நீலகிரியின் ஜிலு ஜிலு காற்று, இதமான மழைச் சாரலுக்கு நடுவே, ஓர் அற்புதமான வின்டேஜ் ராலியைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு, கடந்த ஜூன் முதல் தேதி கிடைத்தது. காலச்சக்கரத்தில் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கவைத்தன ராலியில் கலந்துகொண்ட 60 கார்கள்.

நீலகிரி வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார் சங்கத்தின் ராலி, வழக்கமாக ஆண்டுதோறும் ஊட்டியில்தான் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு குன்னூருக்கு மாற்றிவிட்டனர். காரணம்? ''ஆண்டுதோறும் ராலியில் கலந்து கொள்ளும் கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. ஊட்டியிலும் சீஸன் சமயம் என்பதால், சமாளிக்க முடியவில்லை. அதனால், வெலிங்டன் ராணுவ மைதானத்துக்கு நிகழ்ச்சியை மாற்றிவிட்டோம்'' என்றனர்.

திட்டமிட்டபடி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கி குன்னூர் பஸ் நிலையம் மற்றும் வெலிங்டன் ராணுவ பகுதிகள் வழியாக, வெலிங்டன் ராணுவ கால்பந்து மைதானத்தை அடைந்தது அணிவகுப்பு. ஜனாதிபதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் மட்டுமே பயன்படுத்திய சிவப்புச் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, கறுப்பு நிற பிளைமவுத் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களுக்கு, அணிவகுப்பில் முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

அந்த கார்களைத் தொடர்ந்து டாட்ஜ், ஃபியட் செலெக்ட், ஃபியட் சூப்பர் செலெக்ட், பக் ஃபியட், ஃபியட் எலிகண்ட், பிளைமவுத், ஃபோக்ஸ்வாகன், ஆஸ்டின், ஃபோர்டு ஜீப், ஃபோர்டு பெர்ஃபெக்ட், வில்லீஸ் ஸ்டேஷன் வேகன், மோரீஸ், ஹெரால்டு, ஹில்மேன், அம்பாஸடர் என அணிவகுப்பு அசத்தலாக இருந்தது. ராயல் என்ஃபீல்டு, ஜாவா, லாம்ரெட்டா, பாபி என அந்தக் காலத்து காதல் வாகனங்களும் இந்த அணிவகுப்புக்கு அழகு சேர்த்தன.

கோடை விடுமுறை என்பதாலும், வார இறுதிநாள் என்பதாலும், சாலையில் மக்கள் கூட்டம் அள்ளியது. அவ்வப்போது வந்துபோன மழைச் சாரல் சற்று அதிகமானதைக் கண்டு செவர்லே இம்பாலாவின் கன்வெர்டிபிள் டாப், தனது எஜமானின் கட்டளையை ஏற்று தானாகவே மூடிக் கொண்டதைப் பார்க்க அத்தனை அழகு. ஒரு சிலர் கைத்தட்டி விசில் அடித்து ஆரவாரம் கூட செய்தனர். ''என்னதான் புதிது புதிதாக கார்கள் வந்தாலும், அப்ப பார்த்த மாதிரியே இப்பவும் இந்த காருக இருக்கு பாரு'' என்று நரை விழுந்த ஜோடிகள் சிலாகித்தனர்.

அணிவகுப்பு வெலிங்டன் ராணுவ கால்பந்து மைதானத்துக்கு வந்தபோது... பேண்டு வாத்தியங்கள் உயிர் பெற்று உற்சாகத்தைக் கூட்டின. அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தங்களின் அபிமான கார்களைச் சுற்றிச் சுற்றி வந்து மகிழ்ந்தனர்.

ராணுவ அதிகாரிகளோ, தங்கள் குழந்தைகள் பார்த்து வியந்த கார் மற்றும் பைக்கில் அவர்களை அமர்த்தி போட்டோ எடுத்து மகிழ்ச்சியைக் கூட்டினர்.

சிறந்த கார்களைத் தேர்ந்தெடுத்து பரிசுக் கொடுப்பதற்காக, ராணுவ கமாண்டன்ட் சுரேஷ், ஆர்.டி.ஓ ரஜினிகாந்த் ஆகியோர் வாகனத்தின் ஒரிஜினாலிட்டி, அவை பயணித்த தூரம் போன்ற விஷயங்களைத் தீவிரமாக ஆராய்ந்தனர். இதில் அனைவரது வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற செவர்லே இம்பாலா கார் முதல் இடத்தையும், செவர்லே ஃபிளிட் மாஸ்டர் இரண்டாம் இடத்தையும், டாப் இல்லாத பக் ஃபியட் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

மேலும், பாலக்காடு நவீன் கொண்டுவந்திருந்த அரிதான ஆஸ்டன் ஏ40 ஜவான் காருக்கு 'மோஸ்ட் என்துஸியாட்டிக் கார்’ என்ற கௌரவ கேடயம், ராஜேஷ் கொண்டுவந்திருந்த ஹெரால்டு காருக்கு 'ஸ்பெஷ்ல் ஹானர்’ கௌரவ கேடயம் வழங்கப்பட்டன.

இரு சக்கர வாகனத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை லாம்ரெட்டா ஸ்கூட்டர்கள் தட்டிச் சென்றன. இனி, அடுத்த ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக இந்த வாகனங்கள் காத்திருக்கும்!

தி.விஜய்