>> சார்லஸ்

புத்தம் புது பைக்குகளுடன் டெஸ்ட்டிங்கில் பரபரப்பாக இருக்கிறது மோட்டோ ஜீபி வட்டாரம்!

வாலன்டினோ ராஸி, ஜார்ஜ் லாரன்சோ, கேஸி ஸ்டோனர் என அத்தனை பேரும் புதிய பைக்குகளுடன் டெஸ்ட் டிராக்கில் பறந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள மூன்று அணிகளைப் பற்றிய சில விவரங்கள் இதோ...

ஹோண்டா

இந்த ஆண்டு மோட்டோ ஜீபி ரேஸில் மட்டும் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில், ஹோண்டா அணி மட்டும் இந்த ஆண்டு மூன்று வீரர்களுடன் களம் இறங்குகிறது. கேஸி ஸ்டோனர், டேனி பெட்ரோஸா, ஆன்ட்ரி டோவிஸியோஸோ என திறமை வாய்ந்த அணியாக முதலிடத்தில் இருக்கிறது ஹோண்டா. கேஸி ஸ்டோனரை டுகாட்டியில் இருந்து ஹோண்டா தங்கள் அணிக்கு இழுத்திருப்பதே, இந்த ஆண்டு கட்டாயம் சாம்பியன்ஷிப்பை வென்றே தீர வேண்டும் என்கிற வெறிதான்! 2006-ம் ஆண்டு நிக்கி ஹேடன் பெற்றுத் தந்த சாம்பியன் பட்டத்துக்குப் பிறகு, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமே ஹோண்டாவுக்குக் கிடைத்து வந்தது. இந்த ஆண்டு அதிக பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையில், ட்யூன் செய்யப்பட்ட 'ஹோண்டா ஸிசி 212க்ஷி’ மோட்டார் சைக்கிளுடன் களம் இறங்குகிறது ஹோண்டா!

யமஹா

கடந்த ஏழு ஆண்டுகளாக, வாலன்டினோ ராஸி என்ற ஜாம்பவானை மட்டுமே முகமாகக் கொண்டு இயங்கி வந்த யமஹா அணியில் இந்த ஆண்டு ராஸி இல்லை. 'ராஸியைவிட திறமை வாய்ந்த, இளமையான ரேஸர் இருப்பதால், எங்களுக்குப் பயமில்லை’ என ஜார்ஜ் லாரன்சோவின் கைகளை உயர்த்திக் காட்டுகிறது யமஹா. ராஸி இல்லாமல் இந்த ஆண்டு ரேஸில் பங்கேற்பதால், வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி யமஹா அணியினரிடம் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஜார்ஜ் லாரன்சோவுடன் கைகோர்க்க, இந்த ஆண்டு பென் ஸ்பீஸ் என்ற வீரர் யமஹா அணியில் இடம் பிடித்திருக்கிறார். இவர் 2009-ம் ஆண்டு வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'ராஸி இல்லையென்றால் என்ன... இதுவரை ஐந்து சாம்பியன்ஷிப்புகளைப் பெற்றுத் தந்திருக்கும் ராசியான 'எம்-1’ பைக் இருக்கிறது’ என்று தைரியமாகக் களம் இறங்குகிறது யமஹா!

டுகாட்டி

இத்தாலிய அணியான டுகாட்டிக்கு, இந்த ஆண்டு வாலன்டினோ ராஸி புது வரவு. ராஸிக்காகவே பல புதிய மாற்றங்களைச் செய்து தொழில்நுட்பத்தில் சிறந்த பைக்காக 'டெஸ்மோசெடிஸி’ பைக்கைத் தயாரித்திருக்கிறது டுகாட்டி. இதுவரை மோட்டோ ஜீபியில் ஒரேயரு சாம்பியன்ஷிப் பட்டத்தை மட்டுமே வென்றிருக்கிறது டுகாட்டி. யமஹா பைக்தான் ராஸியின் இத்தனை ஆண்டு கால வெற்றிக்குக் காரணம் என்ற கருத்தை உடைத்தெறிய நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும் ராஸிக்கு, இது சரியான நேரம். ஆனால், விபத்தின் காரணமாக முழுமையாக குணம் அடையாமல் இருக்கும் ராஸியால், இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முடியுமா என்பது சந்தேகமே!