Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

வாங்க பாஷ் வாங்க!

 ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் உலக அளவில் புகழ் பெற்றது பாஷ் நிறுவனம். இதன் தயாரிப்புகள் இல்லாத வாகனமே இல்லை. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம், நம் நாட்டில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்து, உதிரி பாகங்களைத் தயாரிக்கிறது. சென்னை அருகே உள்ள ஒரகடத்தில், புதிய உதிரி பாகத் தயாரிப்புத் தொழிற்சாலையை அமைத்துள்ளது.

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 35 கோடி செலவில், 'பாஷ் எலெக்ட்ரிக்கல் டிரைவ்ஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குனர் உலால் பேசும்போது, ''இங்கே கார் ஜன்னல்களைத் திறக்க உதவும் விண்டோ லிஃப்ட் டிரைவ்ஸ், இன்ஜின் கூலிங் மாடியூல், வைப்பர் லிங்கேஜஸ் போன்ற உதிரி பாகங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ரெனோ, நிஸான், ஹூண்டாய், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் கமர்ஷியல் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இங்கு தயாராகும் உதிரி பாகங்கள் சப்ளையாகும்'' என்று தெரிவித்தார்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள் :  ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

 டெய்ம்ளரின் புதிய பிராண்ட் - ப்யூஸோ!

மோட்டார் நியூஸ்

 சென்னை ஒரகடத்தில் பாரத் பென்ஸ் டிரக்குகளைத் தயாரித்துவரும் டெய்ம்ளர் இந்தியா நிறுவனம், ஜப்பானைச் சேர்ந்த 'மிட்சுபிஷி ஃப்யூஸோ டிரக் அண்டு பஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. 'ஃப்யூஸோ’ எனும் புதிய பிராண்ட் பெயரில், சென்னை தொழிற்சாலையில் டிரக்குகள் தயாரிக்கிறது டெய்ம்ளர். இந்தப் புதிய பிராண்ட் டிரக்குகள், ஆசியா மற்றும் ஆஃப்ரிக்கா சந்தைக்கும் ஏற்றுமதி ஆகும். மொத்தம் 15 நாடுகளுக்கு ஏற்றுமதியாக இருக்கும் ஐந்து மாடல் டிரக்குகள், முதலில் இலங்கைக்கு இந்த மாதம் ஏற்றுமதியாகும். பின்பு, படிப்படியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும்.

படம், செய்தி:  செ.திலீபன்

 ஸ்விஃப்ட்டை பின்னுக்குத் தள்ளியது டிசையர்!

மோட்டார் நியூஸ்

 ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் நம்பர் ஒன் காராக விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோவின் இடத்தைப் பிடிக்கப் போகிறது மாருதி டிசையர். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா முழுக்க 19,847 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாக, மாருதி டிசையர் 19,446 கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஹேட்ச்பேக் காரான மாருதி ஸ்விஃப்ட்டின் ஏப்ரல் மாத விற்பனை 16,531 கார்கள் மட்டுமே! டாப் டென் கார்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதும் மாருதி கார்தான். வேகன்-ஆர் 12,784 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஹூண்டாயின் இயான், ஐ10, ஐ20 போன்ற சின்ன கார்களைவிடவும் மஹிந்திரா பொலேரோவின் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஸ்கார்ப்பியோ மற்றும் டொயோட்டா இனோவா கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரெனோ டஸ்ட்டர் டாப் டென் கார்கள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

 விலை உயர்த்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்!

 ஜூன் முதல் வாரத்தில் தனது கார்களின் விலையை அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். டீசல் விலை உயர்ந்து கொண்டே போவதால், கார்களை வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பும் செலவு  அதிகரித்திருப்பது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனச் சொல்லியிருக்கிறது ஜிஎம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism