பரபரப்பான கட்டத்தை நெருங்கி இருக்கிறது மோட்டோ ஜீபி. கடந்த மாதம் பிரான்ஸில் நடைபெற்ற ரேஸில், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா வெற்றி பெற, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற ரேஸில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ.

மோட்டோ ஜீபி - பிரான்ஸ்

அதிவேக பைக் ரேஸ் போட்டியான மோட்டோ ஜீபியின் நான்காவது சுற்று, மே 19-ல் பிரான்ஸின் லீ மான்ஸ் ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஹோண்டாவின் மார்க் மார்க்யூஸ். ரேஸ் துவங்கிய சிறிது நேரத்திலேயே... காட்சிகள் மாறத் துவங்கின. மார்க்யூஸ் ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட, டோவிஸியோஸோ முதல் இடத்துக்கு முன்னேறினார். மொத்தம் 26 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் முடிவில், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா முதல் இடம் பிடித்தார். மான்ஸ்ட்டர் யமஹா அணியின் க்ரட்ச்லோ இரண்டாம் இடமும், ஹோண்டாவின் இளம் புயல் மார்க் மார்க்யூஸ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

மோட்டோ ஜீபி - இத்தாலி

உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக்கொண்ட பைக் ரேஸ் சாம்பியன் வாலண்டினோ ராஸி. இவரின் சொந்த ஊரான இத்தாலியின் முகல்லோ நகரில், மோட்டோ ஜீபியின் ஐந்தாவது சுற்று ஜூன்

2-ம் தேதி நடைபெற்றது. டேனி பெட்ரோஸா முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற, லோக்கல் ஹீரோ ராஸிக்கு ஏழாவது இடமே கிடைத்தது. இருப்பினும் ராஸியை உற்சாகப்படுத்த பல்லாயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இதனால், வெற்றி பெறும் உற்சாகத்துடன் ரேஸைத் துவக்கினார் ராஸி. ஆனால், ரேஸ் துவங்கிய சில விநாடிகளில், இரண்டாவது வளைவின்போது படிஸ்டுடாவின் பைக்குடன் ராஸியின் யமஹா மோத... ரேஸ் டிராக்கின் வெளியே போய் விழுந்தார் ராஸி. இதில் பலத்த காயம் அடைந்ததால், ரேஸைவிட்டு வெளியேறினார். இவர் இல்லதாததால், முகல்லோ ரேஸ் போட்டி களை இழந்தது. இதற்கிடையே மூன்றாவது லேப்பின்போது மற்றொரு முன்னணி வீரரான மார்க்யூஸும் விபத்தில் சிக்கி வெளியேறினார். இறுதியில், யமஹாவின் மற்றொரு வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜார்ஜ் லாரன்சோ வெற்றி பெற, டேனி பெட்ரோஸா இரண்டாம் இடமும், கால் க்ரட்ச்லோ மூன்றாம் இடமும் பிடித்தனர்.

மோட்டோ ஜீபி - ஸ்பெயின்

மோட்டோ ஜீபி பைக் ரேஸின் ஆறாவது சுற்று ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயினில் உள்ள காட்டலுன்யா நகரில் நடைபெற்றது. ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். மொத்தம் 25 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் முழுக்க ஸ்பெயின் வீரர்களின் ஆதிக்கம்தான். ஜார்ஜ் லாரன்சோ, டேனி பெட்ரோஸா, மார்க் மார்க்யூஸ் என முதல் மூன்று இடங்களையும் ஸ்பெயின் வீரர்கள் பிடித்து விட, ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய வாலன்டினோ ராஸி நான்காவது இடம் பிடித்தார்.

இதுவரை ஏழு சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா 123 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ 116 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், மார்க் மார்க்யூஸ் 93 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

>>சார்லஸ்