>> தி.விஜய்

பத்து என்பது நாம் எதிர்பாராமல் நடப்பதுதான். ஆனால், சில சமயம்

. நம் மீது தவறு இல்லாத சமயத்திலும் விபத்து நடக்கும். சாலையில் நாம் சரியாக விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டினால் மட்டும் போதாது. சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் தாறுமாறாக வரலாம் என்று எதிர்பார்த்து எச்சரிக்கையோடு வாகனத்தை ஓட்டினால்தான் விபத்தைத் தவிர்க்க முடியும். இதற்கு உதாரணம், கோவை வேலுச்சாமி. கடந்த 22 ஆண்டுகளாக பைக் ஓட்டும் அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் விபத்தில் சிக்கிய கதை கொஞ்சம் வித்தியாசமானது. கோவை, சவுரிபாளையத்தில் டெய்லரிங் சென்டர் நடத்தி வரும் அவரிடம் பேசினோம்..
''போன அக்டோபர் மாசம் நானும் என் நண்பரும் பைக்கில ராமநாதபுரத்தில இருந்து நஞ்சுண்டாபுரம் வழியா போத்தனுர் போய்க்கிட்டு இருந்தோம். நான் எப்பவுமே பைக்கை 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல ஓட்டுறது இல்லீங்க. ரொம்ப நிதானமாத்தான் போயிக்கிட்டு இருந்தேன். வழியில ஒரு ரெயில்வே

பாலத்தை கிராஸ் செய்யும்போது... எதிரே ஒரு பல்ஸர் பைக் ரொம்ப வேகமாக வந்துட்டு இருந்தது. அந்த பைக்கை ஓட்டியது காலேஜ் ஸ்டூடன்ட். அவங்களுக்கு முன்னாடி வந்துக்கிட்டு இருந்த இன்னொரு பைக்கை ஓவர் டேக் செய்றேன் பேர்வழின்னு, அவங்க வேகத்தைக் கூட்ட... பைக்கை கன்ட்ரோல் பண்ண முடியாம, என்னோட பைக் மேல வந்து டமால்னு மோதிட்டாங்க!

மோதுன வேகத்துல நான் பைக்கில இருந்து தனியா எகிறிப் போய் விழுந்தேன். பின்னாடி இருந்த நண்பரும் கீழே விழுந்துட்டாரு! அவருக்கு லேசான காயம்தான். ஆனா, பைக் வந்த

வேகத்துலயே மோதினதுனால, என்னோட வலது கால் எலும்பு மூணு துண்டா ஒடைஞ்சு போச்சு. நெறைய செலவு பண்ணி, மாறி மாறி ஆபரேஷன் செஞ்சு இப்பதான் கொஞ்சமா நடமாடுறேன். அஞ்சு மாசமா என்னோட தொழில் ரொம்ப பாதிக்கப்பட்டுருச்சு. டெய்லரிங் வேலையில கையும் காலும்தான் மூலதனம். நல்லவேளை... இதோட போச்சேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்!

இதுல பெரிய கொடுமை என்னான்னா... பொதுவா ஆக்ஸிடென்ட்டுன்னா கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிஞ்சுரும். ஆனா, இதுல அந்தப் பசங்க தூரத்தில் வரும்போதே இவனுங்க விழுகப் போறாங்கன்னு தோணுச்சு. இருந்தாலும் நாம் சரியா நம்ம லேன்ல தானே போறோம்னு ஒரு வினாடி நினைச்சுட்டேன்.

'ரோட்டுல வண்டி ஓட்டற எல்லாமே பைத்தியக்காரங்கன்னு நினைச்சுக்கிட்டு நாம் எச்சரிக்கை உணர்வோட வண்டியை ஓட்டணும்’ன்னு மோட்டார் விகடனிலேயே நான் பல தடவை படிச்சிருக்கேன். படிச்சதைக் கடைப்பிடிச்சிருந்தா...ஆக்ஸிடென்ட்டில் இருந்து தப்பியிருப்பேன்'' என வருந்தினார் வேலுச்சாமி!