Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ

ரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

ன் குடும்பத்தில் முதன்முதலாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான். குடும்பத்தில் நான்கு பேர். அதற்கு ஏற்ற செடான் காரை பழைய கார் சந்தையில் வாங்கலாம் என்று எண்ணினோம். ஆனால், பழைய கார் சந்தையில் ஐந்து லட்சமாவது இருந்தால்தான், நல்ல நிலையில் உள்ள காரை வாங்க முடியும் என்பது புரிந்தது. இவ்வளவு பணத்தை பழைய காரில் முடக்குவதைவிட, புதிதாகவே வாங்கிவிட்டால் என்ன என்று தோன்றியது. எனவே, எந்த காரை வாங்குவது என தேடும் படலம் துவங்கியது. 

எந்த கார்?

குடும்பத்துடன் சொகுசாகச் செல்லக்கூடிய வகையில் செடான் மாடல் கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தோம். மாருதி, ஹுண்டாய் ஆகிய ஷோ ரூம்களுக்குச் சென்று கார்களைப் பார்த்தோம். எஸ்எக்ஸ்-4, ஸ்விஃப்ட் டிசையர், வெர்னா ஆகிய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். ஆனால், எங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. ஜெர்மன் தயாரிப்பு கார்களையும் பார்த்துவிடுவோம் என மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ரமணி ஃபோக்ஸ்வாகன் ஷோ ரூமுக்குச் சென்றோம்.

ரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ

முதல் சாய்ஸாக போலோ காரைத்தான் பார்த்தோம். வென்ட்டோவுக்கும் போலோவுக்கும் இன்ஜினில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அதனால், டிக்கி உள்ள காரான வென்ட்டோவைத் தேர்ந்தெடுத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

எங்கள் கார்!

வென்ட்டோவை முதன்முதலாக ஓட்டும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. இதைத்தான் வாங்கப் போகிறோம் என்பது. இதன் இன்ஜின் ஸ்மூத்னஸ் மிகச் சிறப்பாக இருந்தது. மூன்றாவது கியரில் செல்லும்போதே பறக்கத் தயாராவது போன்ற உணர்வு. எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வசதிகள் இந்த காரில் இருந்தன. எனவே, அப்போதே புக் செய்து அட்வான்ஸ் கொடுத்து விட்டோம்.

ரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ

சரியாக மூன்று நாட்கள் கழித்து, அதாவது 2013 ஜனவரி முதல் தேதி காரை டெலிவரி எடுத்துவிட்டோம். வருடத்துக்கு ஒருமுறை தான் சர்வீஸ் என்ற செய்தியும் காதில் தேனாகப் பாய்ந்தது. கோவையில் ஆன் ரோடு விலை 11,30,000 ரூபாய். பாதுகாப்புக்கு ஏபிஎஸ், இரண்டு காற்றுப் பைகளும் இதில் உண்டு.

ப்ளஸ்

காரை டெலிவரி எடுத்தவுடன் நான்தான் ஓட்டினேன். நமது வசதிக்கு ஏற்றபடி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டில்ட் ஸ்டீயரிங் இதில் உண்டு. இதன் மிகச் சிறந்த சிறப்பம்சம் காரின் பின்பக்க லெக் ரூம் என்று சொல்வேன். முன் பக்கம் இருக்கும் இருக்கைகளை எவ்வளவு நகர்த்தினாலும் பின் சீட்டில் இருப்பவர்கள் கால் மேல் கால் போட்டு உட்காரலாம்.

மிக முக்கிய அத்தியாவசியத் தேவையான ஜிபிஎஸ் வசதி இதில் உண்டு. ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்ஸார் போன்றவை இருப்பதால், பார்க்கிங் செய்வது ஈஸி! வேறு கார்கள் நம்மை இடிக்க வந்தாலும், எச்சரிக்க அலாரம் உண்டு. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சியும் இதில் இருக்கிறது. காரிலேயே இருக்கும் ஆடியோ சிஸ்டத்தில் ஏராளமான பல புதிய அம்சங்கள் இருக்கின்றன. வூஃபர் போடத் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது இசையின் தரம். அதுதான் ஃபோக்ஸ்வாகனின் பலம்.

ரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ

140 கி.மீ வேகத்தில் சென்றால்கூட அதை ஓடோ மீட்டரைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு சொகுசான, ஸ்மூத்தான பயண அனுபவத்தைத் தருகிறது வென்ட்டோ. நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 20 கி.மீ, நகருக்குள் 15 கி.மீ மைலேஜ் தருகிறது. சாவியை இக்னீஷனில் இருந்து வெளியே எடுத்தால் மட்டுமே டீசல் டேங்க் திறக்கும். இது ஒரு பாதுகாப்பான வசதி. இருக்கும் எரிபொருளை வைத்து இன்னும் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதைக் கணித்துச் சொல்லும் வசதியும் இதில் உள்ளது. இது மட்டுமின்றி ஸ்டீயரிங்கிலேயே மியூசிக் சிஸ்டத்துக்கான கன்ட்ரோல் செய்யும் வசதியும், ப்ளூ-டூத் மூலம் செல்போன் பேசும் வசதியும் சூப்பரோ சூப்பர்!

மைனஸ்

கிரவுண்டு கிளயரன்ஸ் மிகக் குறைவாக இருக்கிறது. கொஞ்சம் பெரிய ஸ்பீடு பிரேக்கர் என்றால், இடிக்கிறது. மேலும், மூன்றாவது கியரில் இருந்து நான்காவது கியருக்கு சுலபமாக லீவரைத் தள்ளிவிட முடிகிறது. அதேபோல், இதையே டவுன் செய்யும்போது கொஞ்சம் வளைத்துத்தான் மாற்ற வேண்டி இருக்கிறது. இது, அவசரத்தில் கொஞ்சம் கடுப்பைக் கிளப்புகிறது. அதேபோல், ஏ.சியை முழுமையாக வைத்துவிட்டு ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால், இன்ஜின் பம்முகிறது. பிக்-அப் குறைந்துவிடுகிறது. நகருக்குள் ஓட்டும்போது எதிர்பார்த்த மைலேஜ் கிடைப்பது இல்லை. வைப்பர் பட்டனைத் தவறாக ஆன் செய்து ஆஃப் செய்துவிட்டால், வைப்பர் நான்கு முறை வேலை செய்கிறது. இதனால், விண்ட் ஷீல்டில் கிராட்ச் ஏற்பட்டு விடுகிறது. இந்த சின்னச் சின்னக் குறைகளை களைந்துவிட்டால், வென்ட்டோ சூப்பர் கார்தான்!

ரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு