Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

வருகிறது லம்போகினி டிராக்டர்!

மோட்டார் நியூஸ்

சொகுசு சூப்பர் கார் தயாரிப்புக்குப் புகழ்பெற்றது லம்போகினி. இப்போது லம்போகினி டிராக்டர் தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறது. கார்களைப் போலவே இதையும் சூப்பர் டிராக்டர்கள் என்றே அழைக்கலாம். முதல்கட்டமாக லம்போகினியின் நைட்ரோ ஆர்-8, ஆர்-7 மற்றும் ஆர்-6 மாடல் மற்றும் லம்போகினி க்ரீன் ப்ரோ மாடல் டிராக்டர்களை Same Deutz-Fahrஎனும் இத்தாலிய நிறுவனம், நம் நாட்டில் விற்பனை செய்ய இருக்கிறது.  இந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் ராணிப்பேட்டையில் தொழிற்சாலை உள்ளது. நம் ஊரில் விற்பனைக்கு வர இருக்கும் நைட்ரோ டிராக்டரை, இத்தாலியின் புகழ் பெற்ற டிசைன் ஸ்டுடியோவான கியாகியாரோ வடிவமைத்து இருக்கிறது. டிரைவர் சீட் மற்றும் டேஷ்போர்டு ஏதோ ஒரு லம்போகினி காரை நிச்சயம் நினைவுப்படுத்தும்.  விலை உயர்ந்த மாடலான 3.6 லிட்டர் இன்ஜின்கொண்ட மாடல் டிராக்டரின் சக்தி 130 bhp. கார்களைப் போலவே இந்த டிராக்டர்களின் விலையும் பல லட்சங்களில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷாங்காய் மோட்டார் ஷோ.... மிஸ்ட்ரா அறிமுகம்!

மோட்டார் நியூஸ்

ஷாங்காய் ஆட்டோ ஷோவில், ஹூண்டாய் தனது புதிய செடான் கான்செப்ட் மிஸ்ட்ரா காரை அறிமுகப்படுத்தியது. சொனாட்டா மற்றும் எலான்ட்ரா கார்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த கார், இந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வரும்.

ஹோண்டாவின் புதிய ட்ரீம் நியோ!

மோட்டார் நியூஸ்

110 சிசி மார்க்கெட்டில் மற்றும் ஒரு பைக்காக ட்ரீம் நியோ எனும் பைக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஹோண்டா. ட்ரீம் யுகா மற்றும் சிபி ட்விஸ்ட்டர் பைக்குகளில் இருக்கும் அதே 109 சிசி இன்ஜின்கொண்ட இந்த பைக்கின் சக்தி 8.25 bhp. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக், லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என்கிறார்கள். 'ஹோண்டா ஈக்கோ தொழில்நுட்பம்’ இதில் இருப்பதால், இந்த மைலேஜ் சாத்தியம் என்கிறது ஹோண்டா. அலாய் வீல் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதிகள்கொண்ட இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் கிடையாது. சென்னையில் இதன் விலை சுமார் 52 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

மினி கார்கள்... 5 லட்சம் வரை விலை குறையலாம்!

மோட்டார் நியூஸ்

கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ, தனது பீரிமியம் ஹேட்ச்பேக் கார் பிராண்டான மினி கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சின்ன கார்கள்தான் என்றாலும், இவற்றின் விலை 28 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பமானது. இந்த விலையால், மினி கார்களின் விற்பனை எடுபடவே இல்லை. இதனால், சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் மினி கார்களைத் தயாரிக்கத் துவங்கி இருக்கிறது பிஎம்டபிள்யூ. மினி கன்ட்ரிமேன் மற்றும் மினி கூப்பர் டி கார்களின் தயாரிப்புப் பணிகள் துவங்கி இருக்கின்றன‌. சென்னையில் தயாரிக்கப்பட இருப்பதால், இந்த கார்களின் விலையில் சுமார் 5 லட்சம் ரூபாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி, நம் நாட்டில் மட்டும்தான் மினி கார் தயாரிக்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism