இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் மோட்டார் விகடன் வெளிவருவதற்குள் தமிழகத்தில் ஒரு 'அயன் பட்’ சாதனை நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், இந்த முறை நிகழ்த்தப்பட்ட சாதனையில் ஒரு சின்ன ஆச்சரியம். ஒரே ரைடில் 2,000 கி.மீ 'சாடில் சோர்’(2000k Saddle Sore) , 2,600 கி.மீ 'பன் பர்னர்’ (2600k Bun Burner), ஒரே நாளில் அதிக தூரம் பைக் ஓட்டியதற்கான லிம்கா சாதனை முயற்சி என, 36 மணி நேரத்தில் மூணு லட்டு சாப்பிட்டு இருக்கிறார் பூங்கதிர்வேலன்.

இவர் மோட்டார் விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தனது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் 1,600 கி.மீ 'சாடில் சோர்’ பிரிவில் 'அயன் பட்’ சாதனை புரிந்தவர் பூங்கதிர். இந்தமுறை இவர் பயணம் செய்தது யமஹா ஆர்-15 பைக்கில்.

''அயன் பட், லிம்கா ரெண்டும் சேர்ந்து பண்ணுனதால டாக்குமென்ட்ஸ் ரெடி பண்ணத்தான் கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. மற்றபடி, ரைடு போறதைப் பத்தி எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. லாங் டிஸ்டன்ஸ் பைக்கிங்க்ல யாரும் டச் பண்ண முடியாத நெறைய ரெகார்ட் பண்ணணும். அதுக்கான முதல் படிதான் இந்த ரைடு!' - பூங்கதிர் வேலனிடம் இருந்து வேகமும் வீரியமுமாக வந்து விழுகின்றன வார்த்தைகள்.

மே 18-ம் தேதி மாலை 6:50 மணிக்கு கன்னியாகுமரியில் ஆரம்பித்து மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு, அனந்தபூர், கர்னூல் வழியாக ஹைதராபாத் அருகில் இருக்கும் திம்மப்பூர் வரை சென்றிருக்கிறார். அங்கிருந்து 'யு டர்ன்’ அடித்து சேலம், வழியாக வந்து கரூரில் பிரேக் அடித்து, மீண்டும் சேலம், உளுந்தூர்பேட்டை திண்டிவனம். மறுபடியும் சேலம் திரும்பி இறுதியாக ராசிபுரத்தில் தன் பயணத்தை முடித்தபோது, பூங்கதிர்வேலன் பயணம் செய்திருந்தது 36 மணி நேரத்தில் 2,600 கி.மீ தூரம்.

'கன்னியாகுமரியில் ஆரம்பித்து பெங்களூரு ரீச் ஆகும்வரை என் ரைடுல எந்தப் பிரச்னையும் இல்லை. கர்நாடகா - ஆந்திரா பார்டர்ல இருக்கிற ரோடு எல்லாம் ஏறி ஏறி இறங்கும். மேல ஏறும் ரோடு எந்தப் பக்கம் டர்ன் ஆகும்னு ஒரு ஜட்ஜ்மென்டே இருக்காது. அதனால, கொஞ்ச நேரம்கூட நாம அசால்ட்டா பைக் ஓட்ட முடியாது. இந்த ரைடுல நான் சந்திச்ச மிகப் பெரிய சவால் தூக்கம்தான். அதிகாலையில ரோட்டோட விஸிபிளிட்டி குறைவா இருந்தது. எனக்கும் தூக்கம் கண்ணைக் கட்டிடுச்சு. பையில இருந்த எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு குடிச்சு தூக்கத்தை கன்ட்ரோல் பண்ணுனேன். கொஞ்ச நேரத்துல விடிய ஆரம்பிச்சதும் தூக்கம் கலைஞ்சிருச்சு. பெட்ரோல் போடவும், நடுவுல ரெண்டு தடவை டீ குடிக்கவும் மட்டும் தான் பைக்கை நிறுத்தினேன்.

ரைடு ஆரம்பிச்ச மறுநாள் 24 மணி நேரம் முடிய 1 மணி நேரம் முன்னாடியே, 2,000 கி.மீ கவர் பண்ணிட்டேன். அடுத்த 600 கி.மீ கவர் பண்ண இன்னும் 12 மணி நேரம் மீதம் இருந்தது. அதனால, சேலம் பக்கத்துல இருக்கிற என் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு, நிதானமாத் தான் ரைடு போனேன்!'' என்று பைக் ஓட்டியதை எந்த வர்ணனையும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி விவரித்தார்.

ரைடு கிளம்புவதற்கு முன் யமஹா சர்வீஸ் சென்டரில் ஒரு ஜெனரல் சர்வீஸ் மட்டும் செய்திருக்கிறார் பூங்கதிர். அதோடு, புது ஸ்பார்க் ப்ளக், ஏர் ஃபில்ட்டர், டைமிங் செயின், டிஸ்க் பிரேக் பேடு, டயர்கள் மாற்றியிருக்கிறார். ரைடுக்குத் தேவையான டூல்ஸ் கிட், எக்ஸ்ட்ரா இன்ஜின் ஆயில், ஸ்பார்க் ப்ளக் என எல்லாம் சேர்த்து இந்த ரைடுக்கான மொத்த பட்ஜெட் மொத்தம் 23,000 ரூபாய்.

இந்தப் பயணத்துக்காக பூங்கதிர் தயாரான விதம் பற்றிக் கேட்டபோது, ''பைக்குக்குத்தான் இவ்வளவு செலவும் ஆனதே தவிர, எனக்குச் செலவு குறைவு. என் பையில ஒரு பாட்டில் எலெக்ட் ரோலைட் கரைசல், ஒரு பாக்கெட் பேரீச்சம்பழம், மூணு எலுமிச்சம் பழம் இவ்வளவுதான் இருந்தது. ட்ரெக்கிங், சைக்கிளிங், யோகா - இப்படி ஃபிட்னெஸ்ல நான் எப்பவும் ஆர்வமா இருப்பேன். அதனால, இந்த ரைடுக்காக தனியா எதுவும் என்னைத் தயார்படுத்திக்கலை!'' என்றார்.

இது எல்லாவற்றையும் விட இந்த ரைடில் அவருக்குப் பெரிதும் உதவியது, அவர் கையோடு கொண்டு போயிருந்த கார்மின் ஜிபிஎஸ் (Garmin GPS). 35,000 ரூபாய் மதிப்புள்ள ஜெர்மன் தயாரிப்பான இந்த ஜிபிஎஸ் இன்ஸ்ட்ரூமென்ட்டை, நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கிச் சென்றிருக்கிறார். இந்த ரைடின் டிராக்கிங் மற்றும் டாக்குமென்டேஷனுக்கு இந்த ஜிபிஎஸ் கருவிதான் பெரிதும் உதவியிருக்கிறது.

நெடுஞ்சாலையில் இவரது ஆர்-15 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 137 கி.மீ. ஆவரேஜ் மைலேஜ் லிட்டருக்கு 23 கி.மீ. பேட்டி முடிந்து கிளம்பும்போது, ''அடுத்ததா சென்னை டூ மும்பை, டெல்லி, கொல்கத்தா மறுபடியும் சென்னை - இப்படி நாலு நாள்ல இந்தியாவின் நாலு மெட்ரோ சிட்டியையும் கவர் பண்ற பிளான்ல இருக்கேன். திரும்பவும் மீட் பண்ணுவோம்'' என்றார்.