100சிசி பைக்குகளுக்கு சந்தையில் செம வரவேற்பு. ஹோண்டா, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்த செக்மென்ட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன. ஏற்கெனவே ஸ்டாலியோ என்ற பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்து கையைச் சுட்டுக் கொண்ட மஹிந்திராவுக்கு, இது மூன்றாவது முயற்சி.

சமீபத்தில் ஸ்டாலியோவை முழுவதும் மாற்றியமைத்து 'பேன்டீரோ’ என விற்பனைக்குக் கொண்டு வந்தது. பேன்டீரோவும், எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இப்போது, சென்ட்யுரோ என்ற இன்னொரு 100 சிசி பைக்கை விற்பனைக்குக் கொண்டுவருகிறது மஹிந்திரா.

டிசைன்

வெறும் டிசைனை வைத்துப் பார்க்கும்போது, மஹிந்திரா சென்ட்யுரோ சுமார் ரகம்தான். எல்இடி விளக்குகளைக்கொண்ட ஹெட்லைட் கிளஸ்டர், சரியான சைஸில் இருக்கும் பெட்ரோல் டேங்க், எல்இடி பிரேக் லைட் போன்ற சில ஸ்மார்ட்டான அம்சங்கள் இருந்தாலும், திருஷ்டி போல ஆங்காங்கே இருக்கும் சில விஷயங்கள் ஒட்டுமொத்த டிசைனையும் குலைக்கிறது. உதாரணமாக, பெட்ரோல் டேங்க்கின் கீழ் தங்க நிறத்தில் இருக்கும் இரு பைப்புகளைச் சொல்லலாம். இது, கொஞ்சம்கூட பைக்கின் மற்ற டிசைனோடு பொருந்தவில்லை.

மஹிந்திரா டிசைன் விஷயத்தில் சொதப்பினாலும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் நல்ல பெயரை வாங்குகிறது. மல்ட்டிஃபங்ஷன் ஃப்ளிப்-டு-ஓப்பன் சாவி, பெரிய டேக்கோ மீட்டர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டேங்க்கில் இருக்கும் பெட்ரோலில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்டும் டிஸ்டன்ஸ்-டு-எம்ப்டி மீட்டர், எக்னாமி இண்டிகேட்டர் போன்ற பல சமாச்சாரங்கள் 100 சிசி பைக்குகளில் புதியவை. மேலும், இதன் மல்டிஃபங்ஷன் ஃப்ளிப்-டு-ஓப்பன் சாவியில் எல்இடி டார்ச் வசதி இருக்கிறது. இதில் உள்ள பட்டனை அழுத்தினால், பைக்கின் ஹெட்லைட் ஒளிர்கிறது. இதனால், பார்க்கிங் ஏரியாவில் எளிதாக நம் பைக்கைக் கண்டுபிடித்துவிடலாம். இரவில் பைக்கை நிறுத்தி இக்னீஷனை ஆஃப் செய்தபிறகு, சிறிது ஹெட்லைட் ஒளிர்ந்து வழி காட்டும் 'ஃபாலோ-மீ-ஹோம்’ வசதி பெரிய ப்ளஸ்.

பேன்ட்டீரோவில் இருக்கும் அதே 106.7 சிசி இன்ஜின்தான் இதிலும். இது, 8.4 bhp சக்தியை 7,500 ஆர்பிஎம்-லும் 0.87 kgm டார்க்கை 5,500 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. மிட்-ரேஞ்சில் சக்தி வெளிப்பாடு சிறப்பாக இருக்கிறது. மற்றபடி ஆரம்ப வேகத்தில் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் சுமார்தான். கிளட்ச் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்த எளிதாகவும் ஸ்மூத்தாகவும் உள்ளன.

சென்ட்யுரோவில் இருப்பது ட்வின் டவுன் ட்யூப் ஃப்ரேம் மற்றும் ட்யூப்ளர் ஸ்விங் ஆர்ம். தற்போது பெரும்பாலான பைக்குகளில் பாக்ஸ் செக்ஷன் ஸ்விங் ஆர்ம் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், பழைய ட்யூப்ளர் ஸ்விங் ஆர்ம் எதற்கு? முன் பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கம் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்ஸார்பர்களும் உள்ளன.

பிரேக்குகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. முன்னும் பின்னும் இருக்கும் 130 மிமீ டிரம் பிரேக்குகள் படு சுமார்தான். ஆனால், முன் பக்கம் டிஸ்க் பிரேக்கொண்ட மாடல் விரைவில் வெளியாகும் என்று மஹிந்திரா தெரிவித்திருக்கிறது.

மஹிந்திரா சென்ட்யுரோ - தன்னிடம் இருக்கும் வசதிகளை மட்டுமே பெரிய ப்ளஸ் ஆக வைத்து களமிறங்கி இருக்கிறது. இந்த பைக்காவது மஹிந்திராவைக் காப்பாற்றுமா என்பது, விலையைப் பொறுத்துதான் இருக்கிறது!

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி