Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

அமேஸ், சிஆர்-வி -  விலை உயர்கிறது!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் விற்பனைக்கு வந்து, டாப் 10 கார்களில் ஆறாவது இடத்தில் இருக்கும் தனது முதல் டீசல் காரான அமேஸின் விலையை உயர்த்தியிருக்கிறது ஹோண்டா. வேரியன்ட்டைப் பொறுத்து ஹோண்டா அமேஸின் விலை 3,000 முதல் 8,000 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. அதேபோல், சிஆர்-வி காரின் விலையையும் வேரியன்ட்டைப் பொறுத்து 6,000 முதல் 14,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது ஹோண்டா.

மோட்டார் நியூஸ்

வருகிறது நிஸான் டெரானோ!

மோட்டார் நியூஸ்

சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நிஸான் கார்களை ரெனோவும் - ரெனோ கார்களை நிஸானும் தங்களுடைய பெயரில் விற்பனைக்குக் கொண்டுவருவார்கள் என்பதுதான் ஒப்பந்தம். அதன்படி நிஸானின் மைக்ரா, சன்னி கார்கள், ரெனோவின் பெயரில் பல்ஸ், ஸ்காலாவாக வெளிவந்தன. தற்போது மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கும் ரெனோவின் டஸ்ட்டர், நிஸான் லோகோவுடன் வெளிவர இருக்கிறது. 'நிஸான் டெரானோ’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த காருக்கும், டஸ்ட்டருக்கும் உள்பக்கத்தைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசங்கள் எதுவும் இருக்காது. இன்ஜின் உள்பட எல்லாமே ஒன்றுதான். ஆனால், வெளித்தோற்றத்தில் நிஸான் டெரானோ, டஸ்ட்டரைவிட இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். நிஸானின் இன்னொரு எஸ்யூவியான எக்ஸ்-ட்ரெயில் காரைப் போல் இருக்கிறது டெரானோவின் வெளிப்பக்கம். டஸ்ட்டரைவிட, டெரானோ 50,000 - 75,000 ரூபாய் வரை விலை அதிகமாக இருக்கும்.

மோட்டார் நியூஸ்

ரெனோ ஸ்காலாவில் விலை குறைந்த மாடல்!

மோட்டார் நியூஸ்

நிஸான் சன்னி காரை ரீ-பேட்ஜ் செய்து 'ஸ்காலா’ என்ற பெயரில் வெளியிட்டது ரெனோ. என்னதான் சன்னியின் ப்ளஸ் பாயின்ட்டுகள் அத்தனையும் ஸ்காலாவில் இருந்தாலும், பெரிய வரவேற்பைப் பெற முடியவில்லை. அதனால், விலை குறைந்த RXe  டீசல் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெனோ. 9.64 லட்ச ரூபாய் (சென்னை-ஆன் ரோடு) விலையில் விற்பனைக்கு வந்திருந்தாலும், வசதிகளில் குறை வைக்கவில்லை ரெனோ. இந்த வேரியன்ட்டில் ஒரு காற்றுப் பை, ஏபிஎஸ் மற்றும் இபிடி, பிரேக் அசிஸ்ட், ஆடியோ சிஸ்டம், ரியர் கூலிங் வென்ட், மற்றும் பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

மோட்டார் நியூஸ்

பென்ஸ் ஏ கிளாஸுடன் போட்டி... வருகிறது பிஎடம்பிள்யூ 1 சிரீஸ்!

மோட்டார் நியூஸ்

பென்ஸின் ஹேட்ச்பேக் காரான பென்ஸ் ஏ கிளாஸ் காருடன் போட்டி போட, விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது பிஎம்டபிள்யூ 1 சீரிஸ். சென்னை மறைமலைநகர் அருகே உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்ட இருக்கும் இந்த கார், பென்ஸ் ஏ கிளாஸைவிட விலை குறைவானதாக இருக்கும். 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வர இருக்கும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸின் விலை, 20 - 24 லட்ச ரூபாய்க்குள் இருக்கும்!

மோட்டார் நியூஸ்

புதிய போர்ஷே கேமன்-எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

மோட்டார் நியூஸ்

ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் உலகின் மிகச் சிறந்த கார்களிள் ஒன்றான, போர்ஷே கேமன் எஸ் காரின் 2013-ம் ஆண்டு மாடல் விற்பனைக்கு வந்து விட்டது. பழைய கேமன் காரைவிட 2013 மாடல் வடிவமைப்பில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் இருப்பது 3.4 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இன்ஜின். 321 bhp அளிக்கும் இந்த இன்ஜின், 0 - 100 கி.மீ வேகத்தை 5 விநாடிகளுக்குள் கடந்து விடுகிறது. 92.27 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ்ஷோரூம் மும்பை) விற்பனைக்கு வந்திருக்கிறது போர்ஷே கேமன் எஸ்.

மோட்டார் நியூஸ்

ஆல்ட்டோ 800 காரில் புதிய வேரியன்ட்!

மோட்டார் நியூஸ்

ஆல்ட்டோ 800 காரில், விலை உயர்ந்த புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது மாருதி. இதில், டிரைவர் பக்க காற்றுப் பை, சென்டர் லாக்கிங், நான்கு ஸ்பீக்கர்கள்கொண்ட மியூஸிக் சிஸ்டம் ஆகிய சிறப்பம்சங்கள் அடக்கம். காரின் வெளிப்பகுதியில் இடது பக்க ரியர்வியூ கண்ணாடி மற்றும் ஸ்பாய்லரும் புதிதாகச் சேர்ந்துள்ளன. இதன் விலை ரூ.3,17,080 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மோட்டார் நியூஸ்

ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கு மே மாதமும் சோதனை மாதம்தான். மே மாதம் மொத்த விற்பனை 12 சதவிகிதம் சரிந்திருக்கிறது. மாருதியின் வரலாற்றில் முதன்முறையாக 13 சதவிகிதம் விற்பனை குறைந்திருக்கிறது. மேலும், ஆல்ட்டோவைப் பின்னுக்குத் தள்ளி, மாருதி டிசையர் விற்பனையில் முதல் இடம் பிடித்திருக்கிறது. முதன்முறை கார் வாங்கும் வாடிக்கையாளர்கள், தற்போது கார் வாங்கும் முடிவைத் தள்ளி வைத்திருக்கின்றனர் என்பதைத்தான் இந்த விற்பனை விபரம் காட்டுகிறது.

மோட்டார் நியூஸ்

மே மாதம் 16,411 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், காம்பேக்ட் செடான் காரான டிசையரோ, 17,265 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. மேலும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது டிசையர். அடுத்ததாக, ஹூண்டாய் இயான் 8,406 கார்களும், ஹூண்டாய் ஐ-10, 8,460 கார்களும், ஐ20 5,701 கார்களும் விற்பனை ஆகி இருக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிலைமை படு மோசமாக இருக்கிறது. 5,500 கார்கள் மட்டுமே விற்பனையாகி, இண்டிகா கடைசி இடத்தில் இருக்கிறது. இது தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் டாடாவின் எந்த காரும் முதல் 10 இடங்களில் இருக்காது. ஹோண்டா அமேஸ் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருக்கிறது. அமேஸின் மே மாத விற்பனை 6,036. மஹிந்திராவின் வெற்றிப் பயணம் மே மாதமும் தொடர்ந்தது. பொலேரோவின் 9,780 கார்கள் விற்பனையாக, ஸ்கார்ப்பியோ 5,165 கார்கள் விற்பனையாகி இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism