ஹோண்டாவுக்கு இந்தியாவில் இது இரண்டாவது இன்னிங்ஸ். மிகப் பெரிய டீசல் கார் மார்க்கெட்டான இந்தியாவில், 15 ஆண்டுகளாக டீசல் கார் இல்லாமல் இருந்த ஹோண்டாவுக்கு, இந்த ஆண்டுதான் விடிவெள்ளி. லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ் என்ற மிகப் பெரிய சிறப்பம்சத்துடன் ஹோண்டா அறிமுகப்படுத்திய அமேஸ், கார் மார்க்கெட்டில் இப்போது அதிரடி நாயகன்.

இந்தியாவில் ஹோண்டாவின் முதல் காரான சிட்டியில் இருந்து, அமேஸ் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது. இரண்டு கார்களையும் ஒன்றாக வைத்து டெஸ்ட் செய்தோம். இது, இரண்டு கார்களுக்குமான போட்டி இல்லை. ஹோண்டா நிறுவனம் இந்த இரண்டு கார்களிலும் எந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்கிறது என்பதை அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

ஹோண்டா சிட்டி

1997-ம் ஆண்டு ஹோண்டா சிட்டி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் மிட் சைஸ் கார் மார்க்கெட்டின் ட்ரெண்ட் செட்டர் இதுதான். பெட்ரோல் இன்ஜின்கொண்ட கார், விலை அதிகம் என்பதை எல்லாம் தாண்டி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ஹோண்டா சிட்டி. இப்போது 2013-ம் ஆண்டு, மினி மிட் சைஸ் அதாவது, பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதே போன்ற ட்ரெண்ட் செட்டர் காராக அமேஸைக் கொண்டுவந்திருக்கிறது ஹோண்டா. இரண்டு கார்களுக்கும் உள்ள ஆச்சரிய ஒற்றுமை, இரண்டுமே 1.5 லிட்டர் இன்ஜின், 100 bhp சக்திகொண்டவை. பழைய ஹோண்டா சிட்டி - பெட்ரோல்; புதிய அமேஸ் - டீசல் என்பது மட்டுமே வேறுபாடு.

டிசைன்

1997-ம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா சிட்டி காருக்கு, இன்றும் டிமாண்ட் அதிகம் இருக்கிறது என்பதே இந்த காரின் புகழுக்கு உதாரணம். அசரடிக்கும் ஸ்டைல் இல்லை. வளைவு நெளிவுகள், எக்ஸ்ட்ரா கோடுகள் எதுவும் இல்லை. ஆனால், செம ஸ்மார்ட் காராக இருக்கிறது ஹோண்டா சிட்டி. 15 ஆண்டு கால பழைய டிசைன் என்றாலும், இப்போதும் இந்த காரின் டிசைனைப் பின்பற்றி, பல புதிய கார்கள் விற்பனைக்கு வருகின்றன. அந்த அளவுக்கு மார்டன் டிசைன்கொண்டது பழைய ஹோண்டா சிட்டி. காரின் உள்பக்கம் முழுவதும் அடர் சாம்பல் வண்ணத்திலும், சென்டர் கன்ஸோலில் மரத்தால் செய்யப்பட்டது போல வுட் ஃபினிஷிங்கும் கொடுக்கப்பட்டு இருந்தது பலரையும் ஈர்த்தது. ஆனால், முழுக்க அடர் வண்ணத்தில் காரின் உள்பக்கம் கறுப்பாக இருந்ததால், இட வசதி குறைவு என்பது போன்ற தோற்றம் வந்துவிட்டது.

உள்பக்க பாகங்களின் தரம் சூப்பர் என்பதற்கு உதாரணம், நாம் இப்போது டெஸ்ட் செய்த ஹோண்டா சிட்டிதான். 15 ஆண்டு கால பழைய கார் என்றாலும் உள்பக்க பாகங்களில் எதுவும் பழுதடையவில்லை. எதையும் மாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை.

முதல் தலைமுறை ஹோண்டா சிட்டியில் இருந்த சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை பவர் விண்டோ, பவர் மிரர், சென்டர் லாக்கிங் ஆகியவை அடங்கும். பழைய ஹோண்டா சிட்டியின் மிகப் பெரிய குறையாக இருந்தது சீட்டிங் பொசிஷன்தான். இருக்கைகள் மிகவும் தாழ்வாக இருப்பதால், தரையில் உட்கார்ந்து பயணிப்பது போன்ற உணர்வையே தருகிறது. மேலும், காருக்குள் குனிந்து நெளிந்து உள்ளே நுழைய வேண்டியிருப்பது, எக்ஸ்ட்ரா சைஸ் பார்ட்டிகளுக்குக் கொஞ்சம் கஷ்டம். ஆனால், இருக்கையில் உட்கார்ந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் இருக்காது. கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம்.

15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு, ஹோண்டா அறிமுகப்படுத்தி இருக்கும் அமேஸில், சிட்டியில் குறைகளாக இருந்த பல விஷயங்களை மாற்றியிருக்கிறது ஹோண்டா. இருக்கைகள் மிகவும் உயரமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், நீங்கள் முழுச் சாலையையும் பார்த்து ஓட்ட முடிகிறது. பின்னால் உட்கார்பவர்களும் வெளியே பார்த்து ரசிக்கலாம். கிட்டத்தட்ட 4.5 மீட்டர் நீளம்கொண்ட பழைய ஹோண்டா சிட்டியில் இருந்து, 4 மீட்டர் நீளத்துக்குள்ளான காராக மாறியிருக்கிறது அமேஸ்.

ஹோண்டா சிட்டியின் இருட்டான கேபின், ஹோண்டா அமேஸில் கலர்ஃபுல் பளிச் கேபினாக மாறியிருக்கிறது. இரட்டை வண்ண டேஷ் போர்டு பளிச்சென இருக்கின்றன. பிளாஸ்டிக் குவாலிட்டி மற்றும் பில்டு குவாலிட்டியைப் பொறுத்தவரை ஹோண்டா சிட்டி அளவுக்கு அமேஸ் இல்லை. குறைந்த விலைக்கு விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற கட்டாயத்துக்காக, குவாலிட்டியைக் குறைத்துகொண்டது இரு கார்களையும் பார்க்கும்போது புரிகிறது.

4.5 மீட்டர் நீளம்கொண்ட பழைய ஹோண்டா சிட்டியைவிட, 3.9 மீட்டர் நீளமே கொண்ட ஹோண்டா அமேஸில், பின் பக்கம் இட வசதி தாராளம். 'மிஷின் மினிமம், மேன் மேக்ஸிமம்’ என்ற கொள்கையின்படி, ஹோண்டா அமேஸ் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், மெக்கானிக்கல் விஷயங்களுக்கான இடம் குறைக்கப்பட்டு, காருக்குள் இட வசதி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சிறப்பம்சங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. பழைய ஹோண்டா சிட்டியில் இருந்த சிறப்பம்சங்களுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் டயல், ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல், பென் டிரைவ் இணைக்கும் வசதியைத் தவிர, புதிய சிறப்பம்சங்கள் எதுவும் ஹோண்டா அமேஸில் இல்லை.

இன்ஜின்

இந்த இடத்தில்தான் இரண்டு கார்களும் வித்தியாசப்படுகின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட ஹோண்டா சிட்டி, அதிகபட்சமாக 100 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 'எர்த் ட்ரீம்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் அமேஸின் டீசல் இன்ஜின், ஹோண்டா சிட்டியைப் போலவே 1.5 லிட்டர் திறன்கொண்டு, 100 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. சக்தி ஒன்றுதான், சிசி திறன் ஒன்றுதான் என்றாலும், இன்ஜினை ஸ்டார்ட் செய்ததும் இரண்டு கார்களுக்கான வித்தியாசம் வரிசைகட்ட ஆரம்பித்துவிடுகின்றன. நாம் டெஸ்ட் செய்த பழைய ஹோண்டா சிட்டி இதுவரை ஒரு லட்சம் கி.மீ தூரத்தைக் கடந்திருந்தது. இருந்தும், கார் ஸ்டார்ட் ஆகிவிட்டதா, இல்லையா? எனச் சந்தேகப்படும் அளவுக்கு எந்தச் சத்தமோ, அதிர்வுகளோ இல்லை. ஆனால், அமேஸின் டீசல் இன்ஜின் - கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பதை உலகுக்கு அறிவிக்கிறது.

ஹோண்டா சிட்டியில் பவர் டெலிவரி மிகவும் சீராக இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை பவர் குறைபாடு இல்லாமல், இன்ஜின் திணறாமல் இருப்பதால், ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உற்சாகத்தைத் தூண்டுகிறது ஹோண்டா சிட்டி. கியர் ஷிஃட்டும் செம ஸ்மூத். எந்தத் திக்கலும் இல்லாமல் கியர்களை ஈஸியாக மாற்ற முடிகிறது. 15 ஆண்டுகள் ஆகிவிட்ட ஹோண்டா சிட்டியை, இப்போது ஓட்டும்போதும் பெர்ஃபாமென்ஸில் எந்தக் குறையும் இல்லை என்பது இன்ஜின் நம்பகத்தன்மையை உணர்த்துகிறது. 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 12 விநாடிகளில் கடந்து விடுகிறது முதல் தலைமுறை ஹோண்டா சிட்டி. அதிகபட்ச வேகத்தைப் பொறுத்தவரை மணிக்கு 180 கி.மீ வேகத்தைத் தொடுகிறது.

டீசல் இன்ஜின் என்பதோடு, சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டு இருப்பதால், ஆரம்பத்தில் இருந்தே வேகமாக இருக்கிறது ஹோண்டா அமேஸ். காரை ஸ்டார்ட் செய்து கியரைப் போட்ட உடனே கார் சீற ஆரம்பித்துவிடுகிறது. இதனால், நகருக்குள் ஓட்டும்போது காரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அமேஸுடன் போட்டி போடும் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, இதில் டர்போ லேக் இல்லை. ஆனால், 4,000 ஆர்பிஎம் மேல் இன்ஜினில் பவர் இல்லை. இதனால், 100 bhp சக்தி இருந்தும் ஹோண்டா சிட்டியுடன், அமேஸால் வேகப் போட்டி போட முடியவில்லை. மேலும், ஹோண்டா அமேஸின் இன்ஜின் சத்தத்தைக் குறைக்க, ஹோண்டா சில முயற்சிகளை கட்டாயம் எடுத்தாக வேண்டும்.

மைலேஜில், ஹோண்டா அமேஸ் அமேஸிங். ஹோண்டா சிட்டி நகருக்குள் லிட்டருக்கு 11 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கி.மீ மைலேஜ் தருகிறது. ஆனால், இது சரியான வேகத்தில், சரியான கியர் ஷிஃப்ட்டில் காரை ஓட்டினால் தான். வேகம் பிடித்து, இன்ஜினைக் கதறவிட்டால், ஹோண்டா சிட்டியின் மைலேஜ் 10 கி.மீக்கும் கீழ் குறைந்து விடுகிறது. ஹோண்டா அமேஸ் நகருக்குள் 15.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 20.8 கி.மீ மைலேஜ் தருகிறது.

15 ஆண்டுகளான கார் என்றாலும் இன்றும் பெர்ஃபாமென்ஸிலும், தரத்திலும் நம்பர் ஒன் காராக இருக்கிறது ஹோண்டா சிட்டி. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அன்றாடம் பயன்படுத்துவதற்கு அதிக மைலேஜ் தரும் சிறந்த காராக இருக்கிறது ஹோண்டா அமேஸ். இப்போது பிராக்ட்டிக்கலான கார்கள்தான் தேவை என்பதை அமேஸ் உணர்த்துகிறது. அதேபோல், இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பம் எப்படி மாறியிருக்கிறது என்பதையும் சிட்டி - அமேஸ் கால இடைவெளி தெளிவாகக் காட்டுகிறது!