Published:Updated:

வருகிறது ராயல் என்ஃபீல்டு

வருகிறது ராயல் என்ஃபீல்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

2010 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டின் கஃபே ரேஸர் மாடல் பைக், மூன்று வருட இடை வெளிக்குப் பின் இப்போது திருவொற்றியூர் அசெம்ப்ளி லைனில் தயாராகி நிற்கிறது. தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக்கின் பெயர் கான்டினென்ட்டல் ஜிடி. 

பென்ட்லி கார்களில், கான்டினென்ட்டல் ஜிடி என்ற மாடல் ஒன்று உண்டு. ஜிடி என்றால், 'கிராண்ட் டூரர்’ என்று அர்த்தம். இது, ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் வித்தியாசமான டூரர் பைக்காக இருக்கும் என்பதால் இந்தப் பெயராம்!

பொதுவாக, பைக் விற்பனைக்கு வருவதற்கு முன்பு டெஸ்ட் டிரைவர்கள்தான் பல்வேறு சாலைகளில் ஓட்டி டெஸ்ட் செய்வார்கள். ஆனால், ராயல் என்ஃபீல்டின் இந்த பைக்கை டெஸ்ட் செய்தவர் யார் தெரியுமா? ராயல் என்பீஃல்டு நிறுவனத்தின் தலைவரான சித்தார்த் லால். சென்னை, திருவொற்றியூரில் தயாரிக்கப்பட்ட இந்த பைக்கை, கோவாவில் இருந்து மங்களூர் வரை ஓட்டி டெஸ்ட் செய்திருக்கிறார் இவர்.

வருகிறது ராயல் என்ஃபீல்டு
வருகிறது ராயல் என்ஃபீல்டு

கஃபே ரேஸர் பைக்குகளுக்கே உரிய வகையில், சின்ன ஃப்ரேமில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது கான்டினென்ட்டல் ஜிடி. முட்டை வடிவ ஒற்றை ஹெட்லைட், அதற்கு மேல் இரண்டு குடுவை டயல்கள் என கிளாஸிக் பைக் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் நீளமான பெட்ரோல் டேங்க், ஓட்டுபவர் கால்களை அரவணைத்து உட்கார வசதியாக இருக்கிறது. ஸ்பிளிட் ஹேண்டில்பார் கொண்ட இந்த பைக்கின் ரியர் வியூ கண்ணாடிகள், மிகச் சாதாரண டிசைனில் இருக்கிறது. டூரர் பைக்குகளுக்கே உரிய வகையில் ஸ்போக் வீல்களைக்கொண்ட இந்த பைக்கில், முன் பக்கம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. நீளமான ஒற்றை சீட் என்றாலும், இரண்டு பேர் நிச்சயமாக பயணிக்க முடியாது.  டெயில் லைட், பழைய டிசைனில் செவ்வக வடிவில் இருக்கிறது.

வருகிறது ராயல் என்ஃபீல்டு
வருகிறது ராயல் என்ஃபீல்டு

இதை இயக்குவது 535 சிசி, ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின். இதுவரை வந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளைக் காட்டிலும், இது அதிக சக்திகொண்ட பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் விற்பனைக்கு வந்த தண்டர்பேர்டு 500 பைக்கைவிட இதன் எடை 15 கிலோ குறைவு. இதனால், ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும். பைரலி டயர் மற்றும் பெரம்போ மற்றும் பைபர் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டிருக்கிறது கான்டினென்ட்டல் ஜிடி.

கான்ட்டினென்ட்ட ஜிடி, ராயல் என்பீஃல்டு ஷோரூம்களில் இதுவரை பார்த்திராத பைக்காக இருக்கும் என்பதால், நிச்சயம் இதற்கு ரசிகப் பட்டாளம் உருவாகிவிடும். ஆனால், வெயிட்டிங் பீரியட்தான் 6 மாதங்களா அல்லது 1 வருடமா என்பது தெரியவில்லை!

சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு