##~##

வ்வொரு கார் நிறுவனமும் புதிய கார்களை அறிமுகம் செய்யும்போது, புதுப் புது சிறப்பசம்சங்களைச் சொல்லி அசரடிக்கும். அவையெல்லாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வசதிகளாக இருக்காது என்பதால், பலரும் அது வேலை செய்கிறதா, இல்லையா என்பதை செக் செய்வதே இல்லை. ஆனால், இப்போது வரும் எல்லா கார்களிலுமே 'டிஸ்டன்ஸ் டு எம்ப்டி’ என்று சொல்லப்படும், டேங்க்கில் இருக்கும் எரிபொருள் மூலம் இன்னும் எவ்வளவு கி.மீ செல்ல முடியும் என்ற விவரத்தை டேஷ்போர்டில் காட்டுகிறது. இதில் காட்டப்படும் கி.மீ தூரத்தை நம்பி பயணிக்கலாமா? இது உண்மையிலேயே பயனுள்ள வசதியா? டெஸ்ட் செய்வதற்காக நிஸான் சன்னி பெட்ரோல் காரை எடுத்துக் கொண்டோம். 

பெட்ரோல்

நிஸான் சன்னியின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 41 லிட்டர். 1,500 ரூபாய்க்கு பெட்ரோலை நிரப்பினால், அரை டேங்க்கைத் தாண்டிவிடுகிறது பெட்ரோல் இண்டிகேட்டர். இந்தக் கணக்குப்படி டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் அளவின் மூலம் 352 கி.மீ தூரம் செல்லலாம் எனக் காட்டியது 'டிஸ்டன்ஸ் டு எம்ப்டி’ மீட்டர். சென்னையின் சந்து பொந்துகள், சென்னை- திண்டிவம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் காரை எடுத்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்தோம். பெட்ரோல் தீரும் வரை காரை ஓட்ட வேண்டும் என்பதால், ஒரு கேனில் தனியாக 5 லிட்டர் பெட்ரோலைப் பிடித்து வைத்துக்கொண்டோம். காலை 10.30 மணிக்குப் பயணம் துவங்கியது.

மைலேஜ் மீட்டர்  நம்பலாமா?

எட்டு கி.மீ தூரம் தாண்டுவதற்குள்ளாகவே, 352 கி.மீ என்பது சட்டென 307 கி.மீ எனக் காட்டியது. நகர டிராஃபிக்கில் கிளட்ச், பிரேக் மற்றும் கியர்களின் வேலை அதிகம் என்பதால்தான் இந்த மைலேஜ் சரிவு என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 77 கி.மீ தாண்டியபோது, இருக்கும் பெட்ரோல் மூலம் 243 கி.மீ தூரம் செல்ல முடியும் என்றது டிஜிட்டல் மீட்டர். இருப்பினும் பெட்ரோலை நிரப்பியபோது இருந்ததுபோலவே, பெட்ரோல் இண்டிகேட்டர் நான்கு முள்ளிலேயே இருந்தது.

மைலேஜ் மீட்டர்  நம்பலாமா?

திண்டிவனம்,  பெங்களூரு நெடுஞ்சாலை ரூட் என காரை ஓட்டிக்கொண்டே இருந்தோம். மாலை ஆறு மணியாகி சூரியன் மறையத் துவங்கியது. பெட்ரோல் இண்டிகேட்டர் மீட்டரும் மறையத் துவங்கியது. கடைசியாக பெட்ரோல் முள் 1 பாயின்ட்டில் காட்ட, டிஸ்டன்ஸ் டு எம்ப்டி மீட்டர் இன்னும் இருக்கும் பெட்ரோலில் 39 கி.மீதான் பயணிக்க முடியும் எனக் காட்டியது.

எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தீரும் என்பதால், சாலையின் ஓரமாகவே காரை ஓட்டிக்கொண்டிருந்தோம். டிஸ்டன்ஸ் டு எம்ப்டி மீட்டர் முழுவதுமாக நின்றுவிட்டது. நம்முடைய கி.மீ ரீடிங் படி 39 கி.மீ கடந்தது. எந்த நிமிடமும் பெட்ரோல் தீரலாம் என்பதால் ஜாக்கிரதையாக காரை ஓட்டினோம். ஆனால் 50 கி.மீ கடந்த பிறகும் பெட்ரோல் தீரவில்லை. கடைசியாக 102 கி.மீ.யைக் கடந்தபோதுதான் பெட்ரோல் தீர்ந்து கார் நின்றது!

டிஸ்டன்ஸ் டு எம்ப்ட்டி மீட்டர் முழுவதுமாக நின்று 63 கி.மீ தாண்டித்தான் கார் நின்றது. இதனால் நிஸான் சன்னியின் டிஸ்டன்ஸ் டு எம்ப்ட்டி மீட்டரை எப்போதும் நம்பலாம் என்பது புரிந்தது!

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு