Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

ஹூண்டாய் உதவி!

மோட்டார் நியூஸ்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மற்றொரு அங்கமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
கிராமங்களில் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல உதவிகளைச் செய்து வருகிறது. ஜனவரி மாத இறுதியில் இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த முகாமில், கொரியாவில் இருந்து மொத்தம் 91 மாணவர்களும், மருத்துவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனர். பல் அறுவைச் சிகிச்சை முதல் பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளையும், மாத்திரை மருந்துகளையும் இலவசமாகவே வழங்கியது ஹூண்டாய். ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த சமூக நலத் திட்டத்தில், கொரிய மாணவர்கள் - தமிழகப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டி அசத்தினார்கள்!

ராக்கெட் வேகத்தில் ஃபோர்டு!

ஃபிகோ கொடுத்த உற்சாகம், ஃபோர்டு கார் நிறுவனத்தை ராக்கெட் வேகம் எடுக்க வைத்திருக்கிறது. அதனால், 2015-ம் ஆண்டுக்குள் மேலும் 8 புது மாடல் கார்களை அறிமுகப் படுத்துவதுடன் மேலும் 30 டீலர்களை நியமிக்கவும் அது முடிவெடுத்திருக்கிறது. 2009-ம் ஆண்டு வெறும் 29,488 கார்களை மட்டுமே விற்பனை செய்த ஃபோர்டு, 2010-ம் ஆண்டு 83,877 கார்களை விற்பனை செய்து தன் விற்பனை கிராஃப்பை ஒரே மூச்சில் ஏற்றியது. 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் பத்தாயிரம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. தென்னகத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதன் விற்பனை அமோகமாக இருக்கிறது. இந்த நிலையில், குஜராத்திலும் ஃபோர்டு கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது!

அடுத்தடுத்து ஆறு கார்கள்! செவர்லே அதிரடி!

சமீபத்தில் சென்னை வந்த ஜெனரல் மோட்டார்ஸின் துணைத் தலைவர் பாலேந்திரன், மோட்டார் விகடனுடன் பேசினார்.

மோட்டார் நியூஸ்

''பீட் எல்பிஜி வெர்ஷன், லிட்டருக்கு 13.29 கி.மீ வரை மைலேஜ் தரும். ஒரு முறை டாங்க்கை நிரப்பினால், இந்த எல்பிஜி காரில் 349 கி.மீ தூரம் வரை பயணம் செய்ய முடியும். எல்பிஜி மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை மாறி மாறி பயன்படுத்தினால், 1000 கி.மீ தூரம்வரைகூட பயணம் செய்யலாம்'' என்றவரிடம், ''பீட்டுக்குப் போட்டியாக ஃபோர்டு ஃபிகோவைச் சொல்லலாமா?'' என்று கேட்டோம்.

''விற்பனையாகும் ஃபோர்டு ஃபிகோவில் 20 சதவிகிதம் மட்டுமே பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள். மற்றவை அனைத்தும் டீசல் கார்களே! ஒப்பீடு அளவில் பார்க்கும் போது, இதுவரை பெட்ரோல் இன்ஜினோடு மட்டுமே வந்துகொண்டு இருக்கும் பீட்-டின் விற்பனை ஃபிகோவைவிட அதிகம். இப்போது எல்பிஜி மாடலை அறிமுகப்படுத்திவிட்டோம். வரும் ஜூன் மாத இறுதியில் பீட்-டில் டீசல் இன்ஜினும் விற்பனைக்கு வந்த பின்பு, நாங்கள் வெகு சுலபமாக ஃபிகோவின் விற்பனையை முந்தி விடுவோம்'' என்றவர் ஜெனரல் மோட்டார்ஸின் வருங்காலத் திட்டம் பற்றியும் குறிப்பிட்டார். ''ஒரு மினி கார், ஒரு செடான், ஒரு எஸ்யூவி, ஒரு எம்யூவி, ஒரு பிக்-அப் ட்ரக், கேப்டிவாவின் புதிய மாடல் என அடுத்தடுத்து ஆறு கார்களை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க இருக்கிறோம்'' என்றார். சொல்லும் போதே பாலேந்திரன் முகத்தில் உற்சாகம் தாண்டவமாடுகிறது!

மோ.அருண் ரூப பிரசாந்த்

படம்: வி.செந்தில்குமார்

சூப்பர் பைக்!

ரப்பர் தொடர்பான சாதனங்களை உற்பத்தி செய்வதில் கில்லாடி என்று பெயர் வாங்கிய 'கார்வேர்’ நிறுவனம், சூப்பர் பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது. சென்னை வந்திருந்த இந்த நிறுவனத்தின் தலைவர் தியா கார்வேர், இது பற்றி மேலும் விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மோட்டார் நியூஸ்

''சூப்பர் பைக்கின் விலை இப்போது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. இது இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தால், அது சூப்பர் பைக் காதலர்களுக்கு அருகில் வந்துவிடும். கொரியர்கள் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல... குறைந்த செலவில் கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்வதிலும் கை தேர்ந்தவர்கள். அதனால், சூப்பர் பைக் உற்பத்தியில் பெயர் பெற்ற கொரிய நாட்டின் 'ஹாய்சங்’ நிறுவனத்தினுடன் நாங்கள் கை கோத்திருக்கிறோம்.

அவர்கள் கொடுக்கும் தொழில்நுட்பத்தை வைத்து, மஹாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் பைக்குகளை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறோம். 650 சிசி திறன் கொண்ட ஹாய்சங் GT 650R மற்றும் 700 சிசி திறன் கொண்ட க்ரூஸர் பைக்கான ST 7 ஆகிய இரண்டு சூப்பர் பைக்குகளை முதற்கட்டமாக களம் இறக்க இருக்கிறோம். நமது நாட்டிலேயே அசெம்பிள் செய்வதால், இவற்றின் விலை முறையே 5.5 லட்சம் மற்றும் 6 லட்சமாக இருக்கும். நாடு முழுதும் இதற்கென டீலர்களை நியமிப்பதுடன் சர்வீஸ் சென்டர்களையும் விரைவில் திறக்க இருக்கிறோம். சென்னையிலும் நிச்சயமாக ஒரு டீலர் ஷோரும் சர்வீஸ் சென்டரும் உண்டு!'' என்றார்.

மஹிந்திரா ஜீனியோ!

மோட்டார் நியூஸ்

சிறிய மற்றும் நடுத்தர சரக்கு வாகன செக்மென்டில் மஹிந்திரா, 'ஜீனியோ’ எனும் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 1.2 டன் பிக்-அப் ட்ரக் வகையைச் சேர்ந்த இந்த வாகனம், பார்ப்பதற்கு அச்சு அசலாக கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைல், தோற்றம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் இதே செக்மென்ட் வாகனங்களை பல படிகள் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறது ஜீனியோ. நான்கு சிலிண்டர், 2489 சிசி அளவு கொண்ட எம்.டி.ஐ சி.ஆர்.டி.ஐ இன்ஜின் 75 bhp சக்தியை அளிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ. 'நவீன தொழிநுட்பத்தின் காரணமாக 20,000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மாற்றினால் போதும்!’ என்கிறது மஹிந்திரா.

படம்: எம்.உசேன்

டெய்ம்லர் ஏஜி டெஸ்ட் டிராக்!

மோட்டார் நியூஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற 'டெய்ம்லர் ஏஜி’ நிறுவனம், கமர்ஷியல் வாகனத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. கமர்ஷியல் வாகனங்களுக்கான புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்னையை அடுத்த ஒரகடத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. சென்னைத் தொழிற்சாலை முழுமையான செயல்பாட்டுக்கு வந்தவுடன், ஆண்டுக்கு ஒரு லட்சம் யூனிட்டுகள் வரை கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது டெய்ம்லர். வெளிநாட்டு நிறுவனம், நம் நாட்டில் தொழிற்சாலை அமைப்பது சாதாரண செய்திதான். ஆனால், நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயம் ஒன்று உண்டு. அது, தொழிற்சாலை வளாகத்துக்குக்கு உள்ளேயே அமைந்திருக்கும் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் டிராக்!  இது, பயன்பாட்டுக்கு வரும்போது, கமர்ஷியல் வாகனங்களைச் சோதிப்பதற்கான முழுமையான முதல் டெஸ்ட் டிராக், நம் நாட்டில் இதுவாகத்தான் இருக்கும்!

-  மோ.அருண் ரூப பிரசாந்த்