>>வி.ராஜேஷ்

எந்த கார், என்ன கலர், எது மாடல், மைலேஜ் எவ்வளவு, வசதிகள்

. என்னென்ன என்று பார்த்துப் பார்த்து கார் வாங்கினாலும், பராமரிப்பு என்றால் மட்டும் அடுத்தவரை நம்பி இருக்கிறோம். அது, பெரிய பிரச்னையாக இருந்தால் சரிதான். ஆனால், சின்ன விஷயத்துக்குக்கூட அடுத்தவரை நம்பி இருப்பது சரியா? குடும்பத்துடன் பயணம் செய்யும்போது, உதவிக்கு ஆளே இல்லாத இடத்தில் கார் லேசாக மக்கர் செய்கிறது என்றால், என்ன செய்வீர்கள்? சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து மெக்கானிக் வரும்வரை காத்திருக்க வேண்டும். கார் நிற்பது காடானாலும், ரோடானாலும், இரவானாலும், பகலானாலும் கால விரயம் தவிர்க்க முடியாமல் தவிக்க வேண்டியதுதான்..
காரில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை சரி செய்யத் தெரிந்து கொண்டால், பிறருக்காகக் காத்திருப்பதைத் தவிர்க்கலாம். ஓவர் ஹீட், ஸ்டார்ட்டிங் ட்ரபிள், ஹெட் லைட் எரியாமல் இருப்பது, ஃப்யூஸ் மாற்றுவது, சின்ன வயரிங் பிரச்னை, ஸ்பார்க் ப்ளக் பிரச்னை, டயர் பஞ்சரானால் ஸ்டெப்னி மாற்றுவது... இது போன்ற விஷயங்களை நாமே தெரிந்துகொள்வதுதான் நல்லது.

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நமது வாசகர் மாகலிங்கம், ''கடந்த ஐந்து ஆண்டுகளாக கார்

பயன்படுத்துகிறேன். அவசர ஆத்திரத்துக்கு ஸ்டெப்னி மாற்றக்கூட கற்றுக் கொள்ளவில்லை. சர்வீஸ் சென்டரில் தயங்குகிறார்கள். மோ.வி உதவ முடியுமா?'' என்று கேட்டார். இதை அவருக்கு பிராக்டிக்லாகவே கற்றுக் கொடுப்பது என்று முடிவெடுத்து, மெக்கானிக் ராதாகிருஷ்ணனோடு ஆஜரானோம்.

''எப்படி வீல் மாற்ற வேண்டும் என்று மட்டும் சொல்கிறேன். நீங்களே செய்து பார்த்தால்தான் எவ்வளவு சுலபம் என்பது புரியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்ன மெக்கானிக் ராதாகிருஷ்ணன், ''சாலையில் செல்லும்போது டயர் பஞ்சராகிவிட்டால், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட வேண்டும். நான்கு டயர்களும் சமதளத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஹேண்ட் பிரேக்கை முழுமையாகப் பயன்படுத்தி நிறுத்த வேண்டும். தூரத்தில் வரும் வாகனங்களுக்கு கார் சாலையில் பழுதாகி நிற்கிறது என்பது பார்த்தவுடன் தெரிந்துகொள்ளும் வகையில், காரின் இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அவை இல்லை என்றால், செடி கொடிகளை அடையாளத்துக்காக வைக்கலாம். காரின் எச்சரிக்கை விளக்குகள் ஒளிர வேண்டும். முதலில் ஸ்டெப்னி டயர், வீல் ஜாக்கி, டூல்ஸ் கிட் ஆகியவை பஞ்சரான டயருக்கு அருகில் வைத்த பின்பே வேலையைத் தொடங்க வேண்டும். முதலில், வீல் நட்டுகளை லேசாகத் தளர்த்துங்கள். பிறகுதான் வீல் ஜாக்கியை உரிய இடத்தில் பொருத்தி வீலை உயர்த்த வேண்டும். நன்கு உயர்ந்ததும் நட்டுகளைத் தளர்த்தி எடுத்துவிட்டு, வீலை வெளியே எடுத்த உடனேயே ஸ்டெப்னி வீலைப் பொருத்திவிட வேண்டும். நட்டுகளை மிதமாக 'டைட்’ செய்துவிட்டு ஜாக்கியை இறக்கிய பிறகு, ஸ்பேனர் கொண்டு நட்டுகளை முழுமையாக டைட் செய்ய வேண்டும். அவ்வளவுதான்!'' என்றார் மெக்கானிக். அவர் கூறியபடியே மகாலிங்கம் செய்து பார்த்து, வெற்றிகரமாக வீலை மாற்றியபோது, அவரது முகத்தில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது!