Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

செந்தில் மணிகண்டன், தஞ்சாவூர்.

 நான் திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 150 சிசியில் பைக் வாங்கலாம் என்பது என்

மோட்டார் கிளினிக்

திட்டம். வாங்கும் பைக் நீண்ட காலம் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். என் பரிசீலனையில் சுஸ¨கி ஜிஎஸ்-150 ஆர் இருக்கிறது. இந்த பைக்கின் ப்ளஸ் - மைனஸ் என்ன? அல்லது வேறு பைக் எதையும் பரிந்துரைக்கிறீர்களா? உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

உங்களுக்கு பவர்ஃபுல் பைக் தேவையில்லை என்றால், உங்கள் தேர்வு சரியானதுதான். ஸ்மூத் இன்ஜின், போதுமான மைலேஜ், தரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது சுஸ¨கி ஜிஎஸ்-150 ஆர். ஆனால், போதுமான டீலர் நெட்வொர்க் இல்லை என்பதால், சர்வீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படும். உங்கள் பகுதியில் டீலர் இருந்தால், தாராளமாக வாங்கலாம்.

மனோஜ், கிருஷ்ணகிரி.

நான் பல்ஸர் 220 பைக் வைத்திருக்கிறேன். அடிக்கடிபஞ்சர் ஆகி எரிச்சலைக் கிளப்புகிறது. அதனால், இந்த பைக்கில் அகலமான ட்யூப்லெஸ் டயர் பொருத்தலாம் என யோசிக்கிறேன். என்ன சைஸ்? எந்த கம்பெனியின் டயரை வாங்கலாம்?

பஞ்சர் ஆவதற்காக டயரை மாற்றினால், நாளை பைக்கின் ஹேண்ட்லிங் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, பைக்கையே மாற்ற வேண்டிய நிலை வரும். அதனால், எப்போதுமே பைக்கில் என்ன அளவு டயர் பொருத்தப்பட்டு இருக்கிறதோ, அதே அளவு டயரைப் பொருத்துவதே நல்லது. பிராண்டைப் பொறுத்தவரை எம்.ஆர்.எஃப் டயர்களைப் பொருத்துவது நம்பகமானது!

ஸ்டீஃபன், சென்னை.

 ##~##

மிட் சைஸ் டீசல் கார் வாங்கலாம் என இ ருக்கிறேன். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ அல்லது ஹூண்டாய் வெர்னா ஆகிய இரண்டு கார்களில் எந்த காரை வாங்குவது எனக் குழப்பமாக இருக்கிறது. டீசல் கார் வாங்குவதற்குக் காரணம், நான் மாதத்தில் நான்கு முறையாவது பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு காரில் பயணிப்பேன்.

 ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜைப் பொறுத்தவரை ஹூண்டாய் வெர்னா மிகச் சிறந்த கார். ஆனால், வெர்னாவின் ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் நெடுஞ்சாலையில் பயத்தை வரவழைக்கும். ஸ்டெபிளிட்டியும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ அளவுக்கு இல்லை. பெர்ஃபாமென்ஸ் தான் வேண்டும் என்றால், வெர்னாவை வாங்கலாம். ஸ்டெபிளிட்டி மிகுந்த, நெடுஞ்சாலையில் பயணிக்க பாதுகாப்பான கார் என்றால், வென்ட்டோ வாங்கலாம்.

 தெய்வேந்திரன், தேனி

150 சிசி பைக் வாங்க வேண்டும் என ஒரு மாதமாக பத்திரிகைகள், இன்டர்நெட் டீலர் விசிட் என அலைந்து ஆராய்ந்ததில், 150சிசி செக்மென்ட்டில் இப்போது யமஹா FZ 16 பைக்கைத் தவிர பெரிதாக எதுவும் சாய்ஸ் இருப்பது போலத் தெரியவில்லை. யமஹா FZ16 சிறந்த பைக்கா? இதன் மைலேஜ் என்ன? நம்பி வாங்கலாமா?

 நீங்கள் சொல்வதுபோல, இப்போதுஇருக்கும் 150 சிசி பைக்குகளில் யமஹா FZ16  பைக்கைவிட சிறந்த பைக் எதுவும் இல்லை. ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமையில் FZ16 சிறந்த பைக். லிட்டருக்கு 40 கி.மீ வரை மைலேஜ் தரும் என்பதோடு, பில்டு குவாலிட்டியிலும் சிறந்த பைக். ஆனால், டயர்கள் சீக்கிரமே மாற்ற வேண்டிய நிலைக்குப் போய்விடுகிறது என்பதுதான் இதன் மைனஸ்.

 சூரியக்குமார், கடலூர்

சின்னதாக ஒரு கார் வாங்க வேண்டும். டாடா நானோ, ஹூண்டாய் இயான், மாருதி ஆல்ட்டோ ஆகிய மூன்று கார்களில் எதை வாங்கலாம்? மைலேஜ் மற்றும் நீண்ட காலம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓடக் கூடிய காராக இருக்க வேண்டும்.

