Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

புஷ்பராஜ், மதுரை.

மோட்டார் கிளினிக்

நான் சின்ன ஹேட்ச்பேக் பெட்ரோல் கார் வாங்கலாம் என முடிவெடுத்து உள்ளேன். என்னுடைய ஃபைனல் லிஸ்ட்டில் ஹோண்டா பிரியோ, ரெனோ பல்ஸ் மற்றும் செவர்லே பீட் கார்களை வைத்திருக்கிறேன். மூன்றில் எதை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

மூன்று கார்களில் சிறந்த கார், ஹோண்டா பிரியோதான். ரெனோ பல்ஸின் விலை மிக அதிகம். பீட்டில், இட வசதி குறைவு. ஓட்டுதல் தரம், கையாளுமை, மைலேஜ் என அனைத்திலுமே சிறந்த கார், பிரியோ. ஆனால், பின் பக்கம் முழுவதுமாக கண்ணாடிக் கதவு என்பது எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியாது!

வி.கணேஷ்குமார், மதுரை.

மோட்டார் கிளினிக்

டொயோட்டா இனோவா வாங்கலாம் என இருக்கிறேன். ஆனால், இன்டர்நெட்டில் 2014-ம் ஆண்டு புதிய டிசைனில் இனோவா வெளிவரவிருப்பதாகப் படித்தேன். புதிய இனோவா அடுத்த ஆண்டு வெளிவருகிறதா?

மோட்டார் கிளினிக்

அடுத்த ஆண்டு வெளிவருவதாக இருந்த புதிய டிசைன் காரை, 2016-ம் ஆண்டுக்குத் தள்ளிவைத்துவிட்டது டொயோட்டா. அதனால், இனோவா வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், இப்போதைய இனோவாவையே வாங்கிவிடுவது நல்லது.

மு.ரஃபீக், திருச்சி.

மோட்டார் கிளினிக்

நான் கேடிஎம் ட்யூக் 200 பைக் வாங்கலாம் என இருக்கிறேன். இதில் ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட வேரியன்ட், புதிதாக வரவிருப்பதாக ஆன்லைனில் படித்தேன். இது உண்மையா?

மோட்டார் கிளினிக்

இப்போதைக்கு இல்லை. ஜூன் மாத இறுதியில் கேடிஎம் 390 ட்யூக் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், ஏபிஎஸ் பிரேக்ஸ் கொண்ட வேரியன்ட் அறிமுகப்படுத்தப்படும். அந்த நேரத்தில் கேடிஎம் ட்யூக் 200 பைக்கிலும் ஏபிஎஸ் பிரேக்ஸ் அறிமுகப்படுத்தப்படலாம். ஜூன் இறுதி வரை பொறுமை இருந்தால், உங்களுக்குத் தெளிவான பதில் கிடைக்கும்.

இளங்கோவன், சேலம்.

மோட்டார் கிளினிக்

நான் முதுகு வலிப் பிரச்னையால் அவதிப்படுகிறேன். அதனால், இனிமேல் பைக்கைப் பயன்படுத்தாமல், புதிய கார் வாங்க இருக்கிறேன். இருக்கைகள் சொகுசாகவும், சஸ்பென்ஷன் சிறப்பாகவும் இருக்க வேண்டும். அதோடு, கார் அதிக மைலேஜ் தர வேண்டும். என்னுடைய பட்ஜெட் 5-7 லட்சம். ஃபியட் புன்ட்டோ மற்றும் ஸ்கோடா ஃபேபியாவில் சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதாகப் படித்தேன். இரண்டில் எந்த காரை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ஸ்கோடா ஃபேபியாவை வாங்கலாம். இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல்கள் அதிகம் இருக்காது. ஆனால், ஸ்கோடா ஃபேபியா நகருக்குள் பயன்படுத்த மட்டுமே சிறப்பாக இருக்கும். நெடுஞ்சாலையில் அதிக தூரம் பயணிக்கும் அளவுக்கு இந்த காரில் பவர் இல்லை. இன்னொரு விஷயம் - ஃபேபியாவை நிறுத்தப் போகிறது ஸ்கோடா. எனவே, டிஸ்கவுன்ட் விலையில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நிர்மலா, கோவை.

மோட்டார் கிளினிக்

நான் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறேன். என் வீட்டில் இருந்து கல்லூரி 15 கி.மீ தொலைவில் இருக்கிறது. நான் மிகவும் ஒல்லியாக இருப்பேன். அதனால், எடை அதிகமான ஸ்கூட்டர் வேண்டாம். எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

டிவிஎஸ் ஸ்கூட்டி, இப்போதைய மார்க்கெட்டில் ஹிட் ஸ்கூட்டர். எடை குறைவு என்பதோடு, சிறப்பம்சங்களும் அதிகம். ஆனால், ஸ்கூட்டியின் இன்ஜின் மற்றும் பேட்டரியில் அடிக்கடி பிரச்னைகள் வருகின்றன. யமஹாவின் நம்பகத்தன்மை வாய்ந்த ரே ஸ்கூட்டர் இப்போது அதிகம் விற்பனையாகிறது. இது, எடை குறைவான ஸ்கூட்டர். மேலும், கையாள்வதற்கும் ஈஸியானது. மைலேஜ் லிட்டருக்கு 40 கி.மீ-க்கு மேல் தரும் என்பதால், நீங்கள் யமஹா ரே ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம்.

அஜய், சிதம்பரம்.

என்னுடைய நண்பரின் நண்பர் மிட்சுபிஷி சிடியா காரை வைத்திருக்கிறார். 2007-ம் ஆண்டு மாடல் கறுப்பு வண்ணம் கொண்ட கார். 30,000 கி.மீ இதுவரை ஓடியிருக்கிறது. 5 லட்சம் ரூபாய் விலை சொல்கிறார். இந்த காரை வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நீங்கள் வாங்கப்போகும் காரின் விலை ஆறு ஆண்டுகள் பழைய கார் என்பதால், 5 லட்சம் ரூபாய் என்பது அதிகம். 30,000 கி.மீ-தான் ஓடியிருந்தாலும், 3.5 லட்ச ரூபாய்க்குப் பேசலாம். சிடியா பயன்படுத்த நல்ல கார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், டீலர்கள் குறைவு என்பதால், சர்வீஸ் செய்வதில் பிரச்னைகள் எழலாம்.