Published:Updated:

''இந்திய வாகனங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு!''

ஜேஸன் டார்ச்சின்ஸ்கி...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

மெரிக்கரான இவர், உலக அளவில் பிரபலமான ஆட்டோமொபைல் வலைப்பூவான ’ஜலோப்னிக்’ வலைப்பூவின் மூத்த எழுத்தாளர். ஆட்டோமொபைல் உலகில் நடக்கும் விஷயங்களைக் காமெடியாகக் கையாளும் இவரின் எழுத்துக்குப் பலர் ரசிகர்கள். சமீபத்தில் அவரை நம் நாட்டுக்கு மஹிந்திரா நிறுவனம் அழைத்து வந்திருந்தது. பிடித்தோம் அவரை... 

''இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?''

''அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். இந்தியாவிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட வாகனங்களான டாடா மேஜிக் ஐரிஸ், மஹிந்திரா மேக்ஸிமோ போன்ற வேன்கள், எப்படி அதன் தயாரிப்பு நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதை 'ஜலோப்னிக்' வலைப்பூவில் எழுதி இருந்தேன். அடுத்து நடந்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. மஹிந்திரா நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனந்த் மஹிந்திரா, அந்த வலைப் பக்கத்தில், 'இந்தியாவுக்கு வந்து மஹிந்திராவின் வாகனங்களை ஓட்டிப் பாருங்கள்’ என்று எழுதி இருந்தார். முதலில் நான்கூட யாரோ விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், அதற்கடுத்த நாட்களில் வரிசையாக மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து இ-மெயில்கள். பிறகுதான் விஷயம் புரிந்தது.''

''இந்திய வாகனங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு!''

''வேறு வாகனங்கள் ஏதாவது ஓட்டினீர்களா?''

''அதற்குத்தானே இங்க வந்தேன். நான் அதிகம் ஓட்டியது மஹிந்திரா வாகனங்களைத்தான். ஏனென்றால், அவர்கள்தானே என்னை அழைத்து வந்தார்கள். ஆனால், எனக்கு அம்பாஸடர் ஓட்ட வேண்டும் என்பது வெகுநாள் ஆசை. அந்த ஆசையும் இந்தப் பயணத்தில் நிறைவேறியது.

நான் இங்கு வந்ததும் ஜோத்பூர் பாலைவனத்தில் நடந்த மஹிந்திராவின் 100-வது கிரேட் எஸ்கேப் ஆஃப் - ரோடிங் ராலிக்குத் தான் சென்றேன். அங்கு எனக்கு மஹிந்திரா 'தார்’ ஜீப்பை ஓட்டக் கொடுத்தார்கள். அது 70-களில் அமெரிக்காவில் இருந்த ஜீப் போலவே இருந்தாலும், ஏ.சி அவ்வளவு

''இந்திய வாகனங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு!''

வெயிலிலும் மிக நன்றாக இயங்கியது. அமெரிக்காவில் 'ஜீப்’ பிராண்டு முன்னேறி விட்டாலும், இந்தியாவில் அதன் உண்மைத் தன்மையை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

மேலும், மஹிந்திரா மேக்ஸிமோ, ஜீனியோ டபுள்-கேப் பிக்-அப் போன்றவற்றை ஓட்டினேன். XUV 500 காரின் ஸ்டைலும், இன்ஜினும் என்னை வியக்கவைத்தது. ஆனால், ரெக்ஸ்டன் கொஞ்சம் போரடித்தது. டாடா நானோ ஓட்டுவதற்கு ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

ஆங்... முக்கியமான ஒரு விஷயம். ஆட்டோக்காரருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து ஆட்டோவும் ஓட்டினேன். மறக்க முடியாத அனுபவம் அது.''

''அம்பாஸடர் ஓரு நல்ல கார் என்று உங்கள் வலைப்பதிவில் கூறி இருந்தீர்கள். எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?''

சிம்பிள். உங்களைப் போன்ற இந்திய இளைஞர்களுக்கு அம்பாஸடரின் அருமை தெரியவில்லை. இது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய டிசைன். இந்த காரை நீங்கள்  ஹாட் - ராடிங்(ஒரு காரை அதிக வேகம் மற்றும் ஆக்ஸிலரேஷன் கிடைக்குமாறு மாற்றியமைப்பது) செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டது உங்கள் தவறு. இந்த கார் மட்டும் அமெரிக்காவில் இருந்திருந்தால், ஜெனரல் மோட்டார்ஸின் வி8 இன்ஜினைப் பொருத்தி பட்டையைக் கிளப்பி இருப்பார்கள். இது யூத்துகளின் காராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதிகளின் காராக மாறிவிட்டது!''

''இந்திய கார் சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''கவனிக்கத் தூண்டும் வகையிலும், அதே சமயம் அதிகப்படியான வளர்ச்சியும் கொண்டதாக இருக்கும். நான் பார்த்தவரை இப்போதைக்கு சந்தை மதிப்பு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. கார் ஓட்டுதல் அனுபவத்தை முன்வைத்து இந்த சந்தை இயங்கவில்லை. ஆனால், அப்படி இயங்கக்கூடிய சாத்தியம் விரைவில் வரும் என நம்புகிறேன். ஏனென்றால், உங்கள் நாட்டில் கார் ஓட்டுவதற்கு அழகான இடங்களும், சாலைகளும் நிறைந்து இருக்கின்றன. எப்படியும் இதை கார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.

இந்தியா, வெளிநாட்டில் இருந்து உரிமை பெற்றுத் தயாரிக்கும் கார்களைவிட, தானாகவே உருவாக்கும் கார்களைத்தான் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இங்கே இருக்கும் பொறியியல் திறமையின் மீது எனக்கு மரியாதை உண்டு. இந்தியர்களே வடிவமைத்து, தயாரிக்கும் ஓட்டுதல் அனுபவத்தை முன்வைத்து விற்கப்படும் சூப்பர் காரை, நான் ஓட்ட ஆவலாக இருக்கிறேன்'' என்று உற்சாகமாகப் பேசினார், ஜேஸன் டார்ச்சின்ஸ்கி!

ர.ராஜா ராமமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு