>> சார்லஸ் >> என்.விவேக்

கிழக்குக் கடற்கரைச் சாலையின் கடலோரத்தில் அழகும் அமைதியும்

. நிறைந்த வீடாக இருக்கிறது கேப்டன் சந்திரசேகர் - விஜி இல்லம்! வீடு அமைதியாக இருந்தாலும், பார்க்கிங் ஏரியா மட்டும் பவர்ஃபுல் கார்களால் உறுமிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ 'எம்-3’ கார் இங்கேதான் இருக்கிறது. க்ஷி8 இன்ஜின் கொண்ட எம்-3 கன்வெர்ட்டிபிள் கார் வைத்திருக்கும் சந்திரசேகரைச் சந்தித்தோம்..
''எம்-3-ஐ இந்தியாவில் முதல் ஆளாக வாங்கக் காரணம் என்ன?'' என்று சந்திரசேகரிடம் கேட்டதுதான் தாமதம், முதலில் பேசத் துவங்கினார் விஜி.

''இவரைப் பொறுத்தவரை பிஎம்டபிள்யூ என்றால் 'பெட்டர்தன் மை ஒயிஃப்’ என்றுதான் சொல்லுவார். பிஎம்டபிள்யூ கார் அவ்வளவு பிடிக்கும்'' என்று சொல்ல... மனைவியைச் செல்லமாகத் தட்டியபடி, ''அது சும்மா விளையாட்டுக்காகச் சொல்லுவேன். என்னைப் பொறுத்தவரை பிஎம்டபிள்யூ என்றால், பிலவ்ட் மை ஒயிஃப். பிஎம்டபிள்யூ என்றாலே எல்லோருக்கும் ஒரு க்ரேஸ் இருக்கும். எனக்கோ வெறி! சின்ன வயதில் இருந்தே என்னுடைய கனவு கார் பிஎம்டபிள்யூதான்! 2008-ல் ஆகஸ்ட் மாதம் ஒன்றே கால் கோடி ரூபாய் கொடுத்து இந்த காரை வாங்கினேன். இதுவரை 25,000 கி.மீ தூரம் வரை காரை ஓட்டி விட்டேன். பொதுவாக, இது போன்ற கார்களை நிறைய பேர் வீட்டில் வாங்கி வைத்திருப்பார்களே தவிர, அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், நான் சென்னையில் இருந்தால் இந்த காரைத்தான் அதிகம் பயன்படுத்துவேன். இந்த காரை ஓட்டுவது என்றால் அவ்வளவு பிடிக்கும். இது வரை இந்த பிஎம்டபிள்யூ 12 முறை பஞ்சர் ஆகியிருக்கிறது. 'பஞ்சர் ஆனாலே புது டயரை மாற்றிவிட வேண்டும். பஞ்சரான டயர் பாதுகாப்புக்கு கியாரன்டி இல்லை’ என்பதுதான் பிஎம்டபிள்யூவின் ஸ்டேட்மென்ட். சின்ன பஞ்சர் என்றாலும் டயரையே மாற்றி விடுவேன். இந்த பிஎம்டபிள்யூ காரின் ஒரு டயர் விலை 35,000 ரூபாய்!'' என்று சொல்லி முடிப்பதற்குள், ''இவர் இதுவரை டயர் மாற்றிய விலைக்கு ஒரு புதிய காரையே வாங்கியிருக்கலாம்'' என்றார் விஜி.

''விமானத்தை ஓட்டுகிற அனுபவத்தையும், கார் ஓட்டுகிற அனுபவத்தையும் ஒப்பிட முடியுமா?''

''விமானத்தை நமக்கென்று குறிக்கப்பட்ட பாதையில், குறிக்கப்பட்ட வேகத்தில் ஓட்ட வேண்டும். அங்கே நமக்குத் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. டிராஃபிக் ஜாம் எல்லாம் கிடையாது. அதனால், விமானம் ஓட்டும்போது ஒரு த்ரில் இருக்காது! 900 கி.மீ வேகத்தில் பறந்துகொண்டு இருப்போம். ஆனால், ஒன்றும் தெரியாது. ஒரு விமானத்துக்குக் கீழே இன்னொரு விமானம் க்ராஸ் ஆகும்போது மட்டுமே வேகம் தெரியும்; த்ரில் இருக்கும். மற்ற நேரங்களில் ஒன்றும் தெரியாது. கார் பயணத்தில்தான் அந்த த்ரில்லை அனுபவிக்க முடியும்.

ஆனால், சூப்பர் கார் வைத்திருப்பவர்கள் சிலரைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல் வரும். ஒரு கோடி ரூபாய், ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கி விட்டு, டிரைவரை ஓட்ட விட்டு பின் சீட்டில் உட்கார்ந்து வருவார்கள். 'இவர்கள் ஏன் இவ்வளவு செலவு செய்து இந்த காரை வாங்கினார்கள்? இதற்கு ஒரு மாருதி ஸ்விஃப்ட்டை வாங்கலாமே!’ என்று தோன்றும். சூப்பர் கார்களின் தொழில்நுட்பத்தை உணர... அதை ஓட்டினால்தான் தெரியும்!''

''விமானம் ஓட்டிவிட்டு சென்னை டிராஃபிக்கில் கார் ஓட்ட எரிச்சலாக இல்லையா?''

''சென்னை சிட்டி டிராஃபிக்கிற்குள் என் மனைவிதான் என்னுடைய பைலட். அவருக்குப் பொறுமை ஜாஸ்தி. சென்னையில் தினமும் 40 கி.மீ தூரம் கார் ஓட்டுகிறார் என்றால், அவர் நிச்சயம் பொறுமைசாலியாகத்தானே இருக்க முடியும்! அந்தப் பொறுமை எனக்குக் கிடையாது!''

''இந்த காரில் உங்களுடையை டாப் ஸ்பீடு என்ன?''

ஈசிஆரில் ஒருமுறை 240 கி.மீ வேகத்தைத் தொட்டிருக்கிறேன். அவ்வளவு வேகத்தில் செல்லும் போதும் துளி பயம்கூட ஏற்படவில்லை. பிரேக்ஸ் சூப்பர் ஸ்மார்ட். கால் அழுத்திய சில மைக்ரோ விநாடிகளில் கார் நின்று விடுகிறது.''

''உங்களுடைய ட்ரீம் கார்?''

''என்னுடைய தேவைகளை, ஆசைகளை நிறைவு செய்யும் கார்களை இப்போது நான் வைத்திருக்கிறேன். 1960 மாடல் ஜீப் வைத்திருக்கிறேன். இதுவும் எனக்கு பிஎடம்பிள்யூ போலத்தான். பிஎம்டபிள்யூவை ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் செய்தால்,

25,000 பில் வரும். ஜீப்பை சர்வீஸ் செய்தால் மாதந்தோறும்

10,000 ரூபாயாவது பில் வரும். ஜீப்பை சர்வீஸ் செய்வது, ஏதாவது ஒரு பாகத்தை மாற்றுவது, புதிதாக மாடிஃபை செய்வது என ஏதாவது செய்துகொண்டு இருப்பேன். இந்த ஜீப்பில் கடற்கரை மணலில் ஒரு சிக்கல்கூட இல்லாமல் சுற்றி வர முடியும். அதேபோல் ஹூண்டாய் டூசான், புதிய ஃபோக்ஸ்வாகன் பீட்டில் ஆகிய கார்களும் இருக்கின்றன. இப்போதைக்கு அடுத்த கார் இல்லை. ஆனால், என்றாவது ஒரு நாள் ஃபெராரி வாங்க வேண்டும் என்பது என் கனவு!''