Published:Updated:

சண்டைக் கோழிகள் அல்ல; சாது புலிகள்!

CHANTICLEERS - சான்ட்டிகிளீர்ஸ்

சண்டைக் கோழிகள் அல்ல; சாது புலிகள்!

CHANTICLEERS - சான்ட்டிகிளீர்ஸ்

Published:Updated:

நா.சிபிச்சக்கரவர்த்தி  

 ##~##

சைலன்ஸர் மாற்றி காதுக்குள் கம்பிவிட்டு ஆட்டுபவர்கள்; சந்துக்குள் சால் போட்டு பீதியைக் கிளப்புபவர்கள்; கடுமையான டிராஃபிக்கில் தத்தளிக்கும் சாலையில், கோலம் போட்டு சக வாகன ஓட்டிகளை வெறுப்பேற்றுபவர்கள் என பைக் ஓட்டிகளில் திகில் கிளப்பும் பல ரகத்தினர் சென்னையில் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அதே சென்னையில்தான் பொறுப்பாக பைக் ஓட்டும் இளைஞர் குழுமங்களும் உள்ளன. சென்னையில் ஏராளமான கார், பைக் கிளப்புகள் இருக்கின்றன. அதில், சமீபத்தில் துவங்கி மிக விரைவிலேயே நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிளப்பாக உருவெடுத்து இருக்கிறது 'சேன்ட்டிகிளீர்ஸ் பைக் கிளப்’(Chanticleers). இந்த கிளப்பில் இருப்பவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். இந்த கிளப் துவங்கப்பட்டபோது, அதைப் பற்றி மோட்டார் விகடனில் ஏற்கெனவே எழுதி இருப்பது வாசகர்களுக்குத் தெரியும்.

''பாஸ், போன தடவை பார்த்ததைவிட இன்னும் நிறைய பைக் ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து இருக்காங்க. இவுங்க பல பேர் மோட்டார் விகடனின் தீவிர வாசகர்கள்தான்'' என டாப் கியரில் பேச ஆரம்பிக்கிறார், பைக் கிளப்பை ஸ்டார்ட் செய்த நவீன் ஆண்டனி.    

சண்டைக் கோழிகள் அல்ல; சாது புலிகள்!

'சும்மா விளையாட்டா ஆரம்பித்ததுதான் இது. ஃபேஸ்புக்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்ச போது நானும் என் நண்பன் செந்தில் மட்டும்தான் இருந்தோம். ஃப்ரெண்ட்ஸ், 'என்னடா, ரெண்டு பேர் கிளப் ஆரம்பிச்சு இருக்கீங்களா?’னு செமயா கிண்டல் பண்ணினாங்க. ஆனா, இப்ப நிலைமையே வேற. ரேஸ்ல கடைசியா சோலோவா பைக் ஓட்டிட்டு இருந்தவன், திடீர்னு பவர்ஃபுல்லா எல்லோரையும் தாண்டி வர்றது மாதிரி, எங்க கிளப் ஆரம்பிச்ச ஒரு வருடத்திலேயே, சென்னையில பைக் வெச்சு இருக்கிற மாணவர்களுக்கு எங்க கிளப் பத்தித் தெரிஞ்சு இருக்கு. இதுவே எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றிதான்.

சண்டைக் கோழிகள் அல்ல; சாது புலிகள்!

மாற்றம் ஒன்றுதான் மாறாததுன்னு சொல்லுவாங்க. அதுபோலதான் எங்க பைக் கிளப்புலேயும் நிறைய

சண்டைக் கோழிகள் அல்ல; சாது புலிகள்!

மாற்றங்கள் செய்து இருக்கோம். முதல்ல எங்க கிளப்ல சேரணும்னா, ஹெல்மெட், லைசென்ஸ் கட்டாயம். பிறகு, லாங் டிராவல் செய்யும்போது பைக் பக்கா கண்டிஷன்ல இருக்கணும். பைக்குல ஏதாவது சின்னப் பிரச்னை இருக்குன்னு தெரிய வந்தா, அனுமதிக்க மாட்டோம். ஏன்னா, ட்ரிப்புல இது பெரிய பிரச்னையை உருவாக்கிடும்' என்றார் நவீன்

கிளப்பின் மற்றொரு நிறுவனரான செந்தில் பேசியபோது, 'எங்க கிளப்ல சேரணும்னா நிச்சயம் ஸ்போர்ட்ஸ் பைக் இருக்கணும். காரணம்,  ஒவ்வொரு பைக்குக்கும் கிளப் இருக்கு. நாங்க புதுசா இருக்கணுமேன்னு யோசிச்சதுல இதுதான் சரியா பட்டுச்சு. ஸ்போர்ட்ஸ், பெர்ஃபாமென்ஸ் பைக்குக்கு கிளப் கிடையாது. ஒரே யூனிஃபார்மாவும் இருக்கும். ரோட்டுல போறவங்களைக் கண்டிப்பாகப் பார்க்க வைக்கும். இதுனாலதான் எங்க கிளப்பே ஹைலைட் ஆச்சு. எங்க கிளப்புக்கு விதிமுறைகள் இருக்கு. அதை கடைசி வரைக்கும் கடைப் பிடிக்கணும். ரோட்டுல ரேஸுங்கிற பேச்சே இருக்கக் கூடாது. அடிக்கடி வெளியூர் போறதால, நாங்களே ஒரு ஒழுங்குக்கு வந்துட்டோம். ட்ரிப்புல முன்னாடி போற லீடர யாரும் முந்திப் போகக் கூடாது. அப்படிப் போனா பாதியிலேயே அனுப்பி வெச்சிருவோம். சேஸ் பண்ணியோ, கையையும் காலையும் விட்டு சீன் போட்டு பைக் ஓட்டினாலும் இதுதான் தண்டனை. இதுல என்னோட ஃப்ரெண்ட், உன்னோட ஃப்ரெண்டுனு எந்தப் பாகுபாடும் கிடையாது. ஒவ்வொரு மாசத்துக்கும் ரெண்டு தடவை டூர் போவோம். அது, பெரும்பாலும் 200 கி.மீ தூரத்துக்குள்ள மட்டும்தாம் இருக்கும். ஆனா, இந்த ஈ.சி.ஆர் ரோட்டுல மட்டும் நாங்க பைக் ஓட்டுறதே கிடையாது. காரணம், லீவு நாள்ல எல்லாரும் பைக்கைத் தூக்கிக்கிட்டு அங்கதான் வர்றாங்க. நாம ஜாக்கிரதையா இருந்தாலும் ஈசிஆர்ல மத்த பைக்கர்ஸ்னால பாதுகாப்பு இல்லை. அதனாலதான் அந்தப் பக்கம் போறது இல்லை. இது, எங்களுக்கு என்ஜாய் பண்ண வேண்டிய வயசுதான் சார். ஆனா, நாங்க லிமிட்டை எப்போதுமே தாண்டுறது கிடையாது'' என்றார்.

கலக்குங்க பாய்ஸ்!