Published:Updated:

மீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்!

மீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

ற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் மோட்டோ ஜீபி ரசிகர்கள். பைக் ரேஸின் உச்ச நட்சத்திரமான வாலன்டினோ ராஸி, மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதுதான் ரசிகர்களின் உற்சாகத்துக்குக் காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக டுகாட்டி அணியில் இருந்த ராஸியால், கடைசி இடங்களையே பிடிக்க முடிந்தது. இதனால், கடந்த ஆண்டின் இறுதியில் யமஹாவுடன் பழம் விட்டு, மீண்டும் சமரசமாக யமஹா அணியில் இணைந்தார் ராஸி. யமஹா அணிக்காக ஓட்டிய முதல் ரேஸிலேயே இரண்டாம் இடம் பிடித்து 'ராஸி ரிட்டர்ன்ஸ்’ என்பதை உலகிற்கு பிரகடனப்படுத்தி இருக்கிறார். 

கத்தார்

2013-ம் ஆண்டின் முதல் ரேஸ், ஏப்ரல் 7-ம் தேதி கத்தாரில் துவங்கியது. இரவில் நடைபெற்ற ரேஸ் என்பதால், மைதானம் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. யமஹாவில் மீண்டும் ராஸி என்பதால், ராஸியின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியனும், யமஹா அணி வீரருமான ஜார்ஜ் லாரன்சோ முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். யமஹாவின் மற்றொரு வீரரான கால் க்ரெட்ச்லோ இரண்டாவது இடத்தில் இருந்தும், ஹோண்டா

மீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்!

அணியின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். வாலன்டினோ ராஸி, ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

தன்னுடைய வேகத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராஸி, ஆரம்பத்தில் இருந்தே பேய் வேகம் பிடிக்க ஆரம்பித்தார். முதல் லேப்பிலேயே ஏழாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறினார். ஆனால், அடுத்த லேப்பில் மீண்டும் ஏழாவது இடத்துக்குப் பின்தங்கினார். இதற்கிடையே ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஹோண்டா அணியின் புதுமுக வீரர் மார்க் மார்க்யூஸ், நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.

மீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்!

முன்னாள் உலக சாம்பியன் கேஸி ஸ்டோனருக்குப் பதிலாக ஹோண்டா அணியில் இடம் பிடித்திருக்கும் மார்க் மார்க்யூஸின் வேகம் ரசிகர்களை வியக்க வைத்தது. 20 வயது இளைஞரான மார்க் மார்க்யூஸ், 2010-ம் ஆண்டு 125 சிசி சாம்பியன் பட்டமும், கடந்த ஆண்டு மோட்டோ-2 சாம்பியன் பட்டமும் வென்றவர்.

மீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்!

மூன்றாவது லேப்பின்போது ஜார்ஜ் லாரன்சோ தொடர்ந்து முதல் இடத்திலும், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்திலும் இருக்க,  மார்க் மார்க்யூஸ் மூன்றாவது இடத்துக்கு

மீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்!

முன்னேறினார். இதற்கிடையே, ஆறாவது இடத்துக்கு முன்னேறிய வாலன்டினோ ராஸி முதல் வரிசைக்கு முந்த முயன்றுகொண்டு இருந்தார். நேர்கோட்டில் மின்னல் வேகத்தில் பறப்பதும், வளைவுகளில் வேகத்தைக் குறைத்து பாதுகாப்பாக ஓட்டுவதும் என தன்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி ரேஸ் ஓட்டிக்கொண்டு இருந்த ராஸி, ஒவ்வொரு இடமாக முந்த, 19-வது லேப்பின்போது மூன்றாவது இடத்துக்கு முந்தினார்.

யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ முதல் இடத்திலும், ஹோண்டாவின் மார்க் மார்க்யூஸ் இரண்டாவது இடத்திலும் இருக்க, யமஹாவின் ராஸி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். இரண்டு யமஹாக்களுக்கும் இடையே மாட்டிக் கொண்டது மார்க்யூஸின் ஹோண்டா. ரேஸ் முடிய இரண்டு லேப்புகளே இருந்த நிலையில் 20-வது லேப்பின்போது மார்க்யூஸை முந்தினார் ராஸி. இதனால், மீண்டும் ஆரம்பமானது லாரன்சோ - ராஸி யுத்தம். இரண்டு யமஹாக்களும் டாப் ஸ்பீடை டெஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டன. ஆனால், லாரன்சோவுக்கும் தனக்குமான வேக இடைவெளியைக் குறைக்க முடிந்ததே தவிர, ராஸியால் முதல் இடம் பிடிக்க முடியவில்லை. 5 விநாடிகள் வித்தியாசத்தில் லாரன்சோ முதல் இடம் பிடித்து வெற்றி பெற, ராஸி இரண்டாம் இடம் பிடித்தார். புதுமுக வீரரான மார்க்யூஸ் மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்த முதல் ரேஸ், இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியாளர்கள் யார் யார் என்பதைக் காட்டிவிட்டது. நடப்பு சாம்பியன் லாரன்சோவுக்கு, ராஸி மட்டும் போட்டி இல்லை; ஹோண்டாவுடன் புறப்பட்டு இருக்கும் மார்க்யூஸும் முக்கியப் போட்டியாளர்தான்!

சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு