Published:Updated:

முறுக்கும் சைக்ஸ்... பறக்கும் டேவியஸ்!

முறுக்கும் சைக்ஸ்... பறக்கும் டேவியஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

லகின் அதிவேக ரேஸ் போட்டியான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியில், அதிவேக பைக்காகப் பறந்துகொண்டு இருக்கிறது பிஎம்டபிள்யூ. மோட்டோ ஜீபி ரேஸில் இருந்து விலகி விட்ட பிஎம்டபிள்யூ அணி, வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் பட்டையைக் கிளப்புகிறது. கடந்த மாதம் ஸ்பெயினில் உள்ள அரகான் ரேஸ் டிராக்கில் நடைபெற்ற ரேஸின் இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் பிஎம்டபிள்யூ அணியின் சாஸ் டேவியஸ். 

ஸ்பெயின்

அரகான் ரேஸ் மைதானத்தில் ஏப்ரல் 14-ம் தேதி வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் இரண்டாவது சுற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் ரேஸில் ஏப்ரில்லா அணியின் சில்வியா குன்ட்டோலி மற்றும் யூஜின் லாவெர்ட்டி வெற்றி பெற்று இருந்ததால், அனைவரது கவனமும் ஏப்ரில்லா வீரர்கள் மீதுதான் இருந்தது. ஆனால், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது கவாஸாகி. ஞீஙீ10-ஸி பைக்குடன் களம் இறங்கிய டாம் சைக்ஸ் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். ஏப்ரில்லா அணியின் யூஜின் லாவெர்ட்டி இரண்டாவது இடத்தில் இருந்தும், பிஎம்டபிள்யூ அணியின் சாஸ் டேவியஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

முறுக்கும் சைக்ஸ்... பறக்கும் டேவியஸ்!

ரேஸ்- 1

எப்போதுமே தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கும் கவாஸாகி பைக்குகள், ரேஸின்போது பாதியிலேயே மூச்சடைத்து நின்றுவிடும். வழக்கம்போல அது அரகான் ரேஸ் டிராக்கிலும் தொடர்ந்தது. முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய கவாஸாகியின் டாம் சைக்ஸ் முதல் மூன்று லேப்புகளில் இரண்டாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டாலும், 4-வது லேப்பின்போது முதல் இடம் பிடித்தார். ஆனால், 6-வது லேப்பின் போது கவாஸாகி பைக்குக்கு மூச்சடைக்க ஆரம்பித்துவிட்டது. முதல் இடத்தில் இருந்த டாம் சைக்ஸ் பரிதாபமாக ரேஸை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஏப்ரில்லாவின் யூஜின் லாவெர்ட்டி முதல் இடம் பிடிக்க, அடுத்ததாக அவரது பைக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பின்தங்க ஆரம்பித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிஎம்டபிள்யூ அணியின் டேவியஸ் சாஸ், முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். ஏப்ரில்லா அணியின் சில்வியோ குன்ட்டோலி இரண்டாவது இடமும், பிஎம்டபிள்யூ அணியின் மற்றொரு வீரர் மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடமும் பிடித்தனர்.

முறுக்கும் சைக்ஸ்... பறக்கும் டேவியஸ்!

ரேஸ் -2

முதல் ரேஸில் பைக் சொதப்பியதால் செம கடுப்பில் இருந்த டாம் சைக்ஸ், இரண்டாவது ரேஸை வென்றுவிடும் வெறியுடன் பைக்கை உறும விட்டுக்கொண்டு இருந்தார். முதல் லேப்பிலேயே விபத்தில் சிக்கி ரேஸை விட்டு வெளியேறினார் யூஜின் லாவெர்ட்டி. இதனால், டாம் சைக்ஸுக்குப் போட்டி அதிகம் இருக்காது என எல்லோரும் எதிர்பார்க்க... முதல் ரேஸில் வென்ற டேவியஸ் சாஸ் இரண்டாவது லேப்பிலேயே டாம் சைக்ஸைப் பின்னுக்குத் தள்ளினார். அடுத்தாக, சில்வியோ குன்ட்டோலியும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி டாம் சைக்ஸுக்கு டாடா காட்டினார். இறுதி வரை எவ்வளவோ முயன்றும் டாம் சைக்ஸால் சாஸையும், குன்ட்டோலியையும் முந்த முடியவில்லை. இரண்டு ரேஸ்களிலும் வென்று டபுள் பட்டம் வென்றார் டேவியஸ் சாஸ்.

முதல் ரேஸில் ஏப்ரில்லா, அடுத்த ரேஸில் பிஎம்டபிள்யூ அணிகள் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் கவாஸாகி, டுகாட்டி அணிகள் வெற்றிக்காக வெறி கொண்டு பைக்குகளைத் தயார் செய்து கொண்டு இருக்கின்றன.

(இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் அடுத்த சுற்று, ஏப்ரல் 28-ம் தேதி அசென் ரேஸ் மைதானத்தில் நடந்து முடிந்து இருக்கும்.)

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு