டு அசத்தினார்கள்!