மோட்டார் கிளினிக்

 மூன்று கார்களில் சிறந்த கார் மாருதி ஆல்ட்டோ. டாடா நானோ விலை குறைவு, அதிக இட வசதி போன்ற அம்சங்கள் இருந்தாலும், 15 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், பார்க்கிங் செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும் மேனுவல் ஸ்டீயரிங் மற்றும் அதிகப்படியான இன்ஜின் சத்தம் ஆகியவை நானோவுக்கு ஒரு முழுமையான கார் ஃபீலிங்கைத் தர மறுக்கிறது. ஹுண்டாய் இயானைப் பொறுத்தவரை ஸ்டைலான கார், நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின் மற்றும் அதிக மைலேஜ் என்றாலும், சர்வீஸ் மற்றும் மெயின்டனன்ஸ் செலவுகள் ஆல்ட்டோவைவிட அதிகம். இயானின் விலையும் அதிகம். எந்தப் பிரச்னையும் இல்லாத, மெயின்டனன்ஸ் ஃப்ரீ கார் வேண்டும் என்றால், ஆல்ட்டோதான் பெஸ்ட்.

 பி.சேவியர், திருப்பூர்

நான் தற்போது ஹோண்டா சிட்டி கார் வைத்திருக்கிறேன். அடுத்ததாக 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு 7 சீட்டர் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 அல்லது டொயோட்டா இனோவா வாங்கலாம் என யோசிக்கிறேன். காரில் உட்கார்ந்தால், சொகுசாகப் பயணிக்க வேண்டும். மேலும், காரை வாங்கினால் குறைந்தது 8 அல்லது 10 ஆண்டுகளாவது பயன்படுத்துவேன். அதனால், நீடித்து உழைக்கக்கூடிய தரமான காராக இருக்க வேண்டும். இரண்டில் எதை வாங்குவது?

 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கும், டொயோட்டா இனோவாவுக்கும் போட்டியே கிடையாது. இனோவாவின் தரத்துடன் எக்ஸ்யூவி 500 காரை ஒப்பிடவே முடியாது. எந்தக் குறையும் இல்லாத, சொகுசான இருக்கைகள் கொண்ட தரமான 'நோ நான்சென்ஸ்’ கார் டொயோட்டா இனோவா. எம்யூவி/எஸ்யூவி செக்மென்ட்டில் தற்போது

பெஞ்ச் மார்க் கார் இனோவாதான். நம்பகத்தன்மையைப் பொறுத்தவரையிலும் இனோவாவின் தரத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 நெருங்கவே முடியாது. எக்ஸ்யூவி 500 காரில் அதிக சிறப்பம்சங்கள் இருந்தாலும், நம்பகத்தன்மை வாய்ந்த, சொகுசான கார் டொயோட்டா இனோவாதான். ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரைவிட விலை அதிகம்.

 நஸீர், சேலம்.

ஸ்கோடா ரேபிட் வாங்கலாம் எனத் திட்டமிட்டு இருக்கிறேன். இந்த காருக்கு 50,000 ரூபாய் வரை கேஷ் டிஸ்கவுன்ட்டும் தருகிறார்கள். ஆனால், என்னுடைய நண்பர்கள் ''டிஸ்கவுன்ட் கிடைத்தாலே அதில் எதோ பிரச்னை இருக்கிறது. ஒருவேளை புதிய மாடல் ரேபிட் வரலாம். அதனால்தான் டிஸ்கவுண்ட் தருவார்கள். மற்றபடி ஸ்கோடாவில் எப்போதுமே டிஸ்கவுன்ட் இருக்காது'' என்று குழப்புகிறார்கள். அவர்கள் சொல்வது நிஜமா?

 புதிய மாடல் ரேபிட் இப்போது விற்பனைக்கு வராது. ஆனால், ஆக்டேவியா அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. ரேபிட்டுக்கும் ஆக்டேவியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டீசல் மாடல்கள் அதிகம் விற்பனையாவதால், ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் மாடல்களை 'க்ளியர்’ செய்ய வேண்டிய கட்டாயத்தில் டீலர்கள் இருப்பதுதான், இந்த டிஸ்கவுண்ட்டுக்குக் காரணம். ஸ்கோடா ரேபிட் தரமான, பில்டு குவாலிட்டியில் சிறந்த கார்.

 எம்.கௌதம், அரக்கோணம்

நான் புதிய 125 சிசி பைக் வாங்கலாம் என முடிவெடுத்து ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ஃபீனிக்ஸ், பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி ஆகிய மூன்றைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இதில், எந்த பைக்கை வாங்கலாம்?

 125 சிசி செக்மென்டில் சக்கைப் போடு போட்டு வருகிறது ஹோண்டா ஷைன். போதுமான பெர்ஃபாமென்ஸ், தரமான இன்ஜின், அசாதாரணமான மைலேஜ், சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் என எல்லா ஏரியாவிலும் கில்லியாக இருக்கிறது ஹோண்டா ஷைன். எனவே, ஷைன் பைக்கை நீங்கள் தாரளமாக வாங்கலாம்.‑