Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

கடந்த இதழில், நிஸான் நிறுவனம் டஸ்டர் கார் போன்றே ஒரு எஸ்யூவியை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாகப் படித்தேன். இந்த கார் டஸ்டர் போன்று இருக்குமா அல்லது பெர்ஃபாமென்ஸில் இன்னும் பவர்ஃபுல்லாக இருக்குமா? இது வரும்வரை காத்திருக்கலாமா அல்லது இப்போதே டஸ்டரை வாங்கலாமா?

மகேஸ்வரன், ஜெயங்கொண்டம்.

மோட்டார் கிளினிக்

• நிஸான் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் டஸ்டர் டைப் எஸ்யூவியின் பெயர் டெரானோ. இந்த காருக்கும், டஸ்டருக்கும் உள்பக்கத்தைப் பொறுத்த வரை பெரிய வித்தியாசங்கள் எதுவும் இருக்காது. இன்ஜின் உட்பட எல்லாமே ஒன்றுதான். ஆனால், வெளித்தோற்றத்தில் டெரானோ, டஸ்டரைவிட இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். கடந்த இதழில், ரெனோ டஸ்டரைவிட நிஸான் எஸ்யூவி காரின் விலை குறைவாக இருக்கும் என எழுதியிருந்தோம். ஆனால், கூட்டணிக் கொள்கைக்கு மாறாக டெரானோவின் விலை டஸ்டரைவிட  50,000 முதல் 75,000 ரூபாய்வரை அதிகமாக இருக்கும். காரணம், டெரானோவில் கீ-லெஸ் என்ட்ரி உள்பட பல புதிய சிறப்பம்சங்கள் இருக்கின்றன. மற்றபடி ரெனோவின் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இதிலும்! அதனால், பெர்ஃபாமென்ஸில் எந்த மாற்றமும் இருக்காது. பெர்ஃபாமென்ஸ் அதிகம் இருக்க வேண்டும் என்பதுதான் உங்கள் தேவை என்றால், நிஸான் எஸ்யூவிக்காகக் காத்திருப்பதற்குப் பதில், ரெனோ டஸ்டரையே வாங்கலாம்.

மோட்டார் கிளினிக்

பஜாஜ் நிறுவனம் புதிதாக பல்ஸர் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக ஆன்லைனில் படித்தேன். இது உண்மையா?

மோட்டார் கிளினிக்

- சிவசூர்யா, சிவகங்கை

• ஆமாம். இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது புதிய பல்ஸர். தோற்றத்திலும் பெர்ஃபாமென்ஸிலும் இது பல முன்னேற்றங்களைக் கொண்ட பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது தவிர, கேடிஎம் 390 பைக்கின் இன்ஜினைக்கொண்டு பல்ஸர் 375 பைக்கையும் இந்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவருகிறது பஜாஜ்.  

மோட்டார் கிளினிக்

புதிதாக ஒரு மிட் சைஸ் கார் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். என்னுடைய உயரம் 6 அடி. என்னுடைய மனைவியும் நல்ல உயரம். என்னுடைய இரண்டு மகன்களும் உயரமானவர்கள். எனவே, கால்களை நீட்டி வசதியாக உட்கார, அதிக இட வசதிகொண்ட கார் வேண்டும். என்னுடைய பட்ஜெட் 8-9 லட்சம். எந்த கார் வாங்கலாம்? ஹோண்டா அமேஸ் எனக்குச் சரியாக இருக்குமா?

- சிவராஜ், திருச்சி

மோட்டார் கிளினிக்

• முன்பக்க இட வசதியைப் பொறுத்தவரை, ஹோண்டா அமேஸில் அதிக இடம் இருக்கிறது. ஆனால், 4 மீட்டர் கார் என்பதால், பின் பக்க இட வசதி அவ்வளவு தாராளம் இல்லை. அதனால், உங்கள் தேவைக்கு ஏற்ற சரியான கார் நிஸான் சன்னிதான். உண்மையிலேயே அதிக இட வசதிகொண்ட கார் இதுதான். உங்கள் குடும்பத்தினர் அனைவருமே இந்த காரில் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும்.

மோட்டார் கிளினிக்

நான் பல்ஸர் 200 என்எஸ் பைக் வைத்திருக்கிறேன். இதில் ஏபிஎஸ் பிரேக்ஸ் பொருத்தலாமா?

- சொக்கலிங்கம் கார்த்திகேயன், சென்னை.

• 'ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ என்பதன் சுருக்கம்தான் ஏபிஎஸ் பிரேக்ஸ். சூப்பர் பைக் மற்றும் பவர்ஃபுல் பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்ஸ் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை சின்ன பைக்குகளில் அப்பாச்சி 180-ல் ஏபிஎஸ் இருக்கிறது. ஆனால், வெளியே தனியாக தரமான ஏபிஎஸ் பிரேக்ஸ் கிடைப்பதில்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏபிஎஸ் பிரேக்குகள்தான் கிடைக்கின்றன. இவை தரமானவை அல்ல. மேலும், பவர்ஃபுல் பைக்குகளுக்குத்தான் ஸ்கிட் ஆகாமல் இருக்க ஏபிஎஸ் தேவை. 220 சிசி பைக்குக்கு ஏபிஎஸ் தேவைஇல்லை. இதை சந்தையில் வாங்கிப் பொருத்தினாலும், இதற்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய்க்கு மேல் அதிகம் செலவாகும்.

மோட்டார் கிளினிக்

என் வீட்டில் புதிதாக கார் வாங்கலாம் எனத் தீர்மானித்து இருக்கிறார்கள். நான் சொல்வதுதான் இறுதி முடிவு. நான் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவையும், ஸ்கோடா ரேபிட்டையும் இறுதி செய்து வைத்திருக்கிறேன். இதே செக்மென்ட்டில், 'பெஸ்ட் செல்லர்’ எனச் சொல்லப்படும் ஹூண்டாய் வெர்னாவில் ஹேண்ட்லிங் சிறப்பாக இல்லை. ஃபியட் லீனியா, நிஸான் சன்னி போன்ற கார்களுக்கு சர்வீஸ் நெட்வொர்க் இல்லை. ஃபியஸ்ட்டா கிளாஸிக் அவுட் டேட்டட் மாடல். ஆனால் வென்ட்டோ, ரேபிட் கார்கள் ஜெர்மன் தயாரிப்பு என்பதோடு, பார்ப்பதற்கும் மிரட்டலாக இருக்கின்றன. அதனால்தான் வென்ட்டோ, ரேபிட் என்கிற முடிவுக்கு வந்தேன். ரேபிட்டில் சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதால், வென்ட்டோவைவிட அதுதான் பெஸ்ட் என்கிறார்கள். ஆனால், எனக்கு ரேபிட்டைவிடவும் ஸ்டீயரிங் கன்ட்ரோல் ஆடியோ சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்ஸார் இருப்பதால், வென்ட்டோ வாங்கலாம் எனத் தோன்றுகிறது. என்னுடைய முடிவு சரியா?

- அபிலாஷ், கரூர்

மோட்டார் கிளினிக்

• ஃபியட் மற்றும் நிஸான் கார்களுக்கு நீங்கள் சொன்ன சர்வீஸ் நெட்வொர்க் அதிகம் இல்லை என்பது ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா கார்களுக்கும் பொருந்தும். வென்ட்டோ மற்றும் ரேபிட்டுக்கு இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், வென்ட்டோவில் நீங்கள் சொல்லும் வசதிகளுக்காக கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும். மேலும், வென்டோவைவிட பில்டு குவாலிட்டி மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டத்தில் சிறப்பான கார் ஸ்கோடா ரேபிட். அதனால், நீங்கள் ஸ்கோடா ரேபிட்டைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்

ஃபோக்ஸ்வாகன் பஸாத் காருக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வரை டிஸ்கவுன்ட் இருப்பதாக மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் படித்தேன். இவ்வளவு ரூபாய் டிஸ்கவுன்ட் இருப்பதால், இந்த காரை வாங்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், காரில் வேறு ஏதும் பிரச்னை இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

மோட்டார் கிளினிக்

- நஸீர், செஞ்சி

• 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி இருப்பதற்குக் காரணம், இந்த காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதுதான். மேலும், இதன் விலை கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாயை நெருங்குகிறது. மேலும், இதன் மெயின்டனன்ஸ் செலவுகளும் அதிகம் என்பதுதான் விற்பனைச் சரிவுக்குக் காரணம். ஃபோக்ஸ்வாகன் பஸாத்தைவிட ஸ்கோடா ஆக்டேவியா சிறந்த கார். இந்த ஆண்டு இறுதியில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா விற்பனைக்கு வர இருக்கிறது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.