பிரீமியம் ஸ்டோரி
 ##~##

1980-களில் இந்தியாவின் நம்பர் ஒன் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது டிவிஎஸ் மோட்டார்ஸ். 1980-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ்-50, இந்தியாவின் சூப்பர் ஹிட் மொபட். அதேபோல், முதன்முதலாக ஜப்பானின் பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, நம் நாட்டில் மோட்டார் சைக்கிள் தயாரிப்புத் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனதும் டிவிஎஸ்தான். 1984-ம் ஆண்டு சுஸ¨கி நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் வெளியிட்ட 100 சிசி பைக்தான், இந்தியாவின் 2 வீலர் மார்க்கெட்டுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

 டிவிஎஸ் - சுஸ¨கி கூட்டணிக்குப் பிறகுதான் ஹீரோ நிறுவனம், ஹோண்டாவுடன் கூட்டணி அமைத்தது. அதன் பிறகு பஜாஜ் இன்னொரு ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் கூட்டணி

TVS BMW கூட்டணி!

அமைத்தது. இப்போது அதில் அடுத்த கட்டம்.

டிவிஎஸ் - சுஸ¨கி, ஹீரோ- ஹோண்டா கூட்டணிகள் பிரிந்துவிட்டன. பஜாஜ் தனது கூட்டணி கம்பெனிகளான கவாஸாகி மற்றும் கேடிஎம் ஆகியவற்றிடமிருந்து குறிப்பிட்ட பங்குகளை வாங்கிவிட்டது. ஹீரோ நிறுவனம், அமெரிக்காவின் 'எரிக் ப்யூல் ரேஸிங்’ நிறுவனத்தில் 110 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் பயனடைய இருக்கிறது. டிவிஎஸ் எந்த திசையும் இல்லாமல் பயணித்துகொண்டிருந்த வேளையில்தான், உலக மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் அது கூட்டணி அமைத்திருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகிறது. இதில், டிவிஎஸ் நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம், உலகம் முழுக்க 1 லட்சத்துக்கும் குறைவான மோட்டார் சைக்கிள்களையே விற்பனை செய்கிறது.

TVS BMW கூட்டணி!

பிஎம்டபிள்யூ எப்படி டிவிஎஸ் உடன் இணைந்தது?

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்குமே இது நெருக்கடியான கால கட்டம். இந்திய பைக் மார்க்கெட்டில் ஹீரோ, பஜாஜ், ஹோண்டா என பின்னால் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டு, நான்காவது இடத்துக்குப் வந்துவிட்டது டிவிஎஸ். இன்னும் கொஞ்சம் விட்டால் யமஹா, சுஸ¨கி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் டிவிஎஸ் நிறுவனத்தை பின்னால் தள்ளிவிடும் நிலைமை வரலாம். இன்னொரு பக்கம், பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் உலகம் முழுவதும் விற்பனையில் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'ஹஸ்குவானா’ எனும் இத்தாலிய மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்கிய பிஎம்டபிள்யூ நிறுவனம், அதை கேடிஎம் நிறுவனத்திடம் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதுவிட்டது. அதனால், இரண்டு நிறுவனங்களுமே ஒரு திடமான திட்டத்துடன்தான் இணைந்திருக்கின்றன.

பிஎம்டபிள்யூவுக்கு என்ன லாபம்?

1,000 மற்றும் 1,200 சிசி-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துகொண்டு இருந்தால், எந்த காலத்திலும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டது பிஎம்டபிள்யூ.

இந்தியா, சீனா, இந்தோனேசியா வியட்நாம். ஆகிய நாடு களில் தான் இப்போது மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இதில்,  சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆகிறது. இந்தோனேசியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை சுமார் 80 லட்சம். அதனால், இந்தியாவில் தொழில் தொடங்கினால் மட்டுமே, பெரிய முன்னேற்றம் காண முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது பிஎம்டபிள்யூ. மோட்டார் சைக்கிள்களுக்கு நம் நாட்டில் இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லவேத் தேவையில்லை.  அதனால் நம்நாட்டில், புதிதாக தொழிற்சாலை துவங்கி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் அமைத்து, தொழிலாளர்களை பணியமர்த்தி, முழு மூச்சில் விற்பனையைத் துவக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். அதனால், ஈஸி வழியில் சட்டென இந்தியாவுக்குள் நுழைய நேரம் பார்த்துக் காத்திருந்தது பிஎம்டபிள்யூ.

TVS BMW கூட்டணி!

டிவிஎஸ் நிறுவனத்துக்கு ம் இந்தியாவில் கடுமையான போட்டி முளைத்துவிட்டது. ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, யமஹா என எல்லா பக்கமும் இடி இறங்கியதோடு, போட்டியாளர்களைச் சமாளிக்க சிறப்பான பைக்குகளும் இல்லாமல் போராடிக்கொண்டு இருந்தது டிவிஎஸ். ஸ்கூட்டி மற்றும் அப்பாச்சி, ஸ்டார் பைக்குகளுக்காகத்தான் டிவிஎஸ் டீலர் ஷிப்புகளைத் தேடி மக்கள் வருகிறார்கள். ஆனால், அந்த நடமாட்டமும் இப்போது குறைய ஆரம்பித்துவிட்டது.

அதனால், பவர்ஃபுல்லான தரமான மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க வேண்டிய காலகட்டத்தில் இருந்த டிவிஎஸுக்கு, பிஎம்டபிள்யூ உடனான கூட்டணி பம்ப்பர் லாட்டரி அடித்ததுபோலக் கிடைத்திருக்கிறது. 250 சிசியில் இருந்து 500 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களை, பிஎம்டபிள்யூ இன்ஜின் தொழில்நுட்பத்தில் உலகத் தரத்துடன் இனி டிவிஎஸ் தயாரிக்கும். பிஎம்டபிள்யூ உடன் கூட்டணி வைத்திருப்பதால், டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ் இந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய மோட்டார் சைக்கிள் சந்தைகளிலும் பல மடங்கும் உயரும்.

இரண்டு மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுக்குமே இது வெற்றிதான். 2015-ல் முதல் இந்தப் புதிய கூட்டணியின் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்திய - ஜெர்மனியின் முதல் பைக் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 சார்லஸ்

கூட்டணியில் என்ன ஸ்பெஷல்?

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி பைக்குகள், டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் மற்றும் மைசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

 250 சிசி முதல் 500 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பதற்கான தனி அசெம்பிளி லைன் அமைக்கும் பணிகள் ஓசூர் மற்றும் மைசூர் தொழிற்சாலைகளில் துவங்கி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ உடனான இந்த புதிய முயற்சிக்காக, டிவிஎஸ்  140 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி நிறுவனத்தின் முதல் பைக் 2015-ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும்.

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் 'புரோட்டோ டைப்’ பைக்குகள் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும்.

ஒரே தொழில்நுட்பம், ஒரே இன்ஜின் உடன் ஒரே சமயத்தில், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ என ஒரே மாதிரியான மோட்டார் சைக்கிள்கள் இரண்டு பிராண்டுகளின் பெயரிலும் விற்பனைக்கு வரும். பிஎம்டபிள்யூ பைக்குகளும் இந்தியாவில் விற்பனையாகும். அதேபோல், பிஎம்டபிள்யூ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் டிவிஎஸ் பைக்குகளும் வெளிநாடுகளில் விற்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